தப்பான பாதையில் ‘தப்தர் ஜெய்லானி’

0 743

முபிஸால் அபூபக்கர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் முஸ்­லிம்­க­ளுக்கே உரித்­தான பல்­வேறு இருப்­பியல் அடை­யா­ளங்கள் சமய மற்றும் சமூக தளங்­களில் முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. அந்த வகையில் “தப்தர் ஜெய்­லானி “என அழைக்­கப்­படும் ஜெய்­லானியில் அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெறும் விட­யங்கள் தொடர்­பான பதிவே இது­வாகும்.

தப்தர் ஜெய்­லானி
இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பாவா ஆதம் மலைக்குப் பிந்­திய மிக நீண்ட வர­லாற்றைக் கொண்ட ஒரு இருப்பியல் அடை­யாளம் இது­வாகும். முகை­தீன்­அப்துல் காதர் ஜீலானி (கிபி 1078-–1166) அவர்கள் பாவா ஆதம் மலையை தரி­சிப்­ப­தற்­காக வந்த போது இங்கு விஜயம் செய்­த­தா­கவும் அவர்கள் நீண்ட காலம் தியா­னத்தில் இருந்­த­தா­கவும் இந்த இடம் அறி­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. பிரிட்டிஷ் கால பல ஆதா­ரங்­களும் இந்த வர­லா­று­களைக் குறிப்­பி­டு­கி­றது. அதேபோல் இங்கு நீண்ட கால­மாக முஸ்­லிம்கள் தமது வர­லாற்று தளத்­திற்­கான சமயசார் புனித பய­ணங்­களை மேற்­கொண்டு வந்­தி­ருக்­கின்­றனர்.

அண்­மைக்­கால போக்­குகள்
குறித்த இந்த இடத்தில் நீண்ட கால­மாக நில­வி­ வந்த சிங்­கள முஸ்லிம் வர­லாற்று ஆதாரம் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு அண்­மைக்­கா­ல­மாக ஒரு சில தீர்­வுகள் முன்வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதா­வது பௌத்த அடை­யாளம் உடைய இட­மாக இதை மாற்­று­வ­தற்­கான நீண்­ட­கால முயற்­சியின் விளை­வாக கண்­டியில் உள்ள நெல்­லி­கல பன்­ச­லவில் ஜம்­மி­யத்துல் உலமா சபை­யுடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தையின் அடிப்­ப­டையில் சில தீர்­வுகள் முன்­வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்டு வரு­கின்­றது.

அதில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் மற்றும் சியாரம் என்­ப­வற்றை பாது­காப்­ப­துடன் பௌத்த சமய அடை­யா­ள­மாக ஒரு உய­ர­மான புத்தர் சிலை தாது­கோ­புரம் அமைப்­பதும் பௌத்­தர்­களின் சமய கலா­சார நிகழ்­வு­களை இங்கு தொடர்ச்­சி­யாக இடம் பெறச் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளுக்கும் பௌத்த புனித யாத்­தி­ரி­கர்கள் தமது விசேட நிகழ்­வு­களை இங்கு வந்து கொண்­டா­டவும் உடன்­பாடு பெறப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது. ஆனால் இதனை முஸ்­லிம்­களின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உல­மாவோ முஸ்லிம் பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளமோ எங்கும் பகி­ரங்­க­மாக அறி­வித்­த­தாக காண முடி­ய­வில்லை.

வெசாக் நிகழ்­வுகள்
குறித்த இடத்தில் இம்­முறை இடம்­பெற்ற வெசாக் நிகழ்­வுக்­கான கொடி­க­ளையும் ஒரு சிலர் பள்­ளி­வா­ச­லிலும் அதன் சுற்­றுப்­பு­றங்­க­ளிலும் கட்­டி­ய­தாக கூறப்­பட்டு வரு­கின்­றது. ஆனாலும் இது சமய இணக்­கப்­பாட்டு உறவின் அடை­யா­ள­மாக இரு­த­ரப்பும் இணைந்து செய்­தி­ருப்பின் ஏற்­றுக்­கொள்ள முடியும். மாறாக இது பல­வந்­த­மாக இடம்­பெற்­றி­ருந்தால் இது ஏற்­றுக்­கொள்ளக் கூடிய ஒரு விடயம் அல்ல. இது இந் நாட்டின் சமய பாரம்­ப­ரி­யத்­துக்­கான அச்­சு­றுத்­த­லா­கவே கரு­தப்­படும். இது எதிர்­கா­லத்தில் இன்னும் தீவி­ர­ம­டையும் வாய்ப்பும் உள்­ளது.

குறித்த நெல்­லி­கல பன்­ச­லையில் இடம்­பெற்ற ஒப்­பந்தம் தொடர்­பாக ஜம்­மி­யதுல் உல­மாவோ ஏனைய அமைப்­பு­களோ இது­வரை பகி­ரங்­க­மாக தெளி­வான அறிக்­கையை விடுக்­கா­ததும் பொது மக்­க­ளி­டையே இவ்­வி­டயம் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யமும் அச்­சமும் தொடர்ந்து நில­வு­வ­தற்­கான கார­ணங்­களில் ஒன்­றாகும். அதனை அவர்கள் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அதேபோல் குறித்த வெசாக் சம்­பவம் தொடர்­பாக இது­வரை எது­வித அறிக்­கையும் பொறுப்பு வாய்ந்த அமைப்­புக்­களால் வெளி வந்­த­தா­கவும் தெரி­ய­வில்லை

பின்­னணி சம்­ப­வங்கள்
பல்­வேறு வகை­யான இருப்­பியல் சான்­று­க­ளாக தொல்­லியல் ஆதா­ரங்­க­ளாக இருக்­கின்ற தர்­காக்கள், பள்­ளி­வா­சல்­க­ளையும் சியா­ரங்­க­ளையும் அத­னோடு இணைந்த பல விட­யங்­க­ளையும் முஸ்­லிம்கள் இடையே ஏற்­பட்ட பல்­வேறு இயக்க வாத சிந்­தனை அமைப்­புகள் புறக்­க­ணித்­ததும் அவற்றை தமது கரங்­க­ளா­லேயே உடைப்­ப­தற்­கான பல்­வேறு வகை­யான பிர­சா­ரங்­களை கடந்த 30 வரு­டங்­க­ளாக மேற்­கொண்டு வந்­தார்கள்.

இதன் விளை­வு­களால் இவ்­வா­றான புரா­தன அடை­யா­ளங்­களைக் கொண்ட பல இடங்கள் உடைக்­கப்­பட்டும். புறக்­க­ணிக்­கப்­பட்டும் வந்­த­தோடு ஒரு சில பாரம்­ப­ரிய ஆர்­வ­லர்­களால் மட்­டுமே இவை பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­தன.

ஆனால் இன்று இவை முற்­றாக எமது கரங்­களில் இருந்து நழுவிச் செல்லக் கூடிய ஒரு நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்­கான காரணம் முழு மொத்த சமூ­கத்தின் வர­லாற்று அடை­யா­ள­மாக பார்க்­கப்­பட வேண்­டிய இவ்­வா­றான இடங்கள் ஒரு குறிப்­பிட்ட தரப்­பி­னரின் இட­மா­கவும். இஸ்­லாத்­துக்கு எதி­ரா­ன­தா­கவும் ஏகத்­து­வத்­திற்கு எதி­ரா­ன­தா­கவும் கூறி புறக்­க­ணிக்­கப்­பட்டு முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற இடங்­களில் கூட இவ்­வா­றான பாரம்­ப­ரிய வர­லாற்று இடங்கள் உடைக்­கப்­படும் எரிக்­கப்­படும் பரா­ம­ரிப்பு இல்­லா­மலும் ஆக்­கப்­பட்­டதன் விளை­வையே இன்று அனு­ப­விக்­கின்றோம். அதனால் இன்று எமது பாரம்­ப­ரி­ய­மான இடங்­களை முற்­றாக விட்டுக் கொடுக்க வேண்­டிய ஒரு நிலை ஏற்­பட்டு இருக்­கின்­றது. இது முழு இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் இருப்­பிற்கும் ஆரோக்­கி­ய­மான விடயம் அல்ல.

முகை­யதீன் அடை­யா­ளங்கள்
இலங்­கையில் முகைதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் வருகை தந்த 800 வரு­டத்­திற்கு மேற்­பட்ட வர­லாற்றை பறை சாற்­று­கின்ற பிர­தான இட­மாக தப்தர் ஜெய்­லானி மற்றும் முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­பட்ட “முகைதீன் பள்­ளி­வாசல்” பெயர்­மு­றையும் இன்னும் பல இடங்­களும் காணப்­பட்­டு­வந்­தன. ஆனால் இன்று முஸ்­லிம்கள் தம்­மு­டைய பள்­ளி­வா­சல்­களை முகைதீன் பள்­ளி­வாசல் என்ற பெயர்­களில் இருந்து மாற்றி வேண்­டு­மென்றே அவற்றை பல்­வேறு நவீன பெயர்­களால் அழைக்­கின்­றனர். அதேபோல் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் இடங்­களில் கூட இவ்­வா­றான புரா­தன தொல்­லியல் இடங்கள் ஒழுங்­காக பரா­ம­ரிப்பு செய்யப்படு­வ­தில்லை.

வர­லாற்று ஆவண சேக­ரிப்­பா­ள­ரான நஷீரின் கருத்­துப்­படி காரை­தீவில் அமைந்­துள்ள சாய்ந்­த­ம­ருது ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான “பக்கீர் சேனை என்ற இடமும் முஹ்­யித்தீன் அப்­துல்­காதர் ஜீலானி அவர்­களின் விஜ­யத்­துடன் தொடர்புபட்­ட­தற்­கான ஆதா­ரங்கள் இருப்­ப­தாக குறிப்­பி­டு­கிறார். ஆனால் குறித்த பக்கீர் சேனை கைவி­டப்­பட்டு மிக மோச­மான நிலையில் உள்­ளது. அதுபோல் அதன் அருகில் உள்ள மாவ­டிப்­பள்ளி” செயின் மௌலானா” சியா­ரமும் வேண்­டு­மென்று திட்­ட­மிட்டு முஸ்­லிம்­களால் அழிக்­கப்­ப­டு­கி­றது. இவற்­றுக்கு பின்னால் உள்ள சக்­திகள் எவை?

அந்­த­வ­கையில் ஏனைய சமூ­கத்தை விட முஸ்­லிம்­களே தமது எஞ்­சி­யி­ருந்த பல சமூக தொல்­லியல் அடை­யா­ளங்­களைச் சிதைப்­ப­வர்­க­ளா­கவும் இருக்­கின்ற அதே­வேளை இந்த தப்தர் ஜெய்­லானியும் இன்று எமது கைகளில் இருந்து நழுவிச் செல்­வ­தற்­கான கார­ணங்­களில் ஒன்று முஸ்­லிம்கள் இடையே காணப்­பட்ட சமய இயக்கவாத­ம் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை.

எனவே தான் சமய ரீதி­யான பிரச்­சி­னைகள் உள்­ளக முரண்­பா­டுகள் கார­ண­மாக எம்மில் ஒரு சிலரால் அழிக்­கப்­பட்டும் நிறுத்­தப்­பட்டும் வரு­கின்ற எமது பாரம்­ப­ரிய நிகழ்­வுகள், விழாக்கள், பண்­பாட்டு அம்­சங்கள் எமது நீண்ட கால இருப்­பியல் அடை­யா­ளத்தை இல்­லாமல் செய்­கின்ற ஒரு நிலையை ஏற்­ப­டுத்தும். ஆகவே சமய உள்­ளக வேறு­பா­டுகள் இயக்­க­வாத சிந்­த­னை­க­ளுக்கு அப்பால் எமது வர­லாற்றுத் தலங்­களை பாது­காக்­கா­து­விடின் அது வேறு நபர்­களின் கைக­ளுக்குச் சென்­று­விடும் என்­ப­தற்­கான ஒரு சிறந்த சம்­ப­வமே இதுவும் இத­னோடு தொடர்­பு­டைய விட­யங்­க­ளா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது

என்ன செய்­யலாம்?
முஸ்­லிம்­களின் இருப்­பி­ய­லுக்­கான நீண்­ட­கா­ல­மாக அடை­யா­ள­மாக இருக்­கின்ற இவ்­வா­றான பாரம்­ப­ரிய இடங்­க­ளுக்கு அடிக்கடி செல்வதும் ஏனைய இனங்கள் உடனான இன உறவை பேணுவதும் எமது பண்பாட்டு அம்சங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதும் தமது பாரம்பரிய நடைமுறைகளை இவ்வாறான இடங்களில் தொடர்ச்சியாக செய்து வருவதும்தான் தீர்வாக அமையும். இவ்வாறான இடங்களை முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களாக எதிர்காலத்திலும் அடையாளப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக அமையும். இனியாவது இடங்களை இலங்கை முஸ்லிம்களின் பொது அடையாளமாக கருதி எமது பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் நிகழ்வுகளையும் தொடர்ந்து செய்வதற்கு முயற்சிப்போம். அதுவே இன்றைய நிலையில் பொருத்தமான தீர்வாகும். மாறாக உள் பிணக்குகள் தொடருமானால் பலவீனமான சமூகமாக இது போன்ற பல இடங்களை இழக்க வேண்டி ஏற்படும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.