மைத்திரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்

மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு

0 687

மஹிந்­தவின் அர­சாங்­கத்­திற்கு பெரும்­பான்­மையை நிரூ­பிக்க மந்­தி­ரி­க­ளுக்கு கோடிக்­க­ணக்கில் விலை பேசப்­பட்­டது. விலையை அதி­க­ரித்­த­மையே மஹிந்­த­வினால் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது போனது என்று கூறி­யதன் மூலம்  தான் குற்­ற­வாளி என்­ப­தையும் ஒப்­புக்­கொண்­ட­துடன், மஹிந்த ராஜபக் ஷவையும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமது குற்றங்களை இப்போதாவது ஒப்புக்கொண்டு மைத்திரியும் மஹிந்தவும் நல்லாட்சிக்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

எந்த அர­சாங்­க­மாக இருந்­தாலும்  மனித உரி­மை­களை பாது­காக்க வேண்­டி­யது அவர்­களின் கட­மை­யாகும். இவ்­வா­றான நிலையில் தான் நாட்டின் பிர­தான நப­ர் அர­சி­ய­ல­மைப்­பையும் மக்கள் ஆணை­யையும்  மீறி செயற்­பட்டு வரு­கின்றார். அர­சி­ய­ல­மைப்பு 19 தட­வைகள் திருத்­தப்­பட்­டுள்­ளன. அப்­ப­டி­யென்றால்  மக்­க­ளுக்கு ஏற்றால் போன்ற ஓர் அர­சி­ய­ல­மைப்­பினை 19 தட­வைகள் திருத்தி மிகவும் சாத­க­மான அர­சி­ய­ல­மைப்­பொன்று மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீறி செயற்­பட முடி­யாது. அன்று 19 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்­டுக்கு கொடுத்த வாக்­கு­றுதி ஒன்று உள்­ளது. அதா­வது, நிறை­வேற்று அதி­கா­ரத்தை 100 நாட்­களில் இல்­லாது செய்ய எனக்கு  அதி­கா­ரத்தை தாருங்கள் என கேட்­டுக்­கொண்டார். மாது­லு­வாவே சோபித தேரர் கால­மாகும் முன்னர் இருந்து இந்த நிலைப்­பாடு இருந்­தது. அதேபோல் ஜனா­தி­பதி தேர்தல் காலத்­தி­லி­ருந்து நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாக கூறி­னார். இப்­போது கதையை மாற்றிக்  கூறு­கின்றார். இப்­போது உட­ன­டி­யாக கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­த­மென ஜனா­தி­பதி பொய் கூறு­கின்றார்.   19 ஆவது திருத்தம் முழு­மை­யாக நல்ல திருத்­த­மென நாமும் கூற­வில்லை. ஆனால் ஆரோக்­கி­ய­மான திருத்தம் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. இது­வரை செய்­யப்­பட்ட திருத்­தங்­களில் 19ஆவது திருத்தம் ஆரோக்­கி­ய­மான ஒன்று. அதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

19 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களே அதி­க­மாக இருந்­தனர். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் 223 பேர் வாக்­க­ளித்து ஏக­ம­ன­தாக நிறை­வற்­றினர். அவர்­கள்தான் இன்று இதனை தவ­றெனக் கூறு­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் 19 ஆவது திருத்தம் மிகச்­சி­றந்த திருத்தம் எனவும் என்னால் செய்து முடிக்­கப்­பட்ட சிறந்த நட­வ­டிக்கை இது­வெனக் கூறினார். நாமும் 19 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக ஆத­ரிக்­கின்றோம். இதில் தவ­றான பக்கம் என ஒன்றும் இல்லை. 19 ஆவது திருத்­தத்­துக்கு அமைய ஜனா­தி­ப­தி­யினால்  நான்­கரை ஆண்­டு­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது. ஆனால் கடந்த வாரம் ஜனா­தி­பதி கூறி­யது என்ன? ஒரு வாரத்தில் அர­சியல் நெருக்­க­டிக்குத் தீர்வு காண்­ப­தாகக் கூறினார். ஆனால் இன்று அந்த வாரம் முடி­கின்­றது. இப்­போது நீதி­மன்ற தீர்ப்பு வரையில் காத்­தி­ருக்க வேண்­டு­மெனக் கூறு­கின்றார். ஏன் இவர் நிமி­டத்­துக்கு நிமிடம் மாறி மாறிப் பேசு­கின்றார். ஒரு கருத்தில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தில்லை என்­பதை சகல சந்­தர்ப்­பத்­திலும் அவர் நிரூ­பித்­து­விட்டார்.

அதேபோல் இன்று சபா­நா­யகர் மீது குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். ஆனால் சபா­நா­யகர் மீது எந்த தவறும் இல்லை. நவம்பர் 14 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடப்­பட வேண்டும் என்­பது ஜனா­தி­ப­தியின் தீர்­மானம். மாறாக, சபா­நா­யகர் தீர்­மானம் அல்ல. பொய்­யான கார­ணி­களை கூறி இவர்கள் அனை­வரும் நாட்­டினை நாச­மாக்கி வரு­கின்­றனர். அன்று நீதி­மன்­றத்தை நாடுங்கள் என சவால் விடுத்­த­வர்கள் இன்று நீதி­மன்றத் தீர்ப்­பையே ஏற்­று­கொள்ள மறுக்­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் தீர்க்க வேண்­டிய விட­யத்தை நீதி­மன்றம் வரை கொண்டு சென்­றுள்­ளனர் என மஹிந்த ராஜபக் ஷ கூறு­கின்றார். இதனை தான் நாம் ஆரம்­பத்தில் செய்தோம். பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்து அமை­தி­யாக தீர்த்­துக்­கொள்ள முயற்­சித்தோம். இன்று இவர்கள் நீதி­மன்றத் தீர்ப்பு குறித்து அச்சம் கொள்­கின்­றனர். மைத்­திரி தொடர்ச்­சி­யாக அர­சி­ய­ல­மைப்­பினை மீறி­விட்டார்.  மேலும்  ஜனா­தி­பதி தமது தவ­று­களை  அவ­ரா­கவே ஏற்­றுக்­கொண்டுவிட்டார். தாம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்கப் பணம் கொடுக்க முயற்­சித்­த­மையை ஏற்­றுக்­கொண்டு விட்டார். அதேபோல் உறுப்­பி­னர்கள் தமது பெறு­ம­தியை கூட்­டிக்­கொண்­டனர். அதனால்தான் விலை­கொ­டுத்து வாங்க முடி­ய­வில்லை என்­பதை அவ­ரா­கவே ஒப்­புக்­கொண்டு விட்டார். ஆகவே மஹிந்த ராஜபக் ஷவிற்கு பெரும்­பான்மை காட்ட முடி­யாது போனமை உறுப்­பி­னர்கள் பெறு­ம­தியை கூட்­டி­ய­தனால் என்­பதை கூறி மஹிந்த ராஜபக் ஷவையும் காட்­டிக்­கொ­டுத்­து­விட்டார். இன்று இவர்­களின் சூழ்ச்சி, ஊழல், குற்­றங்கள் அவர்­களின் வாக்­கு­மூ­ல­மாக வெளி­வந்­து­விட்­டன.

தமது அதி­கார மோகமும் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றவும் ஜனா­தி­ப­தியும் அவ­ரது கூட்­ட­ணியும் அர­சி­ய­ல­மைப்­பினை பல தட­வைகள் மீறி­விட்­டனர். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ நீதி­மன்­றத்தை நாடி­ய­மையே நாட்டின் குழப்­பத்­துக்கு கார­ண­மெனக் கூறி­ய­மையும்  மிகவும் மோச­மான கருத்­தாகும். அதனை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். தேர்தல்  ஒன்­றுதான் தீர்வு என  இவர்கள் இன்று கூறு­கின்­றனர். அவ்­வாறு தேர்தல் தான் தீர்வு என்றால் ஏன் ஒக்­டோபர் 26 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கலைக்­காது மஹிந்த ராஜபக் ஷவிற்கு அர­சாங்­கத்தை ஜனா­தி­பதி கொ­டுத்தார்? அன்றே பாரா­ளு­மன்றம் கலை­கின்­றது தேர்தல் நடக்கும் என அறி­வித்­தி­ருக்க வேண்­டுமே? தேர்தல் தான் தீர்­வென்றால் ஏன் கோடிக்­க­ணக்கில் பணம் கொடுத்து அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சித்­தனர்? அப்­போதே தேர்­தலை அறிவித்திருக்கும் வர்த்தமானியை விடுத்திருக்கலாமே. இன்று செய்வதறியாத நிலையில் தேர்தல்தான் எனக்கூறி தப்பித்துகொள்ள முயற்சிக்கின்றனர். ஆகவே இவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போதாவது மைத்திரியும் -மஹிந்தவும் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். மேலும் மேலும் நாட்டினை குழப்பாது திருத்தி தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும்.  தான் செய்த தவறை இப்போதாவது உணர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும். இப்போது தீர்வை வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.