சாகிர் நாயிக், பீ.ஜே. இலங்கை வரவில்லை

ஊடக அறிக்கைகள் பொய்யானவை என்கிறார் சுஹைர்

0 687

பிர­ப­ல­மான இந்­திய இஸ்­லா­மிய பிர­சா­ர­கர்­க­ளான டாக்டர் சாகிர் நாயிக் மற்றும் பி.ஜெய்­னு­லாப்தீன் இரு­வரும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்பு இலங்கை வந்து  பிர­சா­ரங்­களை மேற்­கொண்­ட­தாக தேசிய பாது­காப்பு தொடர்­பான துறைசார் மேற்­பார்வை குழு அறிக்கை விட்­டுள்­ள­தாக வெளி­வந்­துள்ள செய்­திகள் முற்றும் பொய்­யா­ன­வை­யாகும். குறிப்­பிட்ட இரு பிர­சா­ர­கர்­களும் இலங்­கையில் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வு­மில்லை என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

லங்­கா­தீப மற்றும் டெய்லி மிரர் பத்­தி­ரி­கை­களில் குறிப்­பிட்ட இரு இஸ்­லா­மிய பிர­சா­ர­கர்­களும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு இலங்­கைக்கு வந்து அடிப்­ப­டை­வாத பிர­சா­ரங்­களை நிகழ்த்­தி­யுள்­ள­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திகள் தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பத்­தி­ரி­கை­களில் முக்­கிய செய்­தி­யாக பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் ஏப்ரல் 21 ஆம் திக­திய தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்பு எந்த திக­தியில் எந்த இடத்தில் அவர்கள் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு இலங்கை வர விசா வழங்­கப்­பட்­ட­தாக சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னத்­திடம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக எவ்­வித விப­ரங்­களும் செய்­தியில் உள்­ள­டங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எவ்­வித உறு­திப்­ப­டுத்­த­லு­மின்றி மக்­களை தவ­றாக வழி­ந­டத்தும் வகையில் இந்தச் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. தவ­றான செய்­தி­களை வெளி­யி­டு­வ­தனால் இலங்கை முஸ்­லிம்கள் மீது மத ரீதி­யான வெறுப்­பினைத் தூண்­டி­வி­டு­வ­தாக அமையும். இவ்­வா­றான செயற்­பா­டுகள் இலங்­கையின் சட்­டத்தை மீறு­வ­தாகும். குறிப்­பாக சர்­வ­தேச ICCPR மற்றும் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் விதி­களை மீறு­வ­தாகும்.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் எனக்­கூறி ஆரம்­பத்தில் முகத்­தி­ரைக்கு தடை விதிக்க வேண்­டு­மென பரிந்­துரை செய்­யப்­பட்­டது. ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட தீவி­ர­வா­திகள் முகத்தை மூடியோ, முகத்­திரை அணிந்தோ இருக்­க­வில்லை. அவர்கள் உயிரைப் பலி­யெ­டுக்கும் வெடி­குண்­டு­க­ளையே தமது பின்னால் பொதியில் சுமந்­தி­ருந்­தார்கள்.

முகத்­தி­ரைக்கு அல்­லது பின்னால் சுமக்கும் பொதி­க­ளுக்கு தடை­வி­திப்­பதன் மூலம் அல்­லது அகற்­று­வதன் மூலம் குற்றச் செயல்­களைக் குறைத்­து­விட முடி­யாது. மதங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களின் மூலம் தேசிய பாது­காப்­பினை அடைந்­து­விட முடி­யாது. மக்­க­ளுக்­கி­டை­யி­லான வேறு­பா­டு­களைக் களைந்து அவர்­களை மரி­யாதை செய்­வதன் மூலம், ஐக்­கி­யப்­ப­டுத்­து­வதன் மூலம் நல்­லி­ணக்­கத்தின் மூலமே தேசிய பாது­காப்­பினை அடைய முடியும். அர­சாங்கம் முஸ்­லிம்கள் இவ்­வா­றான விட­யங்­களை முன்­வைக்­கும்­போது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.

சில தீவி­ர­வா­திகள் முஸ்லிம் பெயரில் மேற்­கொள்ளும் கொலைச் செயல்­களை முழு முஸ்லிம் சமூ­கமும் ஒருபோதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, இஸ்­லா­மிய பிர­சா­ரகர் டாக்டர் சாகீர் நாயிக் தற்­போது இந்­தி­யாவில் இல்லை. அவர் அங்­கி­ருந்தும் வெளி­யேறி தற்­போது மலே­சி­யா­விலே தஞ்சம் புகுந்­துள்ளார். அவ­ருக்கு வெளி­நாட்டு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதால் அவர் மலே­சி­யா­விலே இருக்­கிறார்.

இஸ்லாமிய பிரசாரகர்களான டாக்டர் சாகிர் நாயக் மற்றும் ஜெய்னுலாப்தீன் இருவரும் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான எந்த அத்தாட்சிகளும் இல்லை. இலங்கையில் எங்கு பிரசாரங்களை மேற்கொண்டார்கள் என்பதற்கான அத்தாட்சிகளும் இல்லை. இவ்வாறான நிலையில் குறிப்பிட்ட பத்திரிகைகள் தவறான பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளமைக்கு பல சிவில் அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல் 

Leave A Reply

Your email address will not be published.