சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி: சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம்; அரசாங்கம் அறிவிப்பு

0 928

இலங்­கையின் 72 ஆவது தேசிய சுதந்­திர தினக் கொண்­டாட்ட நிகழ்­வு­க­ளுக்­கான ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. அத்­துடன், தேசிய சுதந்­தி­ர­தின நிகழ்வின் போது சிங்­கள மொழியில் தேசிய கீதத்தை இசைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. எனினும், தேசிய கீதம் இசைக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் ஒவ்­வொ­ரு­வரும் அவ­ரவர் தாய் மொழியில் பாட­மு­டியும் என்று பொது நிர்­வாக மற்றும் உள்­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

பெப்­ர­வரி 4 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள சுதந்­திர தினக் கொண்­டாட்ட நிகழ்­வு­க­ளுக்­கான ஏற்­பா­டுகள் பற்­றிய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று வியா­ழக்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்­றது. இதன்­போது தேசிய கீதம் இசைத்தல் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் இதனைத் தெரி­வித்தார்.

தொடர்ந்தும் சுதந்­திர தினக் கொண்­டாட்ட ஏற்­பா­டுகள் தொடர்பில் தெரி­வித்த அவர்,

‘ பாது­காப்பான தேசம் – சௌபாக்­கி­ய­மான நாடு ‘ என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் இம்­முறை சுதந்­திர தினத்தைக் கொண்­டா­டு­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. அமைச்­ச­ரவை அனு­ம­தி­யுடன் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட தேசிய குழு­வினால் இந்த ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மத வழி­பா­டுகள்

பெப்­ர­வரி 2 ஆம் திகதி இரவு 9.30 மணி­முதல் மறுநாள் (பெப்­ர­வரி 3) காலை 5.30 மணி வரை மத வழி­பா­டுகள் இடம்­பெறும். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ என்­போரும் ஏனைய அமைச்­சர்கள் உள்­ளிட்ட பலரும் இந்­நி­கழ்வில் கலந்து கொள்­வார்கள். பௌத்த சாசன அமைச்சின் பணிப்­பாளர் நாய­கத்­தினால் இந்த ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

சுதந்­திர தினத்­தன்று (பெப்­ர­வரி 4) பௌத்த மத வழி­பா­டுகள் காலை 7.30 மணிக்கு கொள்­ளு­பிட்டி – தர்­ம­கீர்த்­தி­ராம விகா­ரை­யிலும், இந்து மத வழி­பா­டுகள் கொழும்பு 7, மயூ­ரா­பதி ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆல­யத்­திலும், கத்­தோ­லிக்க மத வழி­பா­டுகள் காலை 6.15 க்கு பம்­ப­ல­பிட்டி புனித மரியாள் தேவா­ல­யத்­திலும், இஸ்லாம் மத வழி­பா­டுகள் காலை 6.25 க்கு கொழும்பு – 03 கொள்­ளு­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­ச­லிலும் இடம்­பெ­ற­வுள்­ளன.

நிகழ்வில் கலந்து கொள்வோர்

ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இலங்­கைக்­கான வெளி­நாட்டுத் தூது­வர்கள் உள்­ளிட்ட விஷேட உறுப்­பி­னர்கள் 2500 பேர் சுதந்­திர தினக் கொண்­டாட்ட நிகழ்­வு­களில் கலந்து கொள்­ள­வுள்­ளனர். அத்­தோடு பொது­மக்கள் 1000 பேர் கலந்து கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

விஷேட வெளி­நாட்டுப் பிர­தி­நி­திகள் யாரும் கலந்து கொள்­ளப்­போ­வ­தில்லை. எனினும் இலங்­கைக்­கான தூத­ரங்கள் இல்­லாத நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முப்­ப­டை­யி­னரின் மரி­யாதை அணி­வ­குப்பு

சுதந்­திர தினத்­தன்று இடம்­பெ­ற­வுள்ள மரி­யாதை அணி­வ­குப்பில் 4325 இரா­ணு­வத்­தி­னரும், 868 கடற்­ப­டை­யி­னரும், 815 விமா­னப்­ப­டை­யி­னரும், 1382 பொலி­ஸாரும் , 515 சிவில் பாது­காப்புப் பிரி­வி­னரும், 355 தேசிய மாண­வ­ர­ணி­யி­னரும் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

கலா­சார அணி­வ­குப்பில் முப்­ப­டை­யினர், பொலிஸார், சிவில் பாது­காப்பு திணைக்­களம், தேசிய இளைஞர் சேவை மன்றம், மாகா­ண­சபை மற்றும் கலா­சார மத்­திய நிலை­யத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 451 கலை­ஞர்கள் பங்­கு­பற்­று­வார்கள்.

டீ.எஸ்.சேனா­நா­யக்­காவின் நினை­வு­தினம்

டீ.எஸ்.சேனா­நா­யக்­காவின் நினைவு தினம் சுதந்­திர சதுக்­கத்தில் சுதந்­திர தினத்­தன்று காலை 08.8 க்கு அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் மலர்­வ­ளையம் வைக்­கப்­பட்டு அனுஷ்­டா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­படும்.

தேசிய கொடி­யேற்றல் -மின்­வி­ளக்கு அலங்­காரம்

சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாளை முதல் பெப்­ர­வரி 7 ஆம் திகதி வரை அரச திணைக்­க­ளங்கள் போன்றவற்றில் ஒரு வார காலத்திற்கு தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலும் பெப்ரவரி 3, 4 ஆம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்கள் சிலவற்றில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் மரநடுகை

சுதந்திர தினத்தன்று நாடளாவிய ரீதியில் மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.