நீதிக்கான போராட்டம் 17ஆம் திகதிக்கு மாற்றம்

எஸ்.எம். மரிக்கார் அறிவிப்பு

0 567

நீதி­மன்றத் தீர்ப்­பு­களின் பின்­னரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாப்பு ரீதி­யான தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்­கா­மலும் நீதி­மன்றத் தீர்ப்­பினை மதிக்­கா­மலும் செயற்­ப­டு­வா­ரானால் எதிர்­வரும் 17ஆம் திகதி பாரிய நீதிக்­கான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். 13ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்த போராட்­டமே இவ்­வாறு காலம் தாழ்த்­தப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்­பிட்டார்.

மேலும் நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய முன்­னணி மீண்டும் தனது பலத்தை நிரூ­பித்துக் காட்டும். அவ்­வாறே எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் சாத­க­மான நீதி­மன்றத் தீர்ப்பு கிடைக்­கு­மென எதிர்­பார்ப்­ப­தா­கவும் , நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­ப­டா­விட்டால் கடும் எதிர்ப்­பினை சந்­திக்க நேரிடும் என்றார்.

அலரி மாளி­கையில் ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர்  மேற்­கண்­ட­வாறு குறி­ப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­ப­ிடு­கையில்,

சட்­ட­வி­ரோ­த­மாக ஆட்­சி­ப­லத்தை கைப்­பற்­றிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை நான்கு தட­வைகள் நிறை­வேற்­றி­யுள்ளோம். அந்த விட­யங்கள் பாரா­ளு­மன்ற ஹன்சாட் அறிக்­கை­யிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அதே­போன்று பிர­தமர் பணி­பு­ரி­வ­தற்­காகத் தடை­வி­திக்­கப்­பட்ட முதல் சந்­தர்ப்­ப­மா­கவும் இது காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பல­மில்லை என்றே மஹிந்த தரப்பு நினைத்­துக்­கொண்டு உள்­ளது. ஆனால் நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் எங்­களின் பெரும்­பான்மை பலத்தை மீண்டும்  நிரூ­பித்துக் காட்­டுவோம். ஆகவே நாளை­ய­ தினம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மீண்டும் பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் 113 க்கும் அதி­க­மான பெரும்­பான்மை ஆத­ர­வுள்­ளது என்­பதை நிரூ­பிப்போம்.

மேலும் 2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தது சட்­டத்­துக்குப் புறம்­பா­னது என்­பது இன்று தெளி­வா­கி­யுள்­ளது. எதிர்­வரும் 15 ஆம் திக­திக்குப் பின்னர் நீதி­மன்­றங்­க­ளுக்­கான விடு­முறை வழங்­கப்­ப­ட­வுள்­ளதால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது தொடர்­பாக நீதி­யான தீர்ப்­பினை உயர் நீதி­மன்றம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்குள் வழங்கும் என்றும் எதிர்­பார்க்­கின்றோம். பாரா­ளு­மன்­றத்தில் எங்­க­ளுக்குப் பெரும்­பான்மை உள்­ளது என பல­மு­றைகள் நிரூ­பித்­துள்ள நிலையில் நீதி­மன்றத் தீர்ப்­புக்­களின் பின்­னரும் 225 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு கிடைக்­க­பெற்­றாலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மிக்க முடி­யா­தென ஜனா­தி­ப­தியால் குறிப்­பிட முடி­யாது.

எனவே, நீதி­மன்றத் தீர்ப்­பு­களின் பின்னர் 19 ஆவது சீர்­தி­ருத்­தத்தின் உண்­மை­யினை புரிந்­து­கொண்டு ஜன­நா­யக ரீதி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட வேண்­டிய அவ­சியம் ஏற்­படும். காரணம் 19 ஆவது சீர்த்­தி­ருத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் பாரா­ளு­மன்­றத்தில் இந்த சீர்த்­தி­ருத்தம் தொடர்பில் தான் பெரு­மை­ய­டை­வ­தா­கவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்தார். ஆகவே தொட­ர்ந்து அவரால் 19 ஆவது சீர்த்­தி­ருத்­தத்தை மீறி செயற்­ப­பட முடி­யாது.

பாது­காப்­புத்­துறை மீதான தாக்­கு­தல்கள், டட்லி சேன­நா­யக்­கவை பற்றி உயர்­வாகப் பேசு­ப­வர்­களே அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தி­க­ளுக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்­துதல் எனப் பல்­வே­று­பட்ட அரா­ஜக நிலைகள் உரு­வா­கி­யுள்­ளன. ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டுகள் ஒவ்­வொன்றும் அடிப்­படை கொள்­கைகள் அற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. இதற்கு அவரே பொறுப்­புக்­கூற வேண்டும். இது­வ­ரையில் நாட்டில் எழுந்­துள்ள அனைத்து இழப்­பு­க­ளுக்கும் ஜனா­தி­ப­தியின் தன்­னா­தி­க்க செயற்­பாடே கார­ண­மாகும்.

அவ்­வாறே எதிர்­வரும் ஜன­வரி மாதத்தில் ஜனா­பதி தேர்­தலே இடம்­பெ­ற­வேண்டும். ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் குறித்து மக்கள் தமது கருத்­தினை வெளி­யிட அவர்­க­ளுக்­கான சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறே பிர­த­மரை தெரிவு செய்­வ­தற்கு 113 பெரும்­பான்­மையும் தேவை­ப்­ப­டாது. பாரா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­ன­முள்ள கட்­சியின் தலை­வரே பிர­த­ம­ராகத் தெரி­வு­செய்­யப்­பட வேண்டும்.

அவ்­வாறே எதிர்­வரும் 13 ஆம் திகதி நீதிக்கான போராட்டமொன்றினை முன்னெடுக்கவும் தயாராக இருந்தோம். நாளை ரணில் விக்கிரமசிங்கவை பிதமராக நியமிக்கக் கோரி பிரேரரணை பிரேரிக்கப்பட்டதன் பின்னரே இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்தோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளின் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.  நீதிமன்ற தீர்ப்புகளின் பின்னர் யாப்புரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படாவிட்டால் நீதிக்கான பாரிய போரட்டம் இடம்பெறும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.