மாற்றுவழியின்றி தடுமாறும் ராஜபக்ஷாக்கள்

0 599

மூலம்: திசரணி குணசேகர 

தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்

அமெ­ரிக்­காவில் விடு­மு­றையை கழித்­து­விட்டு நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­பக்ச மீண்டும் இலங்­கைக்கு வந்த விதம் கேட்ட வரத்தை வாரி வழங்கும் கற்­பக தருவின் பாணி­யி­லாகும். 2022 இன் முத­லா­வது அமைச்­ச­ரவை கூட்­டத்தில் அவர் முன்­வைத்த கபினட் பத்­திரம் ஒரு (தன்­சல) தான சாலையை ஒத்­த­தாகும். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் சமுர்த்தி உதவி பெறுவோர் இரா­ணு­வத்­தினர் போன்ற தீர்க்­க­மான சமூகப் பிரி­வி­ன­ருக்கு விசேட கொடுப்­ப­ன­வு­களும் பொது­வாக மக்­க­ளுக்­கான சலு­கை­களும் அந்தப் பத்­தி­ரத்தில் அடங்­கி­யி­ருந்­தன.

அர­சி­யல்­வா­திகள் (மற்­ற­வர்­க­ளது பணத்தில்) வாரி வழங்­கு­வது தேர்­த­லொன்று நெருங்கும் போதாகும். ராஜ­பக்ச குடும்­பத்­தி­னரின் வள்ளல் தன்­மையின் பின்­னணி 2022 ஒரு தேர்தல் வருடம் என்று எதிர்வு கூறு­கின்­றதா?

மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எவ்­வ­ள­வுதான் பெரு­மை­ய­டித்த போதிலும் இந்த நாட்டின் வெளி­நாட்டுச் செலா­வணிப் பிரச்­சி­னைக்கு இது­வரை எவ்­வித தீர்வும் கிடைத்­த­தாக இல்லை. சீனா­வி­லி­ருந்து எமக்கு கிடைத்­தது டொலர் அல்ல யூஆன் ஆகும். அவற்றில் ஒரு பகு­தியை சீனா­விடம் இருந்து இறக்­கு­மதி செய்யும் பொருட்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தலாம், ஆயினும் நாட்­டையே உலுக்கிக் கொண்­டி­ருக்கும் துறை­மு­கத்தில் காத்­தி­ருக்கும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ள­டங்­கிய கொள்­க­லன்­களை விடு­வித்து பொருட் பற்­றாக்­கு­றை­யையும் டொலர் பிரச்­சி­னை­யையும் போக்க எவ்­வித வழியும் அதனால் கிடைக்­க­வில்லை.

இந்­தி­யா­விடம் எப்­ப­டி­யா­வது கடனை பெற்றுக் கொள்­வது ராஜ­பக்ச ஆட்­சிக்கு முக்­கி­யத்­து­வ­மா­ன­தாக இருப்­ப­தற்­கான காரணம் இதுவே. இதற்குப் பக­ர­மாக திரு­கோ­ண­ம­லையில் உள்ள எண்ணெய் தாங்­கி­களை இந்­தி­யா­வுக்கு வழங்­கப்­பட உள்ள விடயம் அர­சியல் பரப்பில் ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் மட்­டு­மா­வது மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வது இந்­தி­யாவின் மற்­று­மொரு கோரிக்­கை­யாக இருந்­தி­ருக்­கலாம். மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­மாறு இந்­தியா இதற்கு முன்­னரும் பல தட­வைகள் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்­துள்­ளது. சீனாவின் நட்பு பலத்தில் கர்வம் கொண்­டி­ருந்த இலங்கை அந்தக் கோரிக்­கை­க­ளுக்கு பெரிய அளவில் இது­வரை செவி சாய்க்­க­வில்லை.

ஆனால் இன்று நிலைமை மாறி­விட்­டது. இந்­தி­யாவின் உதவி கிடைக்­கா­விட்டால் ஜன­வரி இறு­தி­யாகும் போது இலங்­கையின் சென்­மதி நிலுவை இருப்பு அடி­மட்­டத்தை தொட்­டு­விடும் ஆபத்தில் உள்­ளது. இந்­நி­லையில் மாகாண சபைத்­தேர்­தலை அவ­ச­ர­மாக நடத்தும் நிலைக்கு இலங்கை தவிர்க்க முடி­யாதபடி தள்ளப்பட்­டி­ருப்­ப­தா­கவே தெரி­கி­றது. 2022இன் முத­லா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வுகள் அர­சாங்க சம்­பளம் பெறு­வோரின் உள்­ளங்­களை மகிழ வைத்­ததன் இர­க­சியம் அடுத்­து­வரும் மாகா­ண­சபைத் தேர்தல் தான் என்று அனு­மா­னிப்­பது யதார்த்­த­மா­னதே.

சிங்­களப் பெரும்­பான்மை கொண்ட ஒரு சில மாகாண சபை­க­ளி­லேனும் பெரும்­பான்மை பெற்று ஆட்­சி­ய­மைப்­பது ராஜ­பக்­சாக்­களின் நோக்­க­மாக இருப்­பது தெரி­கி­றது. எதிர்க்­கட்­சிகள் மிகக் குறைந்­த­பட்ச ஒரு­மைப்­பாட்­டுக்குத் தானும் வர முடி­யாத அள­வுக்கு பிளவு பட்­டுள்ள நிலையில் இந்த இலக்கை அடை­வது சாத்­தி­ய­மாகும் என்­பது ராஜ­பக்­ச­ாக்களின் இலக்­கா­க­வுள்­ளது. சலுகைப் பொதி வழங்­கப்­பட்­டமை இந்த நோக்­கத்தை மேலும் வலி­யு­றுத்தும் வகையில் அமைந்­துள்­ளது.

நாட்டின் நாலா­பு­றத்­திலும் ராஜ­பக்ச அர­சாங்­கத்­திற்குப் பலத்த எதிர்ப்பு காணப்­ப­டு­கின்­றது. இந்த எதிர்ப்பு ராஜ­பக்ச குடும்பம் பொது­ஜன ஐக்­கிய முன்­னணிக் கட்சிக் கூட்­ட­ணிக்­குள்ளும் கசிந்­துள்­ளது. பிர­தேச சபை­களில் பொது­ஜன ஐக்­கிய முன்­னணி வரவு செலவுத் திட்­டங்­களில் தோல்­வி­ய­டை­வது ஒரு பொதுக்­கா­ர­ணி­யா­க­வுள்­ளது.

கடந்த இரண்டு வாரங்­களில் இத்­த­கைய வரவு செல­வுத்­திட்டத் தோல்­விகள் ஜாஎல நக­ர­சபை, இரத்­தி­ன­புரி பிர­தே­ச­சபை, மாவ­னல்லை பிர­தே­ச­சபை, லிந்­துல நக­ர­சபை (இரண்­டா­வது தட­வை­யாக) என்­ற­வாறு பர­வ­ல­டைந்­தது. சுசில் பிரேம ஜயந்த இரா­ஜாங்க அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை உள்­ளக குழப்­பத்தின் முக்­கிய எதி­ரொ­லி­யாகும்.

ஆயினும் இந்த எதிர்ப்­புகள் எதிர்க்­கட்­சியின் வாக்கு வங்­கியை அதி­க­ரிக்கும் அள­வுக்கு விரி­வ­டை­யுமா என்­பது தெரி­யாது. அப்­ப­டி­யொரு மாற்றம் தானாக நிகழ முடி­யாது. அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் குறித்து விரக்­தியும் கோபமும் அடைந்­துள்ள வாக்­கா­ளர்­களை தம் பக்கம் இழுத்துக் கொள்ளும் வகை­யி­லான ஒரு தெளி­வான வேலைத்­திட்டம் எதிர்க்­கட்­சிக்கு இருக்க வேண்டும். அவ்­வா­றின்றேல் ரா­ஜ­பக்­சாக்­க­ளி­ட­மி­ருந்து சரியும் வாக்­குகள் ஏனைய கட்­சி­க­ளுக்கு போவதை விடுத்து “எவ­ருக்கும் வாக்­க­ளிக்­காத” வகைக்குள் சென்றுவிடும்.

2022இல் மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்­டி­யேற்­பட்டால் அதை எப்­ப­டி­யா­வது வெற்­றி­பெ­று­வது ரா­ஜ­பக்­சாக்­களின் பிர­தான நோக்­க­மாக அமையும். இதற்­காக அவர்கள் எடுக்கும் நட­வ­டிக்­கை­களின் பெறு­பேற்றை 2022இல் கண்­டு­கொள்ள முடியும்.
சிறு பிள்­ளைகள் சவர்க்­கார நுரையை ஊதி குமிழ்­களை உரு­வாக்கி மகிழ்­வது போன்று ராஜ­பக்­ச­வினர் பல்­வேறு பட்டம் பத­வி­களின் மீது அபார ஆசை கொண்­டுள்­ளனர். ஆட்­சி­யா­ளர்­களின் அதிர்ஷ்டம் அத்­த­கைய பதவி பட்­டங்­களை உரு­வாக்­கு­வதில் அபார திற­மையும் கொண்­ட­வர்­க­ளாக பிக்­கு­மார்கள் காணப்­ப­டு­கின்­றனர். மஹிந்த ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் போது அத்­த­கைய பட்­டங்­களை வழங்­கு­வ­தற்கு பல பிரி­வினர் முன்­வந்­தனர். த்ரி சிங்­க­ளா­தி­பதி என்று பட்டம் வழங்­கினர். சர்­வ­தே­சத்தை வென்ற பெருந் தலைவர் என்று போற்­றினர். சூரிய­னாக சந்­தி­ர­னாக வர்­ணித்­தனர்.

இப்­போது கோத்­த­ாபய ராஜ­பக்­சவின் யுகம். கோட்டை கல்­யாணி சமாதி தர்ம மகா சங்க சபை­யினர் அவ­ருக்கு ஸ்ரீலங்­கா­தீஸ்­வர பத்ம விபூ­ஷண என்ற பட்­டத்தை வழங்­கி­யுள்­ளனர். முக்­கிய விடயம் அப்­பட்­டத்தை ஏற்று அவர் ஆற்­றிய உரை­யாகும். என்னை இந்த நாட்டின் முதற் குடி­ம­க­னாக்க அர்ப்­ப­ணங்­களை மேற்­கொண்ட சிங்­கள பௌத்­தர்­களின் அந்த மர­பு­ரி­மையை பாது­காப்­பது எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள மகத்­தான பொறுப்பு என கண்­டிப்­பாக நம்­பு­கின்றேன் என்று கூறினார்.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தொங்­கு­வ­தற்கு கயி­றுகள் இல்­லாமல் போகும்­போது எஞ்சி நிற்­பது நாடு, இனம், மதம் என்­ப­வையே. அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் Bl­a­ck Liv­es Ma­t­t­er ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதிர்­வி­ளைவை காட்டும் வகையில் வெள்ளை மாளி­கைக்கு அண்­மையில் உள்ள ஒரு மாதா கோயி­லுக்குச் சென்று பைபலை (தலை­கீ­ழாக) தூக்கிப் பிடித்துக் காட்­டினார். தேர்­தல்கள் நெருங்கும் போது நரேந்­திர மோடி முஸ்லிம் விரோத, பாகிஸ்தான் விரோத கோஷங்­களை முன்­னெ­டுப்பார். துருக்­கியின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டையும் அள­வுக்கு அர்­து­கானின் இஸ்­லா­மிய பக்தி அதி­க­ரிக்­கி­றது.
2022 ஒரு தேர்தல் ஆண்­டாயின் அந்தச் சவாலை எதிர்­கொள்ள சிங்­களக் கொடி­யையும் பௌத்த கொடி­யையும் தூக்கிப் பிடிக்கும் வாய்ப்பு உள்­ளதை கோத்­தா­ப­யவின் பேச்சு உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.

ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கும் மதத்­த­வர்­க­ளுக்கும் எச்­ச­ரிக்கை விடுப்­ப­துடன் நின்­று­வி­டாது பிக்­கு­மார்­களின் கைகால்­களை உடைப்­ப­தாக பய­மு­றுத்­திய கல­கொட அத்தே ஞான­சார தேரரை நாட்டின் சட்­டத்தை மாற்­று­வ­தற்கு தலைமைப் பொறுப்பில் நிய­மித்­தமை சிங்­கள பௌத்த மர­பு­ரி­மையைப் பாது­காப்­பதன் ஒரு பகு­தியா என்று கேட்கத் தோன்­று­கின்­றது. அமைச்சர் பசில் ராஜ­பக்ச பாரி­வள்ளல் போல செயற்­ப­டும்­போது கோத்தாபய துட்­ட­கை­மு­னுவின் வகி­பா­கத்தை ஏற்­றி­ருப்­ப­தாக அவ­ரது பேச்­சி­லி­ருந்து தெரி­கி­றது. மாற்று முக­வ­ராக ஞான­சார தேரர் போன்­றோரைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்கள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மீண்டும் ஒரு தீச்­சு­வா­லையை ஏற்றி சிங்­கள பௌத்­தர்­களின் கவ­னத்தை ஈர்க்கச் செய்­வது அரச குடும்­பத்தின் நோக்­க­மாக இருக்­கலாம்.

சலு­கைகள் மூலம் ‘நாட்­டுப்­பற்று’ நாடகம் மூலம் உரிய பெறு­பேறு கிடைக்­கா­த­போது வன்­மு­றைகள் கையா­ளப்­ப­டலாம். மிரி­ஹா­னையில் பால்மா வாங்க வரி­சையில் இருந்­த­வர்கள் மீதான நட­வ­டிக்கை இதற்கு உதா­ர­ண­மாகும். முக்­கி­ய­மான விடயம் பால்மா வாங்க வரி­சையில் காத்­தி­ருந்த சிலர் ஜனா­தி­ப­திக்கு கூக்­குரல் இட்­டார்கள் என்­ப­தல்ல பொலி­சாரின் நட­வ­டிக்கை யாகும். மக்கள் ஏன் நீண்ட வரி­சையில் காத்­தி­ருக்­கின்­றனர் என்­பதைத் தேடிப் பார்க்கும் படி ஜனா­தி­பதி இட்ட கட்­ட­ளையின் படி பொலிஸார் ஜுப்லி மைற்கல் அரு­கே­யுள்ள கடைக்குச் செல்­கின்­றனர். உண்­மையில் ஜனா­தி­பதி இந்­நாட்டில் தானா இருக்­கிறார்? கடந்த சில மாதங்­க­ளாக இந்த நாட்டில் பொருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு இருப்­பதும் மக்கள் நீண்ட வரி­சையில் காத்­தி­ருப்­பதும் இந்த நாட்டு ஜனா­தி­ப­திக்கு இது­வரை தெரி­யாதா? பொலி­ஸாரை அனுப்பி விசா­ரித்து தான் அறிய வேண்­டுமா அப்­படித் தெரி­யா­விட்டால் அதி­லி­ருந்து எழும் துணை வினாக்கள் எவை?

நாட்டில் சமையல் எரி­வாயுத் தட்­டுப்­பாடு இருப்­பதும் சில இடங்­களில் எரி­வாயு லொறி வந்து நின்­ற­வுடன் அதி­லி­ருந்து சில சிலிண்­டர்கள் திரு­டப்­பட்­டதும் பல இடங்­களில் நடை­பெற்­றன சில இடங்­களில் பொலிஸ் பாது­காப்­புடன் சிலிண்டர் விநி­யோகம் நடந்­ததும் அவ­ருக்குத் தெரி­யாதா?

சீமெந்துத் தட்­டுப்­பாடு பற்றி, அரி­சி­ விலையேற்றம் பற்றி, நாளாந்தம் உக்­கி­ர­ம­டையும் உணவுத் தட்­டுப்­பாடு பற்றி அவ­ருக்கு உண்­மையில் தெரி­யாதா? கியூ வரி­சையில் இருப்­ப­தற்­காக காரி­யா­ல­யங்­களில் லீவு கோரும் உத்­தி­யோ­கத்­தர்கள் பற்­றிய செய்தி அவரை எட்­ட­வில்­லையா? அப்­படி எட்­டாமல் யாரா­வது தடுத்­தார்­களா? பால்மா தட்­டுப்­பா­டுக்­கான ஒரு காரணம் வர்த்­தக நிலை­யங்­களில் விநி­யோ­கத்தில் உள்ள தாமதம் என்று கண்­ட­றி­யப்­பட்­ட­மையும் பெல­வத்த பால்மா முகவர் நிலை­யங்­களை அதி­க­ரிக்க பொலிசார் சிபா­ரிசு செய்­த­மையும் அறி­ய­மு­டிந்­தது. சரி! அவ்­வா­றாயின் இப்­போது பால்மா தட்­டுப்­பாடு நீங்கி விட்­டதா? இப்­போது கியூவில் நிற்­பது தேசத்­து­ரோ­கிகள் அரசை கவிழ்க்க சதி செய்யும் கிளர்ச்­சி­யா­ளர்­கள். ஆகவே அவர்­களை எப்­படிக் கவ­னிக்க வேண்டும் என்­பது பொலி­சா­ருக்குத் தெரி­யாதா?

பால்மா கியூ வரிசை பற்றி தனது முக­நூலில் பகிர்ந்து கொண்ட தில்­ருக்ஷி பெரேரா என்ற பெண்ணை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைக்­காக அழைத்து ஜனா­தி­ப­தியை அவ­ம­தித்­த­தாக குற்றம் சாட்­டி­யுள்­ளனர். ஜனா­தி­ப­தியை அவ­திப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அறி­வித்தார்.

ஜனா­தி­ப­திக்கு அவ­தூறு ஏற்­படும் வகையில் சமூக ஊட­கங்­களில் எழுதும் அனை­வ­ருக்கும் எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தானால் இந்த நாட்டின் பொலிஸ் படை அதற்கு போதி­ய­தாக இருக்­காது, இவ்­வாறு செய்ய பொலி­சா­ருக்கு எந்த அதி­கா­ரமும் கிடை­யாது என ‘வாஹல தந்­திரி’ என்­பவர் தொடர்­பான வழக்கின் தீர்ப்பை ஆதாரம் காட்டி சட்­டத்­த­ரணி திஸ்ஸ வேர­கொட அறிக்கை விடுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

உத்­தி­யோகபூர்வ தடைகள் முடி­யாதவிடத்து வேறு வகை­களைக் கையாளும் முறை இப்­போதே வடக்கு கிழக்கில் அரங்­கேற்­றப்­ப­டு­கி­றது. ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமூக ஆர்­வ­லர்கள் தாக்­கப்­ப­டு­வது சரா­சரி நிகழ்ச்­சி­யாக மாறி­யுள்­ளது. கடந்த நவம்பர் 29ஆம் திகதி விஸ்­வ­லிங்கம் விஸ்வச் சந்­திரன் முள்­ளி­வாய்க்கால் பெயர் பல­கையைப் புகைப்­படம் எடுக்­கும்­போது இரா­ணு­வத்­தி­னரால் தாக்­கப்­பட்டார். இந்­திய வற்­பு­றுத்­தலின் படி­யேனும் மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்டி ஏற்­பட்டால் சட்­டத்­தி­னாலும் அதற்­கப்­பாலும் தேவை­யா­னதை செய்ய ராஜ­பக்ச நிர்­வாகம் தயங்­காது என்­பது இப்­போது தெரி­ய­வந்­துள்­ளது. பிரச்­சினை என்­ன­வென்றால் இவ்­வ­ளவும் நடந்தும் இந்தச் சவாலை எதிர்­கொள்ள எதிர்க்­கட்சி ஆயத்­தமா? என்­ப­தாகும்.

மாற்று வழி என்­பது தனி நபரோ குழுவோ அல்ல, வேலைத் திட்­டமே.
ராஜ­பக்­சாக்­களை வழி­படும் அடி­வ­ருடிக் கூட்­டத்தை விட்டால் மற்­ற­வர்­களின் ஏகோ­பித்த முடி­வாக இருப்­பது இந்த அர­சாங்கம் (Fail) தோல்வி என்­ப­தாகும். எதிர்க்­கட்சி என்ன செய்­கி­றது என்­பதும் மக்­களின் ஆச்­ச­ரி­ய­மான கேள்­வி­யாக உள்­ளது.

இந்தப் பிரச்­சி­னை­களின் மூல­கா­ரணம் 2019 இல் ராஜ­பக்ச குடும்ப ஆட்சி மேற்­கொண்ட வரிக் கொள்­கை­யாகும். வரி செலுத்­து­வோரின் எண்­ணிக்கை வெகு­வாக குறைக்­கப்­பட்டு அர­சாங்க வரி வரு­மானம் குறைய இது கார­ண­மாக அமைந்­தது. பொது­மக்­க­ளுக்கு இதனால் எவ்­வித நன்­மையும் கிடைக்­க­வில்லை. சில வர்த்­தக நண்­பர்­களைத் திருப்திப்படுத்­து­வதே அரசின் நோக்­க­மாக இருந்­தது.

இது­பற்றி எதிர்க்­கட்­சிக்கு ஒரு தெளி­வான போக்கு, ஒரு நோக்கு இருந்­தி­ருக்க வேண்டும். அது­பற்றி பொது மக்­களை விழிப்­ப­டையச் செய்ய வேண்டும். வெற்றுக் கோசங்கள் வாய்­வீச்சு விமர்­ச­னங்கள் கவர்ச்­சி­யான வாக்­கு­று­திகள் மட்­டுமே எதிர்க்­கட்­சியின் உத்­தி­யாக இருப்பின் ராஜ­பக்­சாக்­க­ளி­ட­மி­ருந்து சரியும் வாக்­குகள் இவர்­க­ளுக்கு வந்து சேர வாய்ப்­பில்லை. சில­போது காவி­யுடைத் தீவி­ர­வா­தி­க­ளிடம் நாடு முழு­மை­யாக சிக்கும் ஆபத்துக் கூட உண்டு.

பசில் ராஜ­பக்­சவின் சலுகைப் பொதியை வழங்க அரசாங்கத்திடம் பணம் உள்ளதா என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. ஏனென்றால் பணம் அச்சிடும் யந்திரம் அவர்கள் கைவசமுள்ளது. இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தமைக்கான அடுத்த பிரதான காரணம் கட்டுக்கடங்காத அளவுக்கு பணம் அச்சிடப்பட்டமையே. இன்றைய பிரச்சினையில் இருந்து வெளிவர அரசாங்கச் செலவுகளைக் குறைப்பது என்ற விடயம் முக்கிய இடத்தைப் பெற வேண்டும். பொருத்தமற்ற விதத்தில் உள்ள பாதுகாப்புச் செலவு குறைக்கப்பட வேண்டும். அதனைப் பகிரங்கமாக கூறும் பலம் அல்லது அரசியல் ஞானம் எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

இவை தொடர்பாக பரந்த கலந்துரையாடல்கள் சமூகத்தின் பல மட்டங்களிலும் நடைபெற வேண்டும் அதனை எதிர்க்கட்சி வழிநடத்த வேண்டும். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க முன்னர் இந்தப் பொருளாதார வீழ்ச்சி என்னும் படுகுழியில் இருந்து மீளும் வழி பற்றிச் சிந்திக்க வேண்டும்.
நாம் இதுவரை செய்தது தலைவனைத் தெரிவு செய்து அவரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதாகும். ஆனால் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ராஜபக்சாக்களுக்கு அந்த மாற்று வழி தெரியவில்லை. அவர்களால் முடியவில்லை. அடுத்தது சஜித், ரணில், அனுர என்று தனிமனிதர்களைச் சுற்றிச் சிந்திப்பதைவிடுத்து விழுந்த அதளபாதாளத்தில் இருந்து கரையேறும் வழி வகைகள் பற்றியும் அதற்கான வேலைத்திட்டம் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.