இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சமித தேரர்

மரணிக்கும் வரை பலஸ்தீனுக்காக குரல் கொடுத்தார்

0 468

இலங்கை நாடா­ளு­மன்­றத்­துக்கு முதன் முத­லாகத் தெரிவு செய்­யப்­பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் பத்­தே­கம சமித தேரர், கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்­கி­ழமை தனது 69ஆவது வயதில் கால­மானார்.

மாத்­த­றை­யி­லுள்ள தனியார் மருத்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மர­ண­ம­டைந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இட­து­சாரிக் கட்­சி­யான லங்கா சம சமாஜக் கட்­சி­யினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி, காலி மாவட்­டத்­தி­லி­ருந்து நாடா­ளு­மன்­றுக்குத் தெரி­வான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பத­வியை வகித்து வந்தார்.

தமிழ், முஸ்லிம் மக்­களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வந்த இவர், சிறு­பான்மை மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று கிடைக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தார்.

இளமைக் காலம் முதல் – இட­து­சாரிக் கட்­சி­யான லங்கா சம சமாஜக் கட்­சி­யுடன் இணைந்து – சமித தேரர் செயற்­பட்டு வந்தார் என்றும், அத­னால்தான் அவர் இன­வா­தத்­துக்கு எதி­ரான தீவிர கருத்­துக்­களைக் கொண்­ட­வ­ராக இருந்தார் எனவும், மூத்த பத்­தி­ரி­கை­யாளர் என்.எம். அமீன் கூறு­கிறார்.

“அவர் முற்­போக்­கான ஒரு பௌத்த பிக்கு. தமிழ், முஸ்லிம் மக்­களின் நலன்­களில் தீவிர அக்­கறை கொண்­ட­வ­ராக இருந்தார். இலங்­கைக்­கான பலஸ்­தீன தூது­வரை சென்று சந்­தித்த இவர், பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தை தனது காலி மாவட்­டத்தில் ஆரம்­பித்தார். தென் மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இன ரீதி­யான பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட போதெல்லாம் அவர் முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஆத­ர­வாகச் செயற்­பட்டார்” என, தேரர் தொடர்பில் தனது நினை­வு­களை அமீன் பிபிசி யிடம் பகிர்ந்து கொண்டார்.

களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தேரர் படித்துக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட கோஷ்டி மோதல் ஒன்­றினை அடுத்து, அவர் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்டார். அதன் கார­ண­மாக அவரால் பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்ய முடி­ய­வில்லை. இருந்­த­போதும் ஜெர்மன் சென்று அவர் தனது பட்­டப்­ப­டிப்பை முடித்தார்.

பத்­தே­கம சமித தேரர், பௌத்­தத்தைப் பின்­பற்­றிய சிறந்த பிக்­கு­வா­கவும், அர­சி­யல்­வா­தி­யா­கவும், சமூக செயற்­பாட்­டா­ள­ரா­கவும் இருந்து, பல நல்ல பணி­களைச் செய்தார். தமிழ், முஸ்லிம் மக்­களை ‘சிறு­பான்­மை­யினர்’ என அழைக்கக் கூடாது என, சமித தேரர் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்தார்.

“கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஒவ்­வொரு வரு­டமும் நடை­பெறும் புத்­தகக் கண்­காட்­சி­களில் கலந்து கொள்­வ­தற்­காக, தனது சொந்த ஊரான பத்­தே­கம பிர­தே­சத்­தி­லுள்ள மாண­வர்­களை இவர் அழைத்து வருவார். அதற்­காக தனது சொந்த செலவில் பஸ் வண்­டியை வாட­கைக்குப் பெற்றுக் கொடுப்பார்” எனவும் அமீன் தெரி­வித்தார்.

பத்­தே­கம சமித தேரர், பௌத்­தத்தைப் பின்­பற்­றிய சிறந்த பிக்­கு­வா­கவும், அர­சி­யல்­வா­தி­யா­கவும், சமூக செயற்­பாட்­டா­ள­ரா­கவும் இருந்து, பல நல்ல பணி­களைச் செய்தார் என்­கிறார் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மெய்­யி­யல்­துறை மூத்த விரி­வு­ரை­யாளர் முபிஸால் அபூ­பக்கர்.
பட்­ட­தா­ரி­யான சமித தேரர், ‘மதங்­களின் ஒப்­பீடு மற்றும் மூன்றாம் உலக அபி­வி­ருத்தி’ எனும் தலைப்பில் இங்­கி­லாந்தில் ஆய்வுப் பட்­டத்தைப் பெற்றுக் கொண்­ட­தா­கவும் முபிஸால் குறிப்­பி­டு­கின்றார்.

தமிழ், முஸ்லிம் மக்­களை ‘சிறு­பான்­மை­யினர்’ என அழைக்கக் கூடாது என, சமித தேரர் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­த­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

“சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆத­ர­வாகப் பேசும் பௌத்த பிக்­கு­க­ளுக்கு அநே­க­மாக ஏனைய பௌத்த பிக்­கு­க­ளி­டத்தில் நல்ல பெயர் இருப்­ப­தில்லை. ஆனால், பத்­தே­கம சமித தேரர் பற்­றிய நல்­லெண்ணம் ஏனைய பௌத்த பிக்­கு­க­ளி­டத்தில் இருந்­தது” எனவும் முபிஸால் தெரி­வித்தார்.

“சிறு­பான்­மை­யி­ன­ருக்­காக சமித தேரர் தொடர்ச்­சி­யாக உரத்துப் பேசியும் பெயற்­பட்டும் வந்த போதிலும், சிறு­பான்மை மக்­க­ளி­டத்­தி­லி­ருந்து அவரின் அர­சி­ய­லுக்கு ஆத­ரவு கிடைக்­க­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தொரு விட­ய­மாகும்” எனக் கூறும் முபிஸால்; அதனை ஒரு குறை­யா­கவோ விமர்­ச­ன­மா­கவோ ஒரு­போதும் சமித தேரர் சுட்­டிக்­காட்­டி­ய­தில்லை எனவும் கூறினார்.

கொரோனா தொற்­றுக்கு ஏற்­க­னவே வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­றி­ருந்த தேரர் குண­ம­டைந்து அண்­மையில் தனது விகா­ரைக்குத் திரும்­பி­யி­ருந்தார். இந்த நிலை­யி­லேயே, மீண்டும் அவர் சிகிச்­சைக்­காக தனியார் வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்ட நிலையில் கால­மா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பத்­தே­கம சமித தேரரின் மறைவு தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும் தனது கவ­லை­க­ளையும், நினை­வு­க­ளையும் பகிர்ந்து வருகின்றனர். (பிபிசி)- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.