அ.இ.ம.கா. சில மாவட்டங்களில் சஜித் கூட்டணியில் போட்டியிடும்

ஏனைய மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடும் என்கிறார் ரிஷாத்

0 708

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சில மாட்­டங்­களில் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யிலும் சில மாவட்­டங்­களில் தனித்தும் போட்­டி­யி­டு­மென அக்­கட்­சியின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், நாடு­மு­ழு­வதும் தனித்துப் போட்­டி­யி­டு­மாறு எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச என்­னிடம் கூறி­ய­தாக பொய்­யான செய்­திகள் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இடம்­பெ­யர்ந்து புத்­த­ளத்தில் வாழும் அகதி மக்கள் மத்­தியில், நேற்­று­முன்­தினம் உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

“சஜித் பிரே­ம­தாச என்னை சந்­தித்­த­போது, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தனித்துப் போட்­டி­யிட வேண்­டா­மெ­னவும் கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­டு­மாறும் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதி­ல­ளித்த நான், எமது கட்சி சில மாவட்­டங்­களில் உங்கள் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்­பிலும், சில மாவட்­டங்­களில் தனித்தும் போட்­டி­யி­டு­மெனத் தெரி­வித்தேன். சிறு­பான்மை சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவ எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் நோக்­கி­லேயே, இவ்­வாறு நாங்கள் செயற்­பட முடிவு செய்­துள்­ளோ­மென தெரி­வித்தேன். இதுதான் உண்மை. எனினும், என்­னையும் எனது கட்­சி­யையும் எப்­ப­டி­யா­வது அழித்­து­விட வேண்­டு­மென்று அலைந்து திரி­கின்ற இன­வாத ஊட­கங்கள், இந்த விட­யத்தை திரி­பு­ப­டுத்தி, பொய்­களைப் புனைந்து வதந்­தி­களை பரப்­பி­யுள்­ளன.

அந்த ஊட­கங்­களின் செய்­தி­களில் இந்தப் புர­ளிக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டு­கி­றது.

சஜித் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பில் மக்கள் காங்­கி­ரஸின் வகி­பாகம் என்­ன­வென்­ப­திலும், அக்­கட்­சியின் முக்­கி­யத்­துவம் எந்­த­ள­வென்­ப­திலும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தெளி­வான விளக்கம் உண்டு.

புத்­த­ளத்தில் அமைந்­தி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான அகதி முகாம்கள் இன்று கிரா­மங்­க­ளா­கவும், மாதிரிக் கிரா­மங்­க­ளா­கவும் காட்­சி­த­ரு­வ­தற்கு, வன்னி சமூகம் நமக்குப் பெற்­றுத்­தந்த அர­சியல் அதி­கா­ரமே பிர­தான காரணம். அக­தி­க­ளாக நாம் வந்­த­போது, நமது பூர்­வீகக் கிரா­மங்கள் இருந்த நிலை­யிலும் ஒரு­படி மேலாக, புத்­த­ளத்தின் பல அகதி கிரா­மங்கள் வளர்ச்சி கண்­டன என்ற உண்­மையை நாம் மறுப்­ப­தற்­கில்லை. உறுதி இல்­லாத காணி­களில் கொட்­டில்­களை அமைத்­தி­ருந்தோம். மின்­சா­ரமும் குடி­நீரும் இல்­லாத வாழ்க்­கையும் நமக்கு அப்­போது இருந்­தது. இட­நெ­ருக்­க­டி­யுடன் பாட­சாலைக் கல்­விக்­காக ஏங்­கித்­த­வித்த மாண­வர்­க­ளுக்கும் சுகா­தார வசதிக் குறை­பாட்­டுடன் இருந்­த­வர்­க­ளுக்கும் அர­சியல் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி, அவர்­களின் தேவை­களைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கின்றோம்.

எனினும், வடக்கில் அமைதி ஏற்­பட்டு சமா­தானம் பிறந்த பிறகு, எமது மண்ணில் மீளக்­கு­டி­யேறும் தார்­மீகத் தேவை நமக்கு இருந்­தது. சொந்த மண்ணில் வாழக்­கூ­டா­தென்றே எம்மை விரட்­டி­ய­டித்­தனர். என­வேதான் அதற்கு மாற்­ற­மாக, சவால்­க­ளுக்கும் தடைகள் மற்றும் எதிர்ப்­பு­க­ளுக்கும் மத்­தியில், மீண்டும் நமது தாயக மண்ணில் கால் பதித்தோம். விரட்­டி­ய­வர்­களின் எதிர்­பார்ப்பை உடைத்­தெ­றிந்தோம். துரத்­தப்­பட்ட நோக்­கத்தை தகர்த்தோம். வேரோடு பிடுங்­கப்­பட்டு விரட்­டப்­பட்ட நாம், மீண்டும் குடி­யே­று­வதில் வெற்­றி­கண்டோம்.

வன்னிப் பிர­தே­சத்தில் அபி­வி­ருத்­தியில் கூடிய கரி­சனை செலுத்­தி­ய­த­னால்தான், இந்தப் பிர­தே­சங்­களை மேலும் அபி­வி­ருத்தி செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டது. எதிர்­வரும் காலங்­களில் இவற்­றிலும் கூடியகவனம் செலுத்துவோம்.

எமக்கு ஆதரவான வன்னி மாவட்ட சிறுபான்மை சமூகத்தை பிரிக்கவும், விலைகொடுத்து வாங்கவும், அவர்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தவும் ஒரு கூட்டம் திரிகின்றது. இதன்மூலம் எம்மைத் தோற்கடிப்பதும், பழிவாங்குவதும், எமது அதிகாரத்தை பிடுங்குவதும் அதன்மூலம், தாம் நினைத்தவற்றை எல்லாம் சாதிப்பதுமே இவர்களின் இலக்காகும்” என்றார்.-vidivelli

  • ரஸீன் ரஸ்மின்

Leave A Reply

Your email address will not be published.