காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் உறுப்பினராக சிராஸ் நூர்தீன் நியமனம்

0 387

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காணாமல் ஆக்­கப்­பட்டோர் அலு­வ­ல­கத்தின் உறுப்­பி­னர்கள் மூவரில் ஒரு­வ­ராக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­ய­ம­னத்­திற்கு பாரா­ளு­மன்ற பேரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. நிய­மனம் 2021 டிசம்பர் 13 ஆம் திக­தி­யி­லி­ருந்து மூன்று வருட காலத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து அவற்­றினை முடி­வு­றுத்­து­வ­தற்கும், பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­க­ளுக்கு நஷ்ட ஈடு பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் உரிய நட­வ­டிக்­ககைள் மேற்­கொள்­ளப்­ப­டு­மென சிராஸ் நூர்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

1993 ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யாக பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்ட சிராஸ் நூர்தீன் கடந்த காலங்­களில் பல்­வேறு பத­வி­களை வகித்­துள்ளார். அரச ஹஜ் குழு, வக்பு சபை என்­ப­ன­வற்றின் உறுப்­பி­ன­ராக செயற்­பட்­டுள்ளார். மற்றும் 2015 முதல் சமூக சேவையில் அதிக ஈடு­பா­டு­கொண்ட இவர் இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக 124 முறைப்­பா­டு­களை நீதி­மன்­றங்­களில் ஏனையோர் மூலம் தாக்­கல் செய்­த­வற்கு முன்­னின்று செயற்­பட்டார். கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் ஸ்தாபக செய­லா­ள­ரான இவர் 4 வருட காலம் செய­லாளர் பத­வியை வகித்­துள்ளார். முஸ்லிம் சமூகம் சார் பல்­வேறு வழக்­கு­களில் இவர் ஆஜ­ராகி செயற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவற்றில் மியன்மார் அக­திகள் விவ­காரம், டாக்டர் ஷாபி விவ­காரம், தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 11 பட்­ட­தாரி மாண­வர்கள் கெப்­பித்தி கொல்­லா­வயில் தொல்­பொருள் சின்­ன­மான தூபி மீதே­றிய சம்­பவம், பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல், ஹுணுப்­பிட்டி மற்றும் திப்­பிட்­டி­கொட பள்­ளி­வாசல் விவ­கார வழக்­கு­களில் அவர் ஆஜ­ரா­கி­யுள்ளார்.

பேரு­வளை – அளுத்­கம வன்­செ­யல்­க­ளின்­போது முஸ்­லிம்கள் இருவர் கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பான வழக்­கிலும் சிராஸ் நூர்தீன் ஆஜ­ரானார். புதுக்­கடை நீதி­மன்றில் நடை­பெற்ற ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்­கிலும் ஆஜ­ரானார். அத்­தோடு கண்டி- திகன வன்­மு­றை­களின் போது இன­வா­தி­களால் பஸ்­வண்­டியில் வைத்து தாக்­கப்­பட்டு பலியான ஸதகதுல்லா மெளலவியின் வழக்கிலும் இவர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் படி 16ஆயிரம் பேரும் ICRC யின் அறிக்கையின்படி 5000 படையினரும் காணாமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.