மாகாண சபை முறைமையில் எனக்கு உடன்பாடில்லை

0 1,328

மாகாண சபைகள் எப்­போதும் மத்­திய அர­சாங்­கத்தின் கீழேயே செயற்­பட வேண்டும். அதனை மீறி தன்­னிச்­சை­யாக செயற்­பட முயற்­சிக்­கும்­போது தேவை­யற்ற பல பிரச்­சி­னைகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளன. மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் இல்­லா­விட்டால் மாகா­ணங்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாகும். இந்த தனி­மைப்­ப­டுத்­த­லுக்கும் பிரி­வி­னை­வா­தத்­திற்கும் நான் எப்­போதும் எதி­ரா­கவே இருக்­கிறேன் என கிழக்கு மாகா­ணத்தின் முத­லா­வது பெண் ஆளு­ந­ரான அனு­ராதா யஹம்பத் ‘விடிவெள்ளி‘ க்கு வழங்­கிய பிரத்தியேக செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.

ஆளுநர் எனும் பொறுப்புவாய்ந்த பத­வி­யொன்று கிடைக்­கு­மென்று நீங்கள் எதிர்­பார்த்­தி­ருந்தீர்­க­ளா?

நான் ஒரு தகு­தி­வாய்ந்த ஆடை வடி­வ­மைப்­பாளர் என்ற வகையில் தனியார் துறையில் பல்­வேறு வி­யாபார செயற்­றிட்­டங்­களை கடந்த பல தசாப்­தங்­க­ளாக முன்­னெ­டுத்­தி­ருந்தேன். அத்­துடன் ஆளு­ந­­ராகப் பத­வி­யேற்கும் வரை தனி­யார்­ து­றையில் பல்­வேறு பதவி நிலை­களில் கட­மை­யாற்­றி­யுள்ளேன்.

சர்­வ­தே­சத்தின் தலை­யீடு எமது நாட்­டுக்கு ஒரு­போதும் சிறந்­த­தல்ல. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் வெளி­நா­டு­களின் தலை­யீடு எமது நாட்டில் கடு­மை­யாக காணப்­பட்­டது. அது­மாத்­தி­ர­மல்­லாமல் நாட்டின் இறை­மைக்குப் பாதிப்­பேற்­ப­டக்­கூ­டிய பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­ட்டன. இதன்­போது நாட்டின் இறை­மையைப் பாது­காக்கும் வகையில் ஜெனி­வா­வி­லுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேரவை உள்­ளிட்ட பல சர்­வ­தேச மாநா­டு­களில் நாட்­டுக்­காக வேண்டி தொடர்ச்­சி­யாக குரல்­கொ­டுத்து வந்தேன்.

இந்தக் கால­கட்­டங்­களில் அர­சாங்க அதி­கா­ரி­யாக இணைவேன் என்று ஒரு­போதும் நான் நினைக்­க­வில்லை. இந்த நிலை­யி­லேயே கிழக்கு மாகாண ஆளுநர் பதவி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் எனக்கு வழங்­கப்­பட்­டது.

இதனை நான் ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை. கடந்த நவம்பர் மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்­றி­பெற்று இரண்டு நாட்­களின் பின்னர் இந்த நிய­மனம் தொடர்பில் என்­னிடம் அறி­வித்தார்.

அர­சாங்­கத்தில் இது­போன்ற பெரிய பத­வி­யொன்று கிடைக்­கு­மென்று எதிர்­பார்க்­க­ாமலி­ருந்த எனக்கு அந்த தகவல் அதிர்ச்­சியையே ஏற்­ப­டுத்­தி­யது.
எனினும், குறித்த சம­யத்தில் எனக்குத் தீர்­மா­ன­மொன்றை எடுக்க முடி­யா­ம­லி­ருந்­தது. இது தொடர்பில் எனது பிள்­ளை­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர் சிறந்த தீர்­மா­ன­மொன்றை மேற்­கொண்டேன்.

இந்தப் பத­வி­யி­னூ­டாக நாட்­டுக்கு சிறந்த முறையில் சேவை­யாற்ற கிடைத்த ஒரு சந்­தர்ப்பம் என்­ற­ப­டி­யினால் குறித்த பத­வி­யினை பொறுப்­பேற்­றுள்ளேன். இந்த ஆளுநர் பத­வியின் ஊடாக கிழக்கு மாகாண மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் சிறந்த சேவை­யினை மேற்­கொள்வேன் என்ற நம்­பிக்கை என்­னிடம் உள்­ளது.

ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் எவ்­வா­றான சவால்­களை நீங்கள் எதிர்­நோக்­கு­கின்­றீர்கள்?

நானும் எனது குடும்­பமும் கொழும்பில் வாழ்ந்து வந்த நிலையில் இந்தப் பத­வியை அடுத்து நான் கிழக்கு மாகா­ணத்தில் அதிக நேரத்­தினை செல­வ­ழிக்க வேண்­டி­யுள்­ளது.

இதனால் எனது குடும்­பத்தைப் பிரிந்து வாழ­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளமை ஒரு சவா­லான விட­ய­மாகும். அது­போன்று அதிக நேரம் வாக­னத்தில் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர், சுமார் 15 மணித்­தி­யா­லங்கள் தொடர்ச்­சி­யாக வாக­னத்தில் பய­ணித்த நாட்­களும் உண்டு.

கிழக்கு மாகா­ணத்­திற்கு சென்­ற­போது அங்கு அர­சியல் ரீதி­யாக மக்கள் வேறுபடுத்­தப்­ப­டு­வதை என்னால் நேர­டி­யாக உணர முடிந்­தது. இதனைக் கண்டு நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன். எமது நாட்­டுக்கு இது­வொரு புதிய விட­ய­மாகும். இது­போன்ற விட­யங்­க­ளினால் நாட்டில் ஒரு போதும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. இதனை முற்­றாக ஒழிக்க வேண்டும்.

இந்த அனைத்து சவால்­க­ளையும் கையா­ளக்­கூ­டிய திறன் என்­னி­ட­முள்­ள­மை­யினால் இது­போன்ற சவால்­களை சாத­க­மாக எடுத்து அப்­பி­ராந்­திய மக்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் சிறந்த சேவை­களை மேற்­கொள்­ள­வுள்ளேன்.

கிழக்கு மாகா­ணத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு எவ்­வா­றான திட்­டங்­களை ­வைத்­துள்­ளீர்கள்?

கிழக்கு மாகாணம் இன்று ஒரு பின்­தங்­கிய மாகா­ண­மாக உள்­ளது. இந்த மாகா­ணத்தில் நிலவும் வறு­மையை ஒழிப்­பதே எனது பிர­தான இலக்­காகும். அது­போன்று மக்­களின் வாழ்க்கை தரத்­தி­னையும் அதி­க­ரிக்க வேண்­டி­யுள்­ளது. இந்த மாகா­ணத்­தி­லுள்ள அனைத்­தின மக்­களும் சந்­தோ­ச­மா­கவும் ஒற்­று­மை­யா­கவும் வாழ­வேண்டும்.

இந்த மாகா­ணத்­தி­லுள்ள சில அர­சி­யல்­வா­திகள் இனங்கள் மத்­தியில் பாரிய இடை­வெ­ளி­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமையை தெளி­வாக உணர முடி­கின்­றது. இதனை இல்­லா­ம­லாக்கி அனைத்­தின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய பாரிய பொறுப்­பொன்று என்­னிடம் உள்­ளது.

மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் இந்த மாகாண மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை நேர­டி­யாக என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது. இதற்­க­மைய மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்ட மக்­களை பல்­வேறு வழி­களில் தர­மு­யர்த்த வேண்­டி­யுள்­ளது. இது­தொ­டர்பில் எந்­த­வித இன வேறுபாடு­மின்றி மக்­க­ளுக்கு சேவை­யாற்­ற­வுள்ளேன்.

குறிப்­பாக, இந்த மாகாண மக்கள் சமுர்த்தி போன்ற அரச மானி­யங்­களில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய நிலையை மாற்­றி­ய­மைக்கத் திட்­ட­மிட்­டுள்ளேன். அதே­போன்று அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் பொது­மக்­களின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மாகும். இந்த செயற்­பாடு தற்­போது கிழக்கு மாகா­ணத்தில் இல்­லாமல் பொது­மக்கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த செயற்­பாடு மாகா­ணத்­தி­லுள்ள அர­சி­யல்­வா­தி­க­ளி­னா­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­­ளது. இதனை தவிர்த்து எதிர்­கா­லத்தில் பொது­மக்­களின் பங்­கு­பற்­ற­லு­ட­னான அபி­வி­ருத்தி திட்­டங்­களை எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்­க­வுள்ளேன்.

பெண் தொழில் முற்­சி­யா­ள­ரான நீங்கள் மாகா­ணத்தின் முத­லா­வது பெண் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இம் மாகா­ணத்­தி­லுள்ள பெண்­களின் விட­யத்தில் எவ்­வா­றான செயற்திட்டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளீர்கள்?

இன்று, பெண்­களின் பிரச்­சினை ஒரு முக்­கிய பிரச்­சி­னை­யாகும். நானு­மொரு பெண் என்ற அடிப்­ப­டையில் பெண்­களின் பிரச்­சி­னைக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் தீர்­வுகள் வழங்­கப்­படும்.

அதே­வேளை, மாகா­ணத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வித­வைகள் உள்­ளனர். இவர்­களில் அதி­க­மா­ன­வர்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லேயே உள்­ளனர். இது­வொரு முக்­கிய விட­ய­மாகும். இது தொடர்பில் அதிக கவனம் செலுத்­த­வுள்ளேன்.

அதே­போன்று, பெண் முயற்­சி­யாளர் என்ற அடிப்­ப­டையில் மாகா­ணத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தற்­போது விரி­வாக ஆராய்ந்து வரு­கின்றேன். இதற்­க­மைய வைத்­தி­ய­சா­லை­களில் வைத்­தியர் பற்­றாக்­கு­றையும் பாட­சா­லை­களில் ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையும் நிலவுவதை அறிய முடிந்­தது.

இதற்குப் பிர­தான காரணம் மாகா­ணத்­தி­லுள்ள வளங்கள் ஒழுங்­கான முறையில் முகா­மைத்­துவம் செய்­யப்­ப­டா­மை­யே­யாகும். இதற்­கான தீர்வுகளை காணவுள்­ள­துடன், இதற்குத் தேவை­யான தர­நிர்­ண­ய­மொ­ன­றையும் அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளேன். இத­னூ­டாக வளங்­களின் வீண்­வி­ர­யங்­களை பாரி­ய­ளவில் குறைக்க முடியும்.

மாகா­ணத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்­ப­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளீர்கள்?

எமது நாடு பின்­தங்­கிய வறு­மை­யான நாடாக காணப்­ப­டு­வ­தற்கு பிர­தான காரணம் ஊழ­லாகும். இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்­பாட்­டினை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. இதற்கு எதி­ராக பல்­வேறு செயற்­றிட்­டங்­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுத்­துள்ளார்.

அந்த திட்­டங்­களை நான் கிழக்கு மாகா­ணத்­திலும் முன்­னெ­டுக்­க­வுள்ளேன். மாகா­ணத்­தி­லுள்ள எந்­த­வொரு அரச அதி­கா­ரி­களும் இலஞ்சம் பெற்றால் அவர்­க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுப்பேன்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், கடந்த வருட இறு­தியில் மாகாண ஆளுநர் என்ற அடிப்­ப­டையில் எனக்கு வழங்­கப்­பட்ட எந்­த­வொரு பரிசுப் பொருட்­களையும் நான் பொறுப்­பேற்­காமல் அனைத்­தையும் உரிய நபர்­க­ளுக்கே திருப்­பி­ய­னுப்­பி­விட்டேன். குறிப்­பாக பேனா அல்­லது கேக்­கைக்­கூட நான் எடுக்­க­வில்லை.

பரி­சுப்­பொ­ருட்­களை வழங்கி என்னை வாங்க முடி­யாது எனும் செய்­தியை தெளி­வாக கூறும் அடிப்­ப­டை­யி­லேயே இதனை மேற்­கொண்­ட­துடன், இலஞ்ச விட­யத்தில் ஏனைய அரச அதி­கா­ரி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக செயற்­படும் விட­யத்­திலும் இதனை மேற்­கொண்டேன்.

13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதி­கார பர­வ­லாக்கம் தொடர்பில் தங்­களின் நிலைப்­பாடு என்ன?

மாகாண மட்­டத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் சில சம­யங்­களில் இந்த அதி­காரப் பர­வலாக்கம் அவ­சி­ய­மாகும். இந்த அதி­காரப் பர­வ­லாக்கம் இல்­லா­விடின் மாகா­ணங்­களில் பிரச்­சி­னைகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது.

எனினும், இது மத்திய அரசின் கீழே எப்­போதும் செயற்­பட வேண்டும். தற்போது நான் ஆளுநராக உள்ளபோதும் இந்த மாகாண சபை முறைமை செயற் பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. 13 ஆவது சட்டமூலம் ஒரு வெள்ளை யானையாகும். இதன் மூலம் அதிக செலவுகளே நாட்டுக்கு ஏற்படுகின்றன.

குறிப்பாக அபிருவித்தியைவிட இந்த மாகாண சபை முறைமையின் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவே அதிக நிதியொதுக்கப்படுகின்றது. மாகாண சபைகள் எப்போதும் மத்திய அரசாங்கத்தின் கீழேயே செயற்பட வேண்டும். அதனை மீறி தன்னிச்சையாக செயற்பட முயற்சிக்கும்போது தேவையற்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகளுள்ளன.

அதுமாத்திரமல்லாமல் மத்திய அரசாங்கத்தின்கீழ் இல்லாவிட்டால் மாகாணங்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்த தனிமைப்படுத்தலுக்கும் பிரிவினைவாதத்திற்கும் நான் எப்போதும் எதிராகவே இருக்கிறேன்.

இதுவொரு சிறிய நாடாகும். இதனால் இதன் நிர்வாகமும் ஒரு சிறிய முறையில் காணப்படுகின்றது. இதனால் அனைத்தின மக்கள் மத்தியிலும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும்.-Vidivelli

  • நேர்­கண்­டவர்: றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.