மத்திய மாகாண அரசியல் ஒன்றியத்தின் முயற்சி வெற்றியளிக்குமா?

0 958

“மொட்டு கட்­சியில் கண்டி மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்யும் முக்­கிய கூட்டம் ஒன்று 17 ஆம் திகதி வெள்­ளி­யன்று நடை­பெ­ற­வுள்­ளது. மத்­திய மாகாண அர­சியல் ஒன்­றியம் இதனை ஏற்­பாடு செய்­துள்­ளது. கண்டி மாவட்ட ஜம்இ­ய்­யத்துல் உல­மாவும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ள­னமும் இணைந்தே சென்­ரல் புரோவின்ஸ் பொலி­டிகல் போரம் என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது” என்ற செய்தி ஊடகங்களில் வெளி­யா­கி­யிருந்தது.

இந்­த செய்­தி­யை முழு­மை­யாக வாசிக்கும் போது எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் கண்டி மாவட்­டத்தில் மொட்டு கட்சி சார்­பாக கள­மி­றங்­க­வுள்ள பாரிஸ் ஹாஜி­யாரை வெற்­றி­ய­டைய செய்யும் ஒரு முயற்­சி­யாக இக்­கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக விளங்­கி­னாலும், பாரிஸ் ஹாஜியார் இக்­கூட்­டத்தில் கலந்து கொள்ள­வில்லை என்றும் மொட்டு கட்­சியில் போட்­டி­யிட முயற்­சித்துக் கொண்­டி­ருக்கும் புர்கான் ஹாஜி­யாரும், இஸ்­தி­காரும் கலந்து கொண்­டனர் என்றும் மூன்று போட்­டி­யா­ளர்­க­ளி­னதும் ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொண்­ட­தா­கவும் அறியக் கிடைத்­தது. எப்­ப­டி­யா­யினும் கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உல­மாவும், கண்டி மாவட்ட மஸ்­ஜி­து­களின் சம்­மே­ள­னமும் இணைந்து சென்ரல் புரோவின்ஸ் பொலி­டிகல் போரம் அல்­லது மத்­திய மாகாண அர­சியல் ஒன்­றியம் என்ற பெயரில் அமைப்­பொன்றை ஏற்­ப­டுத்தி கண்டி மாவட்­டத்தில் மொட்டு கட்­சியில் முஸ்லிம் ஒரு­வரை வெற்­றி­ய­டையச் செய்யும் முயற்­சி­யாக தெரி­கின்­றது. இதற்கு முக்­கிய மூன்று கார­ணங்கள் இருக்­கலாம். முத­லா­வது ஆளும் கட்­சியில் முஸ்லிம் ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும் என்­பது.

இரண்­டா­வது, ஜனா­தி­பதி உட்­பட ஆளும் கட்சி தலை­வர்கள், முஸ்­லிம்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்று சொல்­லப்­படும் குற்­றச்­சாட்டை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு, மூன்­றா­வது ஒரு வகை­யான அச்சம், எப்­ப­டியோ ஆளும் கட்­சியின் சார்பில் ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தெரிவு செய்ய முடிந்தால் நல்­ல­துதான் என்­ப­தற்கு மாற்றுக் கருத்து இருக்க மாட்­டாது. இருந்­தாலும் இங்கு முக்­கி­ய­மாக கவ­னிக்க வேண்­டிய விடயம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அல்­லது கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உலமா இது­வரை அர­சியல் சாயம் பூசிக் கொள்­ள­வில்லை. பத­விக்கு வரும் அர­சாங்­கங்­க­ளுக்கு ஆத­ர­வாக இணைந்து செயல்­பட்­டனர். முதன்­மு­த­லாக கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உலமா அர­சியல் களத்தில் இறங்­கி­யுள்­ள­தாக விளங்­கு­கின்­றது. அநே­க­மான பொது மக்­க­ளி­னது கருத்தும் ஜம்­இய்­யத்துல் உலமா சபை அர­சியல் சாயம் பூசிக்­கொள்ளக் கூடாது என்­ப­துதான். அடுத்­தது கண்டி மாவட்ட மஸ்­ஜி­து­களின் சம்­மே­ளனம் அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைத்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அர­சியல் சாயத்தை பூசிக் கொள்­வதால் சம்­மே­ள­னத்தின் வளர்ச்சி எப்­படி அமையும் என்­பது யோசிக்க வேண்­டி­யுள்­ளது.

ஏனென்றால் சம்­மே­ள­னத்தில் பல­த­ரப்­பட்ட கட்­சியை சார்ந்­த­வர்கள் இருக்­கலாம்.

எப்­படி இருப்­பினும் ஒரு முயற்­சியில் காலடி வைத்­துள்­ளார்கள். இம்­மு­யற்­சியை எப்­படி வெற்­றி­ய­டைய செய்­யலாம் என பார்ப்போம். கண்டி மாவட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐந்து வீதத்­துக்கு குறைந்த முஸ்லிம் வாக்­கு­களே மொட்டு கட்­சிக்கு கிடைத்­துள்­ளன. 2015 ஜனா­தி­பதி தேர்­த­லிலும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அப்­ப­டியே கிடைத்­தது. ஆனால் கண்டி மாவட்­டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி முஸ்­லிம்­களின் ஆத­ரவு சுமார் 25 வீதம் இருந்து வந்­துள்­ளதை 2015 ஆம் ஆண்­டுக்கு முன் நடை­பெற்ற தேர்தல் முடி­வு­களை அவ­தா­னித்தால் விளங்கும். கண்டி மாவட்­டத்தில் சுமார் ஒரு இலட்சம் முஸ்­லிம்கள் தான் வாக்­க­ளிக்­கின்­றனர். அப்­ப­டி­யானால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி சார்ந்த அனை­வரும் வாக்­க­ளித்­தாலும் 25 வீதம் என்­பது 25000 வாக்­குகள். கண்டி மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை இம்­முறை பொதுத் தேர்­தலில் மொட்டுக் கட்­சி­யாக இருந்­தாலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக இருந்­தாலும் சுமார் 70 – 75 ஆயிரம் விருப்பு வாக்­குகள் பெற்றால்தான் ஒரு அபேட்­சகர் வெற்­றி­ய­டைய முடியும். ஆகவே மொட்டு கட்சி வேட்­பா­ளரை வெற்­றி­ய­டைய செய்ய இன்னும் சுமார் 40 – 50 ஆயிரம் முஸ்லிம் வாக்­கு­களை மொட்டு கட்சி பக்­கம் இழுக்க வேண்டும். சரி எப்­ப­டியோ அப்­படி முஸ்­லிம்­களை மொட்டு கட்சிப் பக்கம் திருப்பும்போது ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் போட்­டி­யிடும் இரு முஸ்­லிம்­களும் நிச்­சயம் தோல்­வி­ய­டைவர். ஆகவே முஸ்­லிம்­களை மாற்றி மொட்டு கட்­சிக்கு வாக்­க­ளிக்க வைக்கும்போது எமக்கு இரண்டு முஸ்லிம் வேட்­பா­ளர்­களை நிறுத்­து­மாறு கட்சி மேலி­டத்தில் கட்­டாயம் வேண்­டுகோள் விடுக்க வேண்டும். அப்­ப­டி­யானால் தான் பல வரு­டங்­க­ளாக பாது­காத்து வந்த இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இதில் இன்னும் ஒரு முக்­கிய விட­யம்தான். ஏற்­க­னவே கூறி­ய­படி மொட்டு கட்­சிக்கு இன்னும் 40 – 50 வாக்­கு­களை திருப்பிக் கொள்ள முடி­யாமல் போய் ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பா­க­வுள்ள சுமார் 20 – 25 முஸ்லிம் வாக்­கு­களை மட்டும் திருப்ப முடிந்தால் மொட்டு கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி இரண்டு கட்­சி­க­ளிலும் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் தோல்­வி­ய­டை­வார்கள்.

ஏனென்றால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உள்ள 20 – 25 முஸ்லிம் வாக்­குகள் குறையும் போது அதில் கேட்கும் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் 40 – 50 இற்கு மேல் வாக்­குகள் பெறமுடி­யாது. அதேபோல் மொட்டு கட்­சியில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளரும் தோல்­வி­ய­டைவார். அப்­படி வாக்­கு­களை பிரித்து போட்டு இரண்டு கட்­சி­க­ளிலும் போட்­டி­யிட்ட முஸ்லிம் வேட்­பா­ளர்கள் தோல்­வி­யுற்றால் 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக பாது­காத்து வந்த கண்டி மாவட்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை இழந்து விடுவோம். அப்­படி ஒரு நிலை ஏற்­பட்டால் கண்டி மாவட்ட ஜம்­இய்யத்துல் உலமா, கண்டி மாவட்ட மஸ்­ஜி­து­களின் சம்­மே­ளனம் சார்ந்த மத்­திய மாகாண அர­சியல் ஒன்­றியம் முஸ்­லிம்­களின் பெரும் பழிச்­சொல்­லுக்கு ஆளாக நேரிடும்.

ஆகவே, கண்டி மாவட்ட ஜம்இய்­யத்துல் உலமா, கண்டி மாவட்ட மஸ்­ஜி­து­களின் சம்­மே­ளனம் மற்றும் மத்­திய மாகாண அர­சியல் ஒன்­றியம் கட்சி மேலி­டத்­துடன் பேசி உறு­தி­மொழி பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்­பிட்ட விருப்பு வாக்­குகள் முஸ்லிம் வேட்­பாளர் பெற்றும் கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் எவரும் வெற்­றி­பெ­றா­விட்டால் தேசிய பட்­டியல் மூலம் கண்டி மாவட்­டத்­துக்கு ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்க வேண்டும் என்று அப்­படி இல்­லா­விட்டால் கையில் உள்ள பற­வையை பறக்­க­விட்டு மரத்தில் உள்ள பற­வையைப் பிடிக்க போன கதை­யா­கி­விடும். 

அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் கட்சி தலை­மை­ய­கத்­துடன் பேசி உறு­தி­மொழி பெற்றுக் கொள்ள வேண்டும். முஸ்­லிம்கள் எவரும் தெரிவாகாத பட்சத்தில் தேசிய பட்டியல் மூலம் முஸ்லிம் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்று.

இரண்டு கட்சிகளும் சுமார் 40 ஆயிரத்துக்கு குறையாமல் வாக்குகள் பெற்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றியடையாவிட்டால் தேசிய பட்டியல் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என உறுதிமொழி பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

ஏனென்றால் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஓரளவு பெறக்கூடிய மாவட்டங்கள் கொழும்பு – கண்டி மட்டுமே. இம்மாவட்டங்களிலும் எமது பிரதிநிதித்துவத்தை இழந்துவிட்டால் மீண்டும் எப்போதும் பெற முடியாமல் போய்விடும்.-Vidivelli

  • அபூ ரனாஸ்

Leave A Reply

Your email address will not be published.