யாழ். முஹம்மதியா பள்ளிவாசல் நிர்வாக சபை இடைநிறுத்தம்

பயணத்தடையை மீறி ஒன்றுகூடியதாக குற்றச்சாட்டு; அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

0 379

(எம்.எல்.லாபிர்)
யாழ்ப்­பாணம் முஹம்­ம­தியா பள்­ளி­வா­சலில் கடந்த 4ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 பயணக் கட்­டுப்­பா­டு­களை மீறி பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட 14 பேர் பள்­ளி­வா­ச­லினுள் கூடி இருந்­தமை கார­ண­மாக வக்பு சபை உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் நிர்­வாக சபையை இடை­நி­றுத்­தி­யுள்­ளது. இதே­வேளை விஷேட நிர்­வாக குழு­வொன்­றினை நிய­மிக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது.

யாழ் கலீபா அப்­துல்­காதர் வீதி ( நாவலர் வீதி) யில் அமைந்­துள்ள முஹம்­ம­தியா ஜும் ஆ பள்­ளி­வா­சலில் கடந்த 4ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 பயணக் கட்­டுப்­பா­டு­களை மீறு தலைவர் உட்­பட 14 பேர் பள்­ளி­வா­சலில் கூடி இருந்­தமை கார­ண­மாக அவர்கள் சுகா­தா­ரத்­துறை மற்றும் பாது­காப்புத் துறை­யி­னரால் தனி­மைப்­ப­டுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அன்­றைய தினம் குறித்த நபர்கள் அங்கு ஜும்ஆ தொழு­கையில் ஈடு­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

“இப்­பள்­ளி­வா­சலின் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள் தொடர்ந்தும் அர­சாங்­கத்தின் சட்­டங்­களை மீறி­யுள்­ளனர் என்­ப­த­னா­லேயே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இப்­பள்­ளி­வா­சலின் தலை­வரை திணைக்­கள உத்­தி­யோ­கத்­திர்கள் நேரில் சந்­தித்து எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தும் அவர்கள் இவ்­வாறு பொறுப்­பற்ற முறையில் நடந்­தி­ருப்­பது மிகவும் கவலை தரு­கி­றது” என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள யாழ் முஹி­யத்தீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைத் தலைவர் மற்றும் நிர்­வா­கிகள் மீது குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

நாட்­டி­லுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கி­களும் கொவிட் 19 சுகா­தார வழி­மு­றை­க­ளையும் பயணக் கட்­டப்­பாட்­டி­னையும் கருத்திற் கொண்டு எச் சந்­தர்ப்­பத்­திலும் பள்­ளி­வா­சல்­களில் மக்கள் ஒன்று கூடு­வதைத் தவிர்க்க வேண்டும்.
நிவா­ரணப் பணி­க­ளுக்­காக ஒன்­று­கூ­டு­வ­தற்­காக வேண்­டிய தேவை ஏற்­பட்டால் பாது­காப்புத் துறை மற்றும் சுகா­தாரத் துறை­யி­னரின் அனு­ம­தி­யுடன் நிர்­வா­கிகள் மாத்­திரம் ஒன்று கூடலாம். அதான் சொல்வதற்காகவும், கொவிட் 19 அல்லது நிவாரணம் தொடர்பான விஷேட அறிவித்தல்களைச் செய்யவும் முஅத்தின் அல்லது இமாம் மாத்திரம் பள்ளிவாசலினுள் நுழைய அனுமதிக்கப்படலாம் எனவும் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.