அக்குரணைக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

0 180

(எம்.எப்.அய்னா)
கண்டி -அக்­கு­ரணை பகு­தியில் பள்­ளி­வாசல் மீது குண்டுத் தாக்­குதல் நடாத்­தப்­ப­டலாம் என்ற உளவுத் தக­வலை அடுத்து, அப்­ப­குதி பூரண இரா­ணுவ மற்றும் பொலிஸ் பாது­காப்பின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. நேற்று (18) இரவு முதல் இந்த பாது­காப்பு நடைமுறை அமுல் செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் கீழ் செயற்­படும் 118 அவ­சர அழைப்பு இலக்கம் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்­றினை மையப்­ப­டுத்தி, பொலிஸ் மா அதிபர் ஊடாக கண்டி உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பப்பட்ட உளவுத் தக­வ­லுக்கு அமைய இந்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் திணைக்­க­ளத்தின் உயர் அதி­காரி ஒருவர் விடி­வெள்­ளிக்கு குறிப்­பிட்டார்.

இந் நிலையில், பொலிஸார் முன் வைத்த கோரிக்கை பிர­காரம் தாமும் அக்­கு­ரணை பிர­தே­சத்தின் பாது­காப்பை உறுதி செய்ய சிறப்பு படை­யி­னரை அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அவர்­களும் பாது­காப்பு பணியில் தொடர்ந்து ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ரவி ஹேரத் விடி­வெள்­ளிக்கு கூறினார்.

இந் நிலையில் பிர­தே­சத்தின் பாது­காப்பை உறுதி செய்ய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ள­தாக கண்­டிக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்­த­துடன், பொலிஸார், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

அதன்­படி மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என பாது­காப்பு தரப்­பினர் பொது­மக்­க­ளிடம் கோரிக்கை முன் வைத்­துள்­ளனர்.

இந் நிலையில் கிடைக்கப் பெற்­றுள்ள தக­வலை மையப்­ப­டுத்தி சிறப்பு விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்படும் நிலையில், அக்குரணை நகரில் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.