மிலேனியம் செலன்ஞ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால்: ஈராக்குக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஏற்படும்

இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

0 777

மிலே­னியம் செலன்ஞ் கோப்­ப­ரேஷன் ஒப்­பந்­தத்தில் அர­சாங்கம் கைச்­சாத்­திட்டால் ஈராக்­குக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நிலையே எதிர்­கா­லத்தில் இலங்­கைக்கும் ஏற்­படும். அதனால் அமெ­ரிக்­கா­வுடன் செய்­து­கொள்­ள­வி­ருக்கும் ஒப்­பந்தம் தொடர்­பாக அர­சாங்கம் விரை­வாகத் தீர்­மா­ன­மொன்றை எடுக்­க­வேண்­டு­மென ராஜாங்க அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிஷ மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஈராக்கில் இருக்கும் அமெ­ரிக்க படை­களை திருப்பி அழைத்­துக்­கொள்­ளு­மாறு அந்­நாட்டு பிர­தமர் அமெ­ரிக்­கா­வுக்கு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­கா­வுக்கு துணை­போகும் அர­சாங்­கமே ஈராக்கில் இருந்­து­வ­ரு­கின்­றது. என்­றாலும் தற்­போது அங்கு இடம்­பெற்­றி­ருக்கும் முறுகல் நிலை கார­ண­மா­கவே அந்­நாட்டு பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆனால் அமெ­ரிக்க ஜனா­தி­பதி அதற்கு மறுப்புத் தெரி­வித்து, தற்­போ­துள்ள நிலை­மையில் ஈராக்கில் இருக்கும் அமெ­ரிக்க ராணு­வத்தை திருப்பி அழைக்க முடி­யா­தெனக் குறிப்­பிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் இந்த மறுப்பு அறி­விப்­பா­னது ஈராக்கின் இறை­யாண்­மைக்கு அச்­சு­றுத்­த­லாகும். அத்­துடன் ஈராக்கின் அதி­காரம் டொனால்ட் ட்ரம்பின் பாத­ணி­க­ளுக்கு கீழ் இருப்­ப­து­போ­லவே அவரின் கூற்று அமைந்­தி­ருக்­கின்­றது. ஈராக்கில் எந்த ராணுவம் இருக்­க­வேண்டும் என்­பதை தீர்­மா­னிப்­பது ஈராக்கா அல்­லது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியா?.
அத­னால்தான் மிலே­னியம் செலன்ஞ் கோப்­ப­ரேஷன் போன்ற உடன்­ப­டிக்­

கைகள் தொடர்­பாக நாங்கள் எச்­ச­ரிக்கை விடுக்­கின்றோம். எம்.சீ.சீ. ஒப்­பந்­தமோ அல்­லது வேறு எந்த ஒப்­பந்­த­மாக இருந்­தாலும் அத­னூ­டாக அமெ­ரிக்க ராணு­வத்­துக்கு இந்­நாட்டில் தற்­கா­லி­க­மா­கவேனும் தங்­கு­வ­தற்கு இட­ம­ளித்தால், அது பாரிய அச்­ச­றுத்­த­லாகும். தற்­போது ஈராக்கில் இடம்­பெறும் விட­யங்­களில் இருந்து அதனை நல்­ல­மு­றையில் உணர்ந்­து­கொள்­ளலாம். அதனால் எந்த நாட்டு சர்­வ­தேச ராணு­வத்­துக்கும் எமது நாட்டில் தற்­கா­லி­க­மாக ஒரு அடி­யை­யேனும் வைப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்­பதை நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதிலும் உலக நாடு­களில் குறிப்­பாக, அமெ­ரிக்கா ஏனைய நாட்டு அர­சாங்­கங்­களில் தலை­யிடும் மிகவும் மோச­மான அரச பலத்தை கொண்­டி­ருக்­கின்­றது. உலக அமை­தியை இல்­லா­ம­லாக்கி, யுத்­த­மொன்­றுக்கு அடித்­த­ள­மிடும் அவ்­வா­றான அர­சாங்கம் ஒன்றின் ராணு­வத்­துக்கு எமது எல்­லைக்­கு­கூட வரு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்­பதை அர­சாங்­கத்­துக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

அத்­துடன், இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுடன் செய்­து­கொள்­ளப்­போ­வ­தாக தெரிவிக்கும் எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பாகவும் விரைவாகத் தீர்மானமொன்றை எடுக்குமென மக்கள்

எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இல்லாவிட்டால் தற்போது ஈராக்குக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே எதிர்காலத்தில் எமக்கு ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் விடுக்க விரும்புகின்றேன் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.