பல்லின சமூகங்களோடு பண்பாடுகளால் உறவைப் பலப்படுத்துவோம்

நிச்சயமாக நாம் ஆதமின் சந்ததியினரை கண்ணியப்படுத்தி விட்டோம், கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்தோம்.” (அல்இஸ்ராஃ: 70) உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். இந்தக் கண்ணியம் அல்லாஹ்வால் பொதுவாக மனித சமூகத்துக்கு வழங்கப்பட்டது. இது ஆதமின் அனைத்து சந்ததியினருக்கும் உரியது. அதே நேரம் அல்லாஹ், அவனது தூதர் முஃமின்களுக்கு விஷேட கண்ணியம் உள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “நிச்சயமாக நாம் உங்களை ஒரே பெண்ணிலிருந்தும் ஒரே ஆணிலிருந்தும் சிருஷ்டித்தோம். பின்னர் கோத்திரங்களாகவும்…

அழகிய குணங்களால் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவோம்

இஸ்லாமிய மார்க்கம் என்பது அன்பு, மனித நேயம், ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உயர்ந்த விழுமியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இவற்றை உலகில் மலரச் செய்து தானும் தன்னைச் சூழவுள்ளவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழியமைத்துக் கொடுப்பதே உண்மையான முஸ்லிமின் பணியாகும், இதனை உணர்ந்த உண்மையான முஸ்லிம் தனது நாவினாலோ கரத்தினாலோ பிற மனிதர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்கக் கூடியவனாக இருக்கவே மாட்டான். அதனால்தான் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை…

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

முஸ்லிம் என்பவன் தான் ஒரு முஸ்லிம் என்பதனை தனது பண்பாடுகள், நற்குணங்கள் மூலம் சமூகத்திற்குத் தெரியப்படுத்த முயற்சிக்க வேண்டும், ஒருவரது பண்பாடுகளிலும் நற்குணங்களிலும் உள்ள குறைபாடுகள் அவரது வணக்க வழிபாடுகளிலும் குறைபாடுகள் உள்ளன என்பதனையே பிரதிபலிக்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் எமக்கு கற்றுத்தரும் ஈமானின் அடிப்படை பண்புகளில் ஒன்றான வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்ற விடயத்தில் மிக எச்சரிக்கையுடனும் மிகக கவனமாகவும் நாம் செயற்பட வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்; "விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப்…

மார்க்கம் என்பது நன்மையை நாடுவதாகும்

"நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூ­லி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.” - அல்குர்ஆன் (18:88) நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது (பிறருக்கு) நன்மையை நாடுவது” என்று கூறியபோது, “யாருக்கு?” என நாங்கள் கேட்டோம்; அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) ஈமான் கொண்ட மனிதர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை சரியாக செய்து பிற மக்களுக்கு செய்ய வேண்டிய…