டாக்டர் ஷாபி மீண்டும் பேசுபொருளானது ஏன்?

ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான தகவல்களும் உண்மை நிலையும்

0 3,548

எம்.எப்.எம்.பஸீர்

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு  பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் விவ­கா­ரத்தில் மீண்டும் ஒரு முறை ஊட­கங்கள் தவ­றி­ழைத்­துள்­ளன.

முதலில், வைத்­தியர் ஷாபியை கைது செய்­யவும், அவ­ரது குடும்­பத்­தாரை சின்­னா­பின்­னப்­ப­டுத்­தவும் அடிப்­ப­டை­யற்ற செய்­தி­களை வெளி­யிட்ட ஊட­கங்கள்,  தற்­போது அவர் மீள சேவையில் இணைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், சம்­பள நிலுவை செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

இத­னூ­டாக கடந்த வாரம், மீண்­டு­மொரு முறை வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் பொது வெளியில் பல கருத்­துக்கள் உலா வந்­ததை காண முடிந்­தது. எனினும் இன்று வரை வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் விவ­கா­ரத்தில் நீதி நிலை நாட்­டப்­ப­ட­வில்லை என்­பதும், அவர் மீள வைத்­திய சேவையில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதும், நிலுவைச் சம்­பள பணம் கூட இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­துமே உண்­மை­யாகும்.

உண்­மையில் சி.எப்./ டி.பி.கே./ 2019/19 எனும் இலக்­கத்தை உடைய கடந்த 2021/12/06 ஆம் திக­தி­யி­டப்­பட்ட சுகா­தார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரால், வைத்­தியர் எஸ்.எச். முன­சிங்க குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின்  பணிப்­பா­ள­ருக்கு அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தை மையப்­ப­டுத்தி, வைத்­தியர் ஷாபி மீள பணியில் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக அடிப்­ப­டை­யற்ற வகையில் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

உண்­மையில் அந்த கடி­தத்தில் அப்­படி ஒன்­றுமே குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஊட­கங்­களின் செய்தி, ஊட­க­வி­ய­லா­ளர்கள் அரச நிறு­வ­னங்­க­ளி­டையே பரி­மாற்­றப்­படும் கடி­தங்­களின் கட்­ட­மைப்பு தொடர்பில் அடிப்­படை அறிவு கூட இல்­லாமல் அச்­செய்­தியை திரி­பு­ப­டுத்­தி­யுள்­ள­மையை பறை­சாற்­றி­யது.

குறித்த கடி­தத்தின் தலைப்பு,  ‘மீள சேவையில் இணைத்தல் மற்றும்  கட்­டாய விடு­முறை காலத்­துக்­கான சம்­பளம் வழங்கல் – வைத்­தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி ‘ என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் கடி­தத்தின் உள்­ள­டக்­கத்தில் மீள பணிக்கு இணைப்­பது தொடர்பில் எந்த பதி­வு­களும் இல்லை.

தன்னை மீள பணிக்கு அமர்த்­து­மாறும், சம்­பள நிலு­வையை கோரியும் வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் செய்­துள்ள மேன் முறை­யீட்டுக் கடி­தத்தின் தொடர்ச்­சி­யா­கவே இக்­க­டிதம் சுகா­தார அமைச்சின் செய­ல­ரினால், குரு­ணாகல் வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அரச நிறு­வ­னங்­களில் பரி­மாற்­றப்­படும் கடி­தங்­களில் ஒரு விட­ய­தானம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக ஒரே தலைப்பே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது வழமை. அதற்­க­மை­யவே அந்த கடி­தத்­திலும் அந்த தலைப்பு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் வழங்­கப்­ப­டாத பதவி ஒன்­றினை, மீள வழங்­கப்­பட்டு விட்­டது என கூறி ஊட­கங்கள் ஷாபி வைத்­தி­ய­ருக்கு எதி­ராக மீண்­டு­மொ­ரு­முறை அநீதி இழைத்­துள்­ளன.

உண்­மையில் தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­ட­மி­ருந்து பணம் பெற்று, அவ்­வ­மைப்பின் நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக சிசே­ரியன் அறுவைச் சிகிச்சை மூலம், சிங்­களத் தாய்­மார்­களை கருத் தடை செய்­தமை,  தவ­றான வழி­களில் பெற்ற பணத்­தைக்­கொண்டு சொத்­துக்கள் சேர்த்­தமை, ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழும்  முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் கடந்த 2019 மே 24 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில்,  இவர் கைது செய்­யப்­ப­டாது போனால் நாட்டை விட்டு அவர் தப்­பிக்க வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் இவ­ருக்கும் இவ­ரது வீடு­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­ப­டலாம் எனும் ஊகத்தின்  அடிப்­ப­டை­யிலும் குரு­ணாகல் பொலி­ஸாரால் வைத்­தியர் ஷாபி கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். எனினும் அந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எவ்­வித ஆதா­ரங்­களும், முறைப்­பா­டு­களும் இருக்­காத நிலையில் மறு நாள் சி.ஐ.டி.யிடம் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக கைய­ளிக்­கப்­பட்ட வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன், சட்­ட­வி­ரோத கருத்­தடை செய்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எந்த ஆதா­ரங்­களும் இல்­லா­ததால் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான விசா­ர­ணையின் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

வைத்­தியர் ஷாபி கைது செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, அவர் சுகா­தார அமைச்­சினால் கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்டார். கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­படும் ஒரு­வ­ருக்கு அவ­ரது சம்­ப­ளத்தைச் செலுத்த வேண்­டி­யது கட்­டாயம் என்­றாலும், இது­வரை வைத்­தியர் ஷாபிக்கு அவ­ரது சம்­பளம் தொடர்ச்­சி­யாக செலுத்­தப்­ப­டாமல் இருந்து வரு­கின்­றது.

இந் நிலை­யி­லேயே வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் மேன் முறை­யீட்­டுக்கு அமைய அவ­ரது சம்­பள நிலு­வையை மீள வழங்க உத்­த­ர­விடும் முக­மாக, சுகா­தார அமைச்சின் செய­ல­ரினால் குறித்த கடிதம், குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், நாட்டில் ஒரே  வித­மாக அனை­வ­ருக்கும் சட்டம் அமுல் செய்­யப்­பட்­டி­ருந்தால்,  இது­வரை வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு அவ­ரது சம்­ப­ளத்தை வழங்­காமை தொடர்பில், குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ளரே பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும் என சிரேஷ்ட நிர்­வாக சேவை அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

கடந்த இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக, வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு அவ­ரது சம்­ப­ளத்தை வழங்­கா­மைக்­காக அந் நட­வ­டிக்­கை­யினை குரு­ணாகல் வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு எதி­ராக எடுத்­தி­ருக்க வேண்டும் என்­பது அவர்­க­ளது நியா­ய­மான நிலைப்­பாடு.

அரச சேவையில், ஒருவர் பணி இடை நிறுத்­தப்­படும் போது முதலில் சம்­பளம் வழங்­கப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­டாலும், கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­படும் ஒரு­வ­ருக்கு சம்­ப­ளத்தை வழங்­காமல் இருக்க முடி­யாது.

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் தாபன விதிக் கோவையின் முதலாம் தொகு­தியின்  ஒii அத்­தி­யா­யத்தில் விடு­மு­றைகள் தொடர்­பாக ‘ லீவு ‘ எனும் தலைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.  அதில் 20 ஆம் இலக்­கத்தின் கீழ் கட்­டாய விடு­முறை தொடர்பில் ‘ கட்­டாய லீவு ‘ என்ற  உப தலைப்பில் இவ்­வி­டயம்  கூறப்­பட்­டுள்­ளது.

அந்த பகுதி வரு­மாறு :

20:1 உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கட­மை­களை ஆற்­று­வது பொது நன்­மைக்கு ஒத்­து­வ­ரா­தென மருத்­துவ அல்­லது வேறு யாதே­னு­மொரு விசேட கார­ணத்­தினால் கரு­தப்­ப­டு­மி­டத்து, நிய­மன அதி­காரி தனிப்­பட்ட முறையில் அந்த உத்­தி­யோ­கத்­தரை கட்­டாய லீவில் அனுப்ப முடியும்

20:2 அந்த லீவினை குறித்த உத்­தி­யோ­கத்­தரின் எஞ்­சிய லீவுகள் இருப்பின் அவற்­றி­லி­ருந்து முதலில் குறைத்துக் கொள்ளல் வேண்டும்.  உத்­தி­யோ­கத்­தரின் எஞ்­சிய லீவுகள் முடி­வ­டைந்­ததன் பின்னர் வழங்­கப்­ப­டு­கின்ற  லீவினை முழுச் சம்­ப­ளத்­து­ட­னான லீவொன்­றாகக் கணிப்­பி­டுதல் வேண்டும்

இந் நிலை­யி­லேயே, வைத்­தியர் ஷாபி கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட மாதம் முதல் அவ­ருக்­கான சம்­பளம் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் எனவும்,  அவ்­வாறு செய்­யாமை பாரிய குற்றம் எனவும் சுட்­டிக்­காட்டும்  சிரேஷ்ட நிர்­வாக சேவை அதி­கா­ரிகள், அது தொடர்பில் குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ள­ருக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும் எனவும் தெரி­வித்­தனர்.

இந் நிலையில், வைத்­தியர் ஷாபியை மீள சேவையில் இணைக்­கு­மாறு சுகா­தார  அமைச்சின் செயலர்  தனது கடி­தத்தில் கூறாத போதும்,  வைத்­தியர் ஷாபிக்கு சம்­பளம் வழங்­கு­மாறு அறி­வித்­துள்ளார். அத்­துடன்  இது­வரை சம்­பளம் வழங்­கப்­ப­டாமை தொடர்பில், குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ள­ரிடம் அவர் விளக்­கமும் கோரி­யுள்ளார்.

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­க­மு­வ­

இந் நிலையில் இது தொடர்பில் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­ க­மு­வ­விடம்  விடிவெள்ளி வின­வி­யது.

கேள்வி :  வைத்­தியர் ஷாபிக்கு சம்­ப­ளத்தை செலுத்­து­மாறு சுகா­தர அமைச்சு அறி­வித்­துள்­ளது அல்­லவா? தற்­போது சம்­பளம் வழங்க ஆரம்­பித்­துள்­ளீர்­களா ?

வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் :  ஆம், அறி­வித்­துள்­ளர்கள்.  அந்த அறி­வித்­த­லுக்கு அமைய தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

கேள்வி : இன்னும் சம்­பளம் வழங்­க­வில்­லையா ?

வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் : நான் அதற்­கான தேவை­யான உத்­த­ர­வு­களை வழங்­கி­யுள்ளேன்.  பல மாதங்­க­ளுக்­கான நிலுவை உள்­ளதால் அவற்றை ஒழுங்­கு­ப­டுத்த வேண்டும். தேவை­யான நிதியைப் பெற சுகா­தார அமைச்­சிடம் கோர வேண்டும்.  எனது கட­மை­களை நான் செய்­துள்ளேன்.

கேள்வி : கட்­டாய விடு­மு­றையின் போது சம்­பளம் இல்­லாமல் போகுமா?

வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் :  கட்­டாய விடு­மு­றையின் போது,  தாபன விதிக் கோவைக்கு அமைய சம்­பளம் வழங்­கப்­படும்.

கேள்வி : அப்­ப­டி­யானால் ஏன் வைத்­தியர் ஷாபிக்கு சம்­பளம் வழங்­கப்­ப­ட­வில்லை ?

வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் :  அவர் முதலில் கைது செய்­யப்­பட்டார் தானே.  விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.  அதனால் சம்­பளம் அளிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.  இரு வரு­டங்­க­ளுக்கு மேல் சென்­றாலும், சம்­பளம் வழங்­கு­மாறு சுகா­தார அமைச்­சி­லி­ருந்து உத்­த­ர­வுகள் வரவும் இல்லை.

கேள்வி :  அடிப்­படை விசா­ரணை ஒன்று நடாத்­தப்­பட்­டதா?

வைத்­தி­ய­சாலை பணிப்­பளர் :  அடிப்­படை விசா­ரணை ஒன்று வைத்­தி­ய­சா­லையில் நடாத்­தப்­பட்­டது.

கேள்வி : அடிப்­படை விசா­ர­ணையில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால், குற்றப் பத்­தி­ரிகை ஒன்று கைய­ளிக்­கப்­பட்டு, ஒழுக்­காற்று  விசா­ரணை நடாத்­தப்­பட வேண்டும் அல்­லவா?

வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர்  :  அடிப்­படை விசா­ர­ணையில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டார்.  நாம் அவ்­வ­றிக்­கையை சுகா­தார அமைச்­சுக்கு அனுப்­பி­யுள்ளோம்.  அமைச்சு குற்றப் பத்­தி­ரிகை ஒன்­றினை கைய­ளிக்­க­வில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாம் சுகாதார அமைச்சின் பிரதானி ஒருவரிடம்   வின வினோம். அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி, அடிப்படை விசாரணை வைத் தியசாலையினால் அன்றி சுகாதார அமைச்சினாலேயே நடாத்தப்பட வேண் டும் என  தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட விசாரணை சுயாதீனமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.  முறையான அடிப்படை விசாரணை ஒன்றில்  வைத்தியர் ஷாபி இதுவரை குற்ற வாளியாக காணப்பட வில்லை எனவும்,  அவ்வாறான நிலை யில் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை கையளிக் கவோ, முறையான ஒழுக்காற்று விசார ணைகளை முன்னெடுக்கவோ முடியாது என அந்த அதிகாரி சுட்டிக்கட்டினார்.

அந்த வகையில் வைத்­தியர் ஷாபிக்கு நீதி நிலை­நாட்­டப்­பட்டு விட்­ட­தா­கவும் அவர் மீளவும் பணிக்கத் திரும்பி விட் டதா­கவும் அவ­ருக்குச் செலுத்த வேண்­டிய நிலுவை யிலுள்ள சம்­பளம் அனைத்தும் வழங்­கப்­பட்­டு­விட்­ட­தா­கவும் வெளி­வந்த செய்­திகள் தவ­றா­ன­வை­யாகும். வைத்­தியர் ஷாபிக்கு முழு­மை­யான நீதி நிலை­நாட்­டப்­படும் வரை குரல் கொடுப்பது அனைவரதும் கடமையாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.