சண்­முகா சம்­பவம் : தமிழ் – முஸ்லிம் உறவை பாதிக்­க­லாகா!

0 621

வரக்­கா­மு­றையூர் ராசிக்

எந்­த­வொரு நாட்டில் இன­வாதம், மத­வாதம், மொழி­வாதம் இல்­லாமல் ஆக்­கப்­ப­டு­கி­றதோ அந்த நாடுதான் அபி­வி­ருத்தி என்ற இலக்கை விரை­வாக அடைந்­து­கொள்­கி­றது. நியூ­சி­லாந்து, கனடா, ஐக்­கிய இராச்­சியம் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்­டு­க­ளாகும். இதற்கு மாற்­ற­மாக எங்­கெல்லாம் இன­வா­தமும், பிர­தே­ச­வா­தமும் விதைக்­கப்­ப­டு­கி­றதோ அந்த நாடுகள் கல்வி ரீதி­யாவும், கலாச்­சார ரீதி­யா­கவும், பொரு­ளா­தார ரீதி­யா­கவும் பின்­ன­டை­வையே சந்­திக்கும் என்­ப­தற்கு இலங்கை போன்ற நாடு­களை ஆதா­ர­மாக காட்­டலாம்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலப்­ப­கு­தியில் காணப்­பட்ட இனங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் படிப்­ப­டி­யாக சரி­வ­டையத் தொடங்­கி­யது. நல்­லி­ணக்­கத்­து­டனும், சகோ­தர வாஞ்­சை­யு­டனும் வாழ்ந்து கொண்­டி­ருந்த பல்­லினச் சமூகம் பல்­வேறு அர­சியல், சமூக, கலா­சார கார­ணி­களால் துண்­டா­டப்­பட்­டது. இதன் விளை­வாக அபி­வி­ருத்தி என்ற இலக்கை நெருங்­கிக்­கொண்­டி­ருந்த இலங்கை மெது மெது­வாக பின்­ன­டையத் தொடங்­கி­யது. ஒரு காலத்தில் ஈழத்­திரு நாட்டை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு செயற்­பட்ட பல நாடுகள் இன்று கல்வி, கலை, கலாச்­சார, பொரு­ளா­தார ரீதி­யா­கவும் மற்றும் கைத்­தொழில் துறை­யிலும் கொடி­கட்டிப் பறக்­கின்ற நிலையில் நமது நாடு பிற நாடு­க­ளிடம் பிச்சை கேட்­கின்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்கு அடிப்­படைக் காரணம் இங்கு புரை­யோடிப் போயுள்ள இன­வா­தம்தான் என்­பதை இன்னும் பெரும் பாலானோர் புரிந்­து­கொள்­ள­வில்லை என்­ப­துதான் வேத­னைக்­கு­ரி­யது. இருந்­தாலும் இதனை உணர்ந்து கொண்ட சிலர் நாட்­டுக்குள் நல்­லி­ணக்­கத்­தையும், சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்ப அதீத முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். எனினும் இனங்­க­ளு­கி­டை­யி­லான நட்­பு­றவை பாதிக்­கின்ற சிற்­சில விட­யங்கள் அவ்­வப்­போது இடம்­பெற்று, இளைய சந்­த­தி­யி­ன­ருக்கு மத்­தியில் தவ­றான புரி­தலை ஏற்­ப­டுத்தி விடு­கி­றது. இதற்கு புத்­தி­ஜீ­வி­களும் துணை போகி­றார்கள் என்­ப­துதான் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அந்த வகையில் அண்­மையில் திரு­கோ­ண­மலை சண்­முகா மகளிர் கல்­லூ­ரியில் ஏற்­பட்ட விடயம் இன்று பேசு­பொ­ரு­ளாக ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மொழியால் ஒன்­று­பட்ட இரு சமூ­கங்கள் விட­யத்தை சரி­யாக கையா­ளாமல் அதை பூதா­க­ர­மாக்கி, சமூக ஒருங்­கி­ணைப்பை குழி­தோண்டிப் புதைப்­பதை யாராலும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. முப்­பது வருட யுத்­தத்­தாலும், அர­சியல் கார­ணங்­க­ளாலும் வெகு­வாக பாதிக்­கப்­பட்டு, உறவில் விரிசல் கண்ட தமிழ், முஸ்லிம் உற­வுகள் ஒரு­வரை ஒருவர் புரிந்து கொண்டு பய­ணிக்க எத்­த­னிக்­கின்ற சூழ்­நி­லையில் இவ்­வா­றா­ன­தொரு துர­திஷ்­ட­மான சம்­பவம் இடம் பெற்­றது பல­ரையும் துய­ரத்தில் ஆழ்த்­தி­யி­ருக்­கி­றது. இதற்குப் பின்னால் எங்­க­ளுக்­கி­டையே இது மாதி­ரி­யான பிரச்­சி­னைகள் தோற்­று­விக்­கப்­படல் கூடாது. எங்கள் இளம் சந்­த­தி­யி­ன­ரி­டையே விரோ­தமும், குரோ­தமும் விதைக்­கப்­படல் ஆகாது. உற­வு­க­ளாக நோக்­கு­கின்ற விழு­மி­யங்கள் போதிக்­கப்­பட வேண்­டுமே அல்­லாது விரோ­தி­க­ளாக பார்க்­கின்ற வஞ்­ச­கங்­களை விதைக்கக் கூடாது. அந்த வகையில் இந்த சண்­முகா சம்­ப­வத்­தினை ஆழ­மாக ஆராய்­கின்ற பொழுது பெரி­ய­வர்­களின் அல்­லது அறி­வா­ளி­களின் அச­மந்த போக்­கு­களால் ஒரு எதிர்­கால சமூ­கத்தின் மனங்­க­ளிலே நச்சு விதை தூவப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­துதான் கவ­லைக்­கு­ரிய யதார்த்தம்.

இந்த உண்­மையை புரிந்து கொண்டு இந்த சம்­ப­வத்தை நடு­நி­லை­யாக பார்க்­கின்ற ஒரு மனப்­பக்­கு­வத்தை இரு சமூ­கங்­களும் வளர்த்­துக்­கொள்ள வேண்டும் என்­பது காலத்தின் தேவை­யாகும். என்­னைப்­பொ­றுத்த வரையில் திரு­கோ­ண­மலை நகரம் என்­பது இலங்­கையின் ஏனைய நகர்ப்­புற மக்­களின் செயற்­பா­டு­களில் இருந்து சற்று வித்­தி­யா­ச­மா­னது. இது மூவின மக்­களும் இன,மத,மொழி கலா­சா­ரங்­க­ளுக்கு அப்பால் ஒற்­று­மை­யாக வாழும் ஒரு பிர­தேசம். அடுத்­தவர் கலா­சா­ரங்­க­ளையும், மத உரி­மை­க­ளையும் மதிக்­கின்ற பிர­தேசம். திரு­கோ­ண­ம­லையில் எந்­த­வொரு அரச நிறு­வ­னத்தை எடுத்­துக்­கொண்­டாலும் மூன்று இனத்­த­வரும் வேறு­பா­டுகள் இல்­லாமல் அடுத்­தவர் கலா­சா­ரத்­திற்கு மதிப்­ப­ளித்து செயற்­ப­டு­கின்ற ஒரு ஆரோக்­கி­ய­மான நிலையை அவ­தா­னிக்­கலாம்.

நான் கிழக்கு மாகாண கல்வித் திணைக்­க­ளத்­திலே கட­மை­யாற்­றிய போது இதைப் பார்த்து அனு­ப­வித்து இருக்­கிறேன். எமது திணைக்­க­ளத்தில் அதி­க­மான தமிழ் சகோ­த­ரர்­களும் ஒரு சில முஸ்­லிம்­களும், விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சிங்­கள சகோ­த­ரர்­களும் கடமை புரிந்­தனர். அப்­போது எமது காரி­யா­ல­யத்தில் காலத்­திற்கு காலம் பல்­வேறு பூஜைகள் நடக்கும். அக்­கா­லங்­களில் சாமிக்கு அல்­லது கட­வு­ளுக்கு படைத்த எந்த உண­வையும் தமிழ் சகோ­த­ரர்கள் எங்­க­ளுக்கு தர மாட்­டார்கள். சாமிக்கு படைத்த உணவை முஸ்­லிம்கள் சாப்­பிட மாட்­டார்கள் என்­பதை அவர்கள் தெரிந்தும் புரிந்தும் வைத்­தி­ருந்­தார்கள். அதே போன்று வருடா வருடம் வாணி விழா நடக்கும், ஒளி­விழா நடக்கும் அப்­போ­தெல்லாம் அவற்றை நாங்­களும் இணைந்தே நடாத்­துவோம். அதே போன்று ஒவ்­வொரு வரு­டமும் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொள்­கின்ற நோன்பு துறக்கும் இப்தார் வைபவம் நடக்கும். அதை தமிழ் சகோ­த­ரர்கள் தான் முன்­னின்று நடாத்­து­வார்கள். கல்வித் திணைக்­க­ளத்தில் மாத்­தி­ர­மன்றி திரு­கோ­ண­ம­லையில் செயற்­ப­டு­கின்ற எல்லா அரச நிறு­வ­னங்­க­ளிலும் இந்­நி­கழ்­வுகள் நடை­பெ­று­வ­துண்டு. இவற்றை அங்கு கடமை புரியும் மூவின சகோ­த­ரர்­களும் இணைந்து நடாத்தி நல்­லி­ணக்­கத்­திற்கு அத்­தி­வா­ர­மி­டுவர். இப்­ப­டிப்­பட்ட புனி­த­மான பூமியில் இவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­ப­டு­வதை சக­வாழ்வை விரும்பும் எவரும் அனு­ம­திக்­க­மாட்­டார்கள்.

அத­ன­டிப்­ப­டையில் நோக்­கு­கின்ற போது சண்­முகா கல்­லூரி என்­பது ஒரு புகழ் பூத்த பாட­சா­லை­யாகும். ஆயி­ர­மா­யிரம் பெண் புத்­தி­ஜீ­வி­களை நாட்­டுக்கு வழங்­கிய ஒரு பாட­சாலை. இந்த பாட­சா­லை­யி­லி­ருந்து நாட்­டுக்குத் தேவை­யான முன்­மா­தி­ரிகள் உரு­வாக்­கப்­படல் வேண்டும். முன்­மா­தி­ரிகள் என்­பது வெறும் படித்­த­வர்­களை சமூ­கத்­திற்கு அளிப்­ப­தல்ல. மாறாக பண்­பா­டான, ஓழுக்­க­முள்ள, அடுத்­தவர் உரி­மை­களை மதிக்­கின்ற, நல்­லி­ணக்­கத்­தோடு வாழ்­கின்ற, பக்­கு­வ­மு­டைய நற்­பி­ர­ஜை­களை நாட்­டுக்கு வழங்க வேண்டும். ஆனால் இந்த சம்­ப­வத்­தோடு தொடர்­பு­பட்ட அதிபர், ஆசி­ரி­யர்கள், பெற்­றார்கள், பழைய மாண­விகள், தற்­போது கல்வி கற்கும் மாண­வர்கள் ஆகி­யோரின் செயற்­பா­டுகள், கருத்­துக்கள் என்­ப­வற்றை அவ­தா­னிக்­கின்ற போது நல்ல தலை­வி­களின் உரு­வாக்கம் என்­பது கேள்வி குறி­யாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதி­பரை ஆசி­ரியர் தாக்­கி­ய­தா­கவும், ஆசி­ரியர் அநா­க­ரி­க­மாக நடந்து கொண்­ட­தா­கவும் அங்­க­லாய்க்­கின்ற சமூ­கங்கள் அங்கு கல்வி கற்கும் மாண­வர்­களின் மனப்­பாங்கு தொடர்­பாக கவனம் செலுத்­த­வில்லை. இரு மரங்கள் மோதிக் கொண்­ட­மைக்­காக ஒரு மலர்க்­கூட்டம் கசக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை யாரும் புரிந்­து­கொள்­ள­வில்லை. இன்று அதி­க­மாக பேசப்­ப­டு­கின்ற சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் பாட­சா­லை­க­ளி­லி­ருந்­துதான் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். ஆனால் அந்த நல்­ல­பி­மானம், மற்­ற­வர்­களின் உரி­மை­களை மதிக்­கின்ற மனோ­பாவம் அனைத்தும் இங்கு குழி தோண்டிப் புதைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பெரி­ய­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக சிறு­வர்­களை தெருவில் இறக்கி வர­லாற்றுத் தவறைச் செய்­த­வர்கள் தமது செயற்­பா­டு­களை மறு பரி­சீ­லனை செய்­து­கொள்ள வேண்டும். குறித்த அதி­பரும், ஆசி­ரி­யரும் நான்கு சுவர்­க­ளுக்குள் அடித்துக் கொண்­டாலும் பர­வா­யில்லை. சட்­டத்தின் முன்னே அதற்கு தீர்வை பெற்­றி­ருக்க முடியும். ஆனால் அதை மாண­வர்­க­ளுக்கும், சமூ­கத்­திற்கும் பரப்பி ஆயி­ர­மா­யிரம் மனங்­களில் கசப்­பு­ணர்வை விதைத்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாம் கனவு காணும் எதிர்­கால தமிழ், முஸ்லிம் உறவை இது வெகு­வாக பாதிக்கும் என்­பதை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இன்று இந்த சம்­ப­வத்­தோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் ஊட­கங்­க­ளுக்கு முன்னால் தோன்றி முன்­னுக்குப் பின் முர­ணான கருத்­துக்­களை பகிர்ந்து வரு­கின்­றனர். ஒரு பொய்யை சொல்­லி­விட்டால் அதை மூடி மறைப்­பத ற்கு ஆயிரம் பொய்­களை சொல்­லி­யாக வேண்டும் என்ற நிர்­பந்­தத்­திற்கு இவர்கள் ஆளாக்­கப்­பட்­டிருக் கிறார்கள் என்­பதை பொது மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். ஊட­கங்­களும் எதிர்­காலம் பற்­றிய எந்த கவ­லையும் இல்­லாமல் செய்­தி­களை தவ­றாக சித்­த­ரித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த இக்­கட்­டான சூழலில் சண்­முகா கல்­லூரிச் சமூ­கமும், ஏனைய தமிழ், முஸ்லிம் சகோ­த­ரர்­களும் நிலை­மை­களை மிகவும் நிதான மாகவும், சாதுர்­ய­மா­கவும் கையாள வேண்டும். குறிப்­பாக ஆசி­ரியச் சமூகம் விவே­கத்­துடன் செயற்­பட்டு இப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண விளைய வேண்டும்.

இப்­பி­ரச்­சி­னையின் வடி­வத்தை ஒப்பு நோக்­கு­கின்ற போது பொறுப்­புடன் நடக்க வேண்­டிய அதி­பரும், ஒரு ஆசி­ரி­யரும் அவ­ச­ரப்­பட்­டதன் விளைவு இரு சமூ­கங்­களை பாதித்­தி­ருக்­கி­றது. பொது­வாக குறித்த முஸ்லிம் ஆசி­ரியை கல்வி அமைச்சால் வழங்­கப்­பட்ட கடி­தத்­தின்­படி கட­மையை பொறுப்­பேற்கச் செல்­வ­தற்கு முன்னால் இரு தரப்பும் இந்த விட­யத்தை எவ்­வாறு கையாள்­வது என மூடிய அறைக்குள் பேசி இருக்­கலாம். கல்வித் திணைக்­களம் இதற்­கான ஏற்­பாட்டைச் செய்­தி­ருக்­கலாம். அதே போன்று அதிபர் அரச சுற்று நிரு­பங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து குறித்த ஆசி­ரி­ய­ருக்கு கட­மையைப் பொறுப்­பேற்க இட­ம­ளித்­தி­ருக்­கலாம். அந்த ஆசி­ரி­ய­ருக்கு கட­மையை செய்ய இட­ம­ளித்து விட்டு, கல்வி அமைச்­சோடு தொடர்பு கொண்டு அந்த ஆசி­ரி­ய­ருக்கு வேறொரு பாட­சா­லைக்கு இட­மாற்றம் பெற்­றுக்­கொ­டுக்க முயற்­சித்­தி­ருக்­கலாம். ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட மாண­விகள் கல்வி பயி­லு­கின்ற, சுமார் நூறு ஆசி­ரி­யர்கள் கற்­பிக்­கின்ற ஒரு பாட­சா­லையில் ஆசி­ரியர் ஒரு­வரின் ஆடை கலாச்­சா­ரத்­திற்கு எதி­ராக அணி­தி­ரண்­டமை ஏற்­பு­டை­ய­தல்ல. அதிலும் மாண­வி­களை தூண்டி விட்­டமை என்­பது அநா­க­ரி­க­மான செய­லா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

மேலும் குறித்த முஸ்லிம் ஆசி­ரியை மட்டும் ஏன் இந்த கல்­லூ­ரிக்கு வர வேண்டும் இட­மாற்றம் பெற்றுக் கொண்டு வேறு பாட­சா­லைக்கு சென்றால் பிரச்­சினை முடிந்து விடுமே என்று சிலர் கருத்­துக்­களை வெளி யிட்டு வரு­கின்­றனர். அந்த ஆசி­ரியர் வேறு பாட­சா­லைக்கு சென்றால் சண்­மு­காவின் பிரச்­சினை தீர்ந்து விடும். ஆனால் நாட்டின் ஏனைய பகு­தி­களில் தமிழ் பாட­சா­லை­களில் முஸ்லிம் ஆசி­ரி­யை­களும், முஸ்லிம் பாட­சா­லை­களில் தமிழ் ஆசி­ரி­யை­களும் கட­மை­யாற்­று­கி­றார்கள். ஒவ்­வொரு தமிழ் பாட­சாலை நிர்­வா­கமும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஹபாயா அணிந்து வரக் கூடாது என்றும், ஒவ்­வொரு முஸ்லிம் பாட­சாலை நிர்­வா­கமும் தமிழ் ஆசி­ரி­யைகள் பொட்டு வைத்து வரக் கூடாது என்றும் போராட்டம் நடாத்­தினால் என்ன செய்­வது..? நாம் எடுக்­கின்ற ஒரு சிறு தவ­றான தீர்­மானம் இரு சமூ­கங்­க­ளி­னதும் கல்விக் கண்­களை குரு­டாக்கி விடும் என்­பதை இரு தரப்­பி­னரும் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இன்று மலை­யகப் பிர­தே­சங்­களை எடுத்­துக்­கொண்டால் எந்த வித­மான வேறு­பா­டு­களும் இல்­லாமல் தமிழ் ஆசி­ரி­யர்கள் முஸ்லிம் மாண­வர்­களின் அறிவுக் கண்­க­ளையும்,முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் தமிழ் மாண­வர்­களின் அறிவுக் கண்­க­ளையும் திறந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இது மாத்­தி­ர­மன்றி போக்­கு­வ­ரத்து வச­திகள் அற்ற, அதிக கஷ்ட பிர­தே­ச­மான தோட்­டப்­புற தமிழ் பாட­சா­லை­களில் இன, மத வேறு­பா­டின்றி மொழியால் ஒன்­று­பட்ட சமூகம் என்ற வகையில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் பணி­யாற்றி வரு­கின்­றனர். அதே போன்று தொண்டு தொட்டு யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வருகைத் தந்து நிறைய முஸ்லிம் பாட­சா­லை­களில் தமிழ் ஆசி­ரி­யர்கள் திறம்­பட கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்­நி­லையில் ஒரு பாட­சா­லையின் தேவைக்காய் இரு சமூ­கங்­களின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கும் எந்த செயற்­பா­டு­க­ளையும் அனு­ம­திக்கக் கூடாது.

தற்­போது தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் மிகவும் இக்­கட்­டான சூழலில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. நாங்கள் போரா­டித்தான் உரி­மை­களைப் பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. தமிழ் இனத்தின் உரி­மைகள் மறுக்­கப்­பட்­டதன் விளை­வுதான் முப்­பது வருட யுத்தம். இந்தக் கொடிய யுத்­தத்­தி­லி­ருந்­தா­வது நாம் பாடம் படிக்­க­வில்­லையா?

எங்­களைச் சுற்றி நிறைய சவால்கள் இருக்­கின்­றன. இவற்றை வெற்றி கொள்­வ­தற்கு இணைந்து செயற்­பட வேண்­டி­யதன் அவ­சியம் உண­ரப்­பட்­டி­ருக்­கி­றது. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பாக பேசப்­ப­டு­கி­றது. இவை­யெல்லாம் சாத்­தி­ய­மாக வேண்­டு­மானால் ஒரு­வ­ரை­யொ­ருவர் நம்ப வேண்டும். அதற்­கி­சை­வான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். குறிப்­பாக எங்கள் பாட­சா­லை­க­ளி­னூ­டாக நல்ல விழு­மி­யங்கள் கட்­டி­யெ­ழுப்­பப்­படல் வேண்டும். சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் தொடர்­பாக மாண­வர்­க­ளுக்கு தெளிவூட்டப்­படல் வேண்டும். சிறு­பான்­மை­யான நாங்கள் ஒரு­வ­ருக்­குள்ள உரி­மை­களை மற்­றவர் மதிக்­கா­விட்டால் பேரினச் சமூகம் எம்மை மிதித்­து­விடும் என்­பதை உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

நாட்டின் எந்த பிர­தே­சத்­தி­லா­வது சண்­முகா சம்­பவம் போன்­ற­தொரு சம்­பவம் ஏற்­பட்டால் தயவு செய்து நிதா­ன­மாக செயற்­ப­டுங்கள். மாணவச் செல்­வங்­களைத் தூண்டி, அவர்­களின் மனங்­களில் இனவாதத்தை விதைத்து எதிர்காலத்தை இருள் மயமாக்கும் வரலாற்றுத் தவறைச் செய்து விடாதீர்கள். தற்போது நாட்டில் மாணவர்களின் எத்தனையோ உரிமைகள் சூறையாடப்பட்டிருக்கிறது. அவர்களின் கல்வி கற்கும் உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ பெண் பிள்ளைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பெண் பிள்ளைகளின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தங்களுக்கு இழைக்கப்படும் வன்­கொ­டு­மை­களை வெளியில் சொல்ல முடி­யாமல் அவர்கள் தவித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். எத்­த­னை­யெத்­த­னையோ பெண் மாண­விகள் கசக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். போதை வியா­பா­ரிகள் பாட­சாலை வாயிலில் காத்­தி­ருந்து மாண­வர்­களின் இரத்தம் குடிக்­கி­றார்கள். இவற்­றுக்­கெ­தி­ராக அணி திர­ளுங்கள். போராட்டம் நடாத்­துங்கள். மாணவச் செல்­வங்­களை பாது­கா­ருங்கள். இதற்கு மாற்­ற­மாக இனங்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை விதைக்க மாண­வர்­களை பயன்­ப­டுத்­தா­தீர்கள்.

எனவே இப்­ப­டி­யொரு பிரச்­சினை இனி எந்­த­வொரு பிர­தே­சத்­திலும் ஏற்­படக் கூடாது. எங்­க­ளையும் மீறி அவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­பட்டால் வேலியே பயிரை மேய்­வது போல் நடந்து கொள்­ளாமல் நன்­றாக சிந்­தித்து செயற்­பட்டு சமூ­கங்­களை பாது­காத்­து­கொள்ள வேண்டும். பல்­லின கலாச்­சா­ரத்தை பின்­பற்­று­கின்ற மக்கள் வாழு­கின்ற இந்­நாட்டில் தமக்­கு­ரிய தனித்­து­வ­மான கலாச்­சா­ரங்­களை பின்­பற்­று­கின்ற அதே வேளை அடுத்­த­வர்­களின் கலாச்­சார உரிமைகளை மதிக்கின்ற விழுமியங்களோடு வாழ்ந்து நல்லதொரு இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.