விடுதலையானார் அஹ்னாப்!

0 273

‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள இளம் கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீம் கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை சிறை­யி­லி­ருந்து பிணையில் விடு­த­லை­யாகி தனது குடும்­பத்­துடன் இணைந்து கொண்டார்.
இவரை பிணையில் விடு­விக்க புத்­தளம் மேல் நீதி­மன்றம் கடந்த புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டி­ருந்­தது. எனினும் சில சட்ட நடை­மு­றைகள் கார­ண­மாக 24 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே மறுநாள் மாலை விடு­விக்­கப்­பட்டார்.

கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­னகே முன்­னி­லையில், அஹ்­னாபின் சட்­டத்­த­ரணி சஞ்ய வில்சன் ஜய­சே­கர, சட்­டத்­த­ரணி ஸ்வஸ்­திகா அரு­லிங்­கத்­துடன் ஆஜ­ராகி முன் வைத்த விட­யங்­களை மையப்­ப­டுத்தி, அவரை உடன் பிணையில் விடு­விக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. அந்த உத்­த­ரவு தொலை நகல் ஊடாக கொழும்பு விளக்­க­ம­றியல் சிறைக்கு அனுப்­பப்பட்ட நிலை­யி­லேயே, கடந்த வியாழன் மாலை 4.15 மணி­ய­ளவில் அவர் சிறை­யி­லி­ருந்து வெளி­யேறி தனது குடும்­பத்­தி­ன­ருடன் இணைந்தார். அத­னூ­டாக இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமின் 579 நாள் சிறை வாழ்வு நிறை­வுக்கு வந்­துள்­ளது.
கடந்த வியா­ழக்­கி­ழமை நண்­பகல் 1 மணி­ய­ளவில் கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­னகே பிணை உத்­த­ரவை வழங்­கினார். இத­னை­ய­டுத்து சிறைச்­சாலை நடை­மு­றை­களை முடித்துக் கொண்ட பின்னர் மாலை 4.30 மணி­ய­ளவில் சட்­டத்­த­ர­ணி­க­ளான சஞ்­சய மற்றும் சுவஸ்­திகா ஆகியோர் தமது காரில் அஹ்­னாபை அழைத்து வந்து அவ­ரது குடும்­பத்­திடம் ஒப்­ப­டைத்­தனர்.

அஹ்­னாபின் தந்தை, தாய், சகோ­த­ரர்கள், சகோ­த­ரிகள் மற்றும் உற­வி­னர்கள் என பலரும் அவரை அழைத்துச் செல்­வ­தற்­காக கொழும்­புக்கு வருகை தந்­தி­ருந்­தனர். அதற்கு முன்­தினம் புத்­த­ளத்தில் வைத்து அஹ்னாப் பிணையில் விடு­தலை செய்­யப்­ப­டுவார் என்ற எதிர்­பார்ப்பில் அன்றை தினமே அவரை அழைத்துச் செல்ல குடும்­பத்­தினர் தயா­ராக வந்­தி­ருந்­தனர். எனினும் அன்று சட்­டச்­சிக்­கல்கள் கார­ண­மாக அவர் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

அதனைத் தொடர்ந்து மறுநாள் கொழும்பு புதுக்­கடை நீதி­மன்­றத்தில் நகர்த்தல் பத்­திரம் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்ட சமயம், புத்­த­ளத்­தி­லி­ருந்து அங்கு வருகை தந்த குடும்­பத்­தினர் தமது மகனின் விடு­தலைச் செய்­தியை அறிந்து கொள்­வ­தற்­கா­கவும் அவரை அழைத்துச் செல்­வ­தற்­கா­கவும் ஏக்­கத்­துடன் காத்­தி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே அவர் அன்று மாலை பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

579 நாட்­களின் பின்னர் மகனை சந்­திக்கக் கிடைத்­தமை குறித்து பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி வெளி­யிட்­டனர். தமது மகனின் விடு­த­லைக்­காக ஒரு ரூபாய் கூட கட்­டணம் அற­வி­டாது கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளாக போரா­டிய சட்­டத்­த­ர­ணி­களை கட்­டி­ய­ணைத்து அஹ்­னாபின் குடும்­பத்­தினர் கண்ணீர் மல்க நன்றி தெரி­வித்­தனர். “ நீங்கள் எனது மகனை மீட்டுத் தர ஒரு ரூபாவைக் கூட கேட்­க­வில்லை. இதற்கு நாங்கள் எப்­படி கைம்­மாறு செய்­வது. எங்­க­ளிடம் உங்­க­ளுக்குத் தரு­வ­தற்கு அன்­பையும் பிரார்த்­த­னை­யையும் தவிர வேறொன்றும் இல்லை” என அங்கு நின்­றி­ருந்த சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் அஹ்­னாபின் தாயார் உணர்ச்சி ததும்ப கூறினார்.

கடந்த 2020 மே16 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட அஹ்னாப் கடு­மை­யான பிணை நிபந்­த­னை­களின் கீழேயே விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம், ஒவ்­வொரு மாதமும் முதல், இறுதி ஞாயிற்றுக் கிழ­மை­களில் மு.ப. 9.00 மணிக்கும் நண்­பகல் 12.00 மணிக்கும் இடையே, புத்­தளம் -பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் கையெ­ழுத்­திட வேண்டும் என்ற நிபந்­த­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் வெளி­நாட்டுப் பய­ணத்தை தடை செய்த நீதி­மன்றம், அஹ்­னா­புக்கு கடவுச் சீட்டு ஒன்று இது­வரை இல்லை என்ற விடயம் மன்றுக்கு முன் வைக்கப்பட்டதையடுத்து, அவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மையப்படுத்தி அவருக்கு கடவுச் சீட்டு விநியோகிப்பதை தடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது அத்துடன் கடவுச் சீட்டு இல்லை என்பதை அடுத்த வழக்குத் தவணையின் போது சத்தியக் கடதாசி மூலம் மன்றுக்கு அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.