இளைஞர் பாராளுமன்றம் தேர்தலில் 38 முஸ்லிம் இளைஞர்கள் வெற்றி

0 971

தேசிய இளை­ஞர் மன்­றத்தின் செயற்­றிட்­டத்­திற்­க­மைய இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்தல் வாக்­குப்­ப­தி­வுகள் நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் பிர­தேச செய­ல­கங்­களில் இடம்­பெற்­றன. இதில் 38 முஸ்லிம் இளை­ஞர்கள் வெற்­றி­பெற்­றுள்­ளனர்.

331 பிர­தி­நி­தி­களை தெரி­வு­செய்­வ­தற்­காக 1005 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யி­ருந்­தனர்.

இதில் 159 முஸ்லிம் வேட்­பா­ளர்­களும் நாட்டின் பல்­வேறு பிர­தேச பிரி­வு­க­ளிலும் போட்­டி­யிட்­டி­ருந்­தனர்.

இலத்­தி­ர­னியல் ரீதியில் இடம்­பெற்ற வாக்­குப்­ப­தி­வுகள் சனிக்­கி­ழமை காலை 8.30 மணி முதல் மாலை நான்கு மணி­வரை 331 பிர­தேச செய­ல­கங்­க­ளிலும் இடம்­பெற்­றன.

ஒட்­டு­மொத்­த­மாக நாட­ளா­விய ரீதியில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அதிக வாக்­கு­களை பேரு­வளை தொகு­தியில் போட்­டி­யிட்ட முஹம்­மது சாதிக் அஹ­மதும் (870 வாக்­குகள்) இரண்­டா­வது அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களை கிண்­ணி­யாவைச் சேர்ந்த ரஹ்­ம­துல்லாஹ் முஹம்­மது சபானும் (740 வாக்­குகள்) பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். இவர்கள் இரு­வரும் மாத்­தி­ரமே நாட­ளா­விய ரீதியில் 700 க்கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்­ற­வர்­க­ளாவர்.

அத்­துடன் மாவ­னெல்லை தொகுதி, முசலி தொகுதி என்­ப­வற்றில் அதி­க­மான முஸ்லிம் வாக்­குகள் பதி­யப்­பட்­டி­ருந்­தாலும் அங்கு அதி­க­மான முஸ்லிம் இளைஞர், யுவ­திகள் கள­மி­றங்கி வாக்­குகள் சித­ற­டிக்­கப்­பட்­ட­மையால் பிர­தி­நி­தித்­துவம் இழக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­துடன், கெக்­கி­ராவை தொகு­தியில் போட்­டி­யிட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஒரு வாக்­கு­வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார். அங்கும் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

கிழக்கு மாகா­ணத்தில் கூடு­த­லான முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் பெறப்­பட்­டுள்­ளது. இது­த­விர கிழக்­கிற்கு வெளியே அனு­ரா­த­புர மாவட்­டத்தில் அதிக இளை­ஞர்கள் வெற்­றி­பெற்­றி­ருக்­கின்­றனர். பொலன்­ன­றுவை, மொன­ரா­கலை, பதுளை, குரு­நாகல், கண்டி, மாத்­தளை, புத்­தளம் மாவட்­டங்­களில் பிர­தி­நி­தித்­துவம் பெறப்­பட்­டுள்­ளது.-Vidivelli

  • எஸ்.என்.எம்.ஸுஹைல் 

Leave A Reply

Your email address will not be published.