தினமும் கபுறுகளை தோண்டி தயாராக இருக்க வேண்டிய கவலையான நிலைமை

ஓட்டமாவடியில் நேற்று மாலை வரை 539 ஜனாஸாக்கள் அடக்கம் என்கிறார் பிரதேச சபை செயலாளர்

0 501

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்று கார­ண­மாக முஸ்­லிம்­களின் இறப்பு வீதம் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கி­றது. தினமும் கபு­று­களைத் தோண்டி ஜனா­ஸாக்­களை அடக்­கு­வ­தற்கு நாம் தயா­ராக இருக்க வேண்­டிய கவ­லை­யான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த மே மாதம் 21 ஆம் திக­திக்குப் பின்­ன­ரான பய­ணத்­தடை அமுலில் இருக்கும் காலத்தில் இப்­போது வரை இந்­நி­லைமை அதி­க­ரித்­துள்­ள­மையை ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு எடுத்­து­வ­ரப்­படும் ஜனா­ஸாக்கள் உறுதி செய்­கின்­றன என ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் செய­லாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் விஷேட மைய­வா­டியில் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்யும் பணிகள் குறித்து அவரை விடி­வெள்ளி தொடர்பு கொண்ட போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

‘இங்கு அடக்கம் செய்­வ­தற்­காக கொண்டு வரப்­படும் ஜனா­ஸாக்­களில் தொடர்ந்து அதி­க­ரிப்­பினைக் காண­மு­டி­கி­றது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாத்­திரம் நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்து 23 ஜனா­ஸாக்கள் இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டன. நேற்று மாலை வரை 539 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டன. தொடர்ந்தும் பல ஜனா­ஸாக்கள் எடுத்­து­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

முஸ்லிம் சமூ­கத்தில் கொவிட் 19 தொற்று கார­ண­மாக இறப்பு வீதம் அதி­க­ரித்து வரு­கின்­றமை கவ­லை­யான விட­ய­மாகும். எமது சமூகம் கொவிட் 19 தொடர்­பான சுகா­தார வழி­காட்­டல்­களை உரிய முறையில் பின்­பற்­றா­மையே இதற்குக் கார­ண­மாகும். இந்­நி­லைமை தொடர்ந்தால் முஸ்லிம் சமூ­கமே கொவிட் 19 தொற்­றினைப் பரப்­பி­ய­தாக ஏனைய சமூ­கத்­தினர் குற்றம் சுமத்­தலாம். எனவே நாம் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும்.

தினமும் கபு­று­களைத் தோண்டி நாம் தயா­ராக இருக்க வேண்­டிய கவ­லை­யான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. மஜ்மா நகர் விஷேட மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்டால் மாற்­றி­ட­மாக வாக­னேரி பிர­தே­சத்தில் சாப்­ப­மடு என்ற கிரா­மத்தில் 10 ஏக்கர் அரச காணியை நாம் சிபா­ரிசு செய்­துள்ளோம். இக்­காணி தற்­போ­தைய மஜ்மா நகர் மைய­வா­டி­யி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்­துக்கு அப்­பாலே உள்­ளது.

இதே­வேளை ஓட்­ட­மா­வ­டியில் சில பிர­தே­சங்­க­ளிலும் கொவிட் தொற்­றா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். 280 பேர் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். ஒரு மரணம் நிகழ்ந்­துள்­ளது. மாஞ்­சோலை, மீரா­வோடை மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவை­யாளர் பிரி­வு­களை தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் கொவிட் செய­லணி மற்றும் சுகா­தார பிரி­வி­னரின் ஆலோ­ச­னை­யையும் அனு­ம­தி­யையும் கோரி­யுள்ளோம்.

ஓட்­ட­மா­வடி சுகா­தார வைத்­திய அதி­கா­ரியின் தலை­மையில் நடை­பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் இராணுவ பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபை உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவு அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.