சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை குறைக்க முயல்வது ஜனநாயக படுகொலை

விஜயதாஸவின் பிரேரணைக்கு ஹரீஸ் கண்டனம்

0 565

அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்­டத்தின் மூலம் சிறு­பான்­மை­யின மக்­களின் அர­சியல் பலத்தை குறைப்­ப­தற்கு முயற்­சிப்­பது ஜன­நா­யக படு­கொ­லைக்கு ஒப்­பா­ன­தென்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரி­வித்தார்.

இந்­நாட்டில்வாழ்­கின்ற பெரும்­பான்மை சிங்­கள மக்கள் சிறு­பான்­மை­யின மக்­களின் ஜன­நா­யக உரி­மையை பாது­காப்­பதன் மூலமே நாட்டின் நிரந்­தர சமா­தா­னத்­திற்கும், நிலை­யான அபி­வி­ருத்­திக்கும் வழி­வ­குக்­கு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது கண்­ட­னத்தை தெரி­வித்தார்.

சிறு­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 21 மற்றும் 22 ஆவது தனி­நபர் சட்­ட­தி­ருத்த யோச­னைக்கு தனது கண்­ட­னத்தை தெரி­வித்து வெளி­யிட்ட தனது ஊடக அறிக்­கை­யிலே அவர் இதனை குறிப்­பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

நாடு சுதந்­தி­ர­ம­டைந்த காலம்­தொட்டே பெரும்­பான்மை சமூகம் தமது அதி­கா­ரத்­தையும் பலத்­தையும் சிறு­பான்­மை­யின மக்­களின் அபி­லா­சை­க­ளுக்கு எதி­ரா­கவே பிர­யோ­கித்து வரு­கின்­றது.

இப்­ப­டி­யான தொடர்ச்­சி­யான அடக்­கு­மு­றைகள், ஜன­நா­யக விதி­மீறல் உச்­சத்தை தொட்ட நிலை­யில்தான் இந்த நாடு நீண்ட யுத்­தத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது. இதன்­மூலம் நாட்டின் கௌரவம் பாதிக்­கப்­பட்டு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்­கித்­த­வித்து விலை­ம­திக்க முடி­யாத பல இலட்­சக்­க­ணக்­கான உயிர்­க­ளையும் இழக்க வேண்­டி­யேற்­பட்­டன.

இன்று யுத்தம் நிறை­வுற்­றுள்­ளது. ஆனால் இந்த யுத்தம் ஏன் ஆரம்­பிக்­கப்­பட்­டது என்­பது தொடர்­பாக இன்னும் பெரும்­பான்மை சமூகம் விளங்கிக் கொள்­ள­வில்லை. அதற்கு மாறாக யுத்த வெற்­றியே சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கான தீர்­வென ஒரு­சில இன­வாத அர­சி­யல்­வா­திகள் எண்ணிக் கொண்­டி­ருக்­கின்­றனர். அப்­ப­டி­யான ஒரு எண்ணக் கருவில் உண்­டா­ன­துதான் சிறு­பான்மை சமூ­கங்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை குறைப்­பது தொடர்­பான சட்­டத்­தி­ருத்த யோச­னை­யாகும்.

1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பெருந்­த­லைவர் அஷ்­ரபின் யோச­னைக்­க­மைய அப்­போ­தைய பிர­தமர் ரண­சிங்க பிர­ம­தா­ச­வினால் 12.5 வாக்கு வீத­மாக இருந்த அர­சி­ய­ல­மைப்பை மாற்றி 5 வீத­மாக குறைக்­கப்­பட்டு சட்­ட­மாக்­கப்­பட்­டது. இதன்­மூலம் சிறு­பான்மை சமூ­கங்­களும் சிறிய கட்­சி­களும் இல­கு­வாக பாரா­ளு­மன்றம் செல்­லக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு தமது சமூகம் சார்ந்த பாது­காப்பு, அபி­வி­ருத்தி என்­பன தொடர்­பாக ஆட்­சி­யா­ளர்­க­ளோடு பேரம் பேசும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யது. இவ்­வா­றான நிலை­யில்தான் சிறு­பான்மை சமூ­கங்­களின் அர­சியல் பலத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்­கான பேரி­ன­வா­தி­களின் நீண்­டநாள் கனவை மெய்ப்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே இந்த அர­சி­ய­ல­மைப்பு திட்ட யோச­னையை பார்க்க முடி­கின்­றது.

இந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­படால் குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் குறைக்­கப்­ப­டு­வ­தோடு எமது குரல்­வ­ளையும் நசுக்­கப்­படும். மேலும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் தனது கொள்கைப் பிர­க­டன உரையில் தேர்தல் முறைமை தொடர்­பாக கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். அவர் எப்­ப­டி­யான நிலைப்­பாட்டில் இக்­க­ருத்தை முன்­வைத்தார் என்­பது தொடர்­பாக ஆரா­யப்­பட வேண்டும். ஏனென்றால் சிறு­பான்மை சமூ­கங்கள் ஜன­நா­யக ரீதியில் தமது பிர­தி­நி­தி­களை பெற்றுக் கொள்­வ­தற்கு தற்­போது காணப்­படும் விகி­தா­சார முறை­மையே கார­ண­மா­க­வுள்­ளது.

விகி­தா­சார தேர்தல் முறை­மையை தொடர்ந்தும் செயற்­ப­டுத்த ஜனா­தி­பதி முன்­வர வேண்டும். இதற்­காக சிறு­பான்மை கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள் மற்றும் சிவில் அமைப்­புக்­களை அழைத்து விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள வேண்டும். எனவே, சிறு­பான்மை சமூ­கங்­களுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள திருத்த யோச­னைக்கு எதி­ராக சகல சிறு­பான்மை கட்­சி­களும் ஒன்­றி­ணை­வ­தோடு இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகி அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்­டு­மென எச்.எம்.எம். ஹரீஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.-Vidivelli

  • பைஷல் இஸ்­மாயில்

Leave A Reply

Your email address will not be published.