காதி நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாமையால் மக்களுக்கு சிரமம்

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம்

0 287

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
25 காதி நீதி­மன்ற நிர்­வாகப் பிரி­வு­களின் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­தாக காதி நீதி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்கு நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டும் அது தொடர்பில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­ததால் பொது­மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர் கொண்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் உப­த­லைவர் இப்ஹாம் யெஹ்யா, இவ்­வி­வ­காரம் தொடர்பில் உட­ன­டி­யாக கவனம் செலுத்­து­மாறு நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் சஞ்­சீவ சோம­சிங்­கவை கடிதம் மூலம் கோரி­யுள்ளார்.

இது தொடர்பில் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு அவர் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது. “ நாட்டில் இயங்­கி­வரும் 65 காதி­நீதி மன்­றங்­களில் கட­மை­யாற்றும் காதி­நீ­தி­ப­தி­களில் 46 பேரின் பத­விக்­காலம் இம்­மாதம் இறு­தி­யுடன் கால­வ­தி­யா­கி­றது (2021.12.31) இவற்றில் 25காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு புதிய நிய­மனம் வழங்­கு­வ­தற்­காக வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு பல­மா­தங்கள் கடந்­து­விட்ட நிலையில் நிய­ம­னத்­துக்­கான நேர்­முகப் பரீட்சை இது­வரை நடத்­தப்­ப­ட­வில்லை.

மேலும் 13 காதி நீதி­ப­திகள் இரா­ஜி­னாமா, பத­வி­வி­லகல், இறப்பு கார­ண­மாக வெற்­றி­டங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இவ்­வி­டங்­க­ளுக்கு அப்­பி­ரி­வு­க­ளுக்கு அண்­மித்த பகு­தியில் உள்ள காதி­நீ­தி­ப­தி­களே பதில் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் பொது மக்கள் தமது தேவை­க­ளுக்­காக தங்கள் பிர­தே­சத்­தி­லி­ருந்து வேறு பிர­தே­சங்­க­ளுக்கு செல்ல வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. இதனால் பொது­மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றனர். பெரும்­பா­லான வழக்குகள் காதிநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

தற்போது காதிநீதிமன்ற கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. எனவே விரைவாக உரிய நடவடிக்ககைளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம் எனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.