புத்தர் சிலை விவகாரத்திற்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்

0 699

கொழும்பு– கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர் ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டுள்­ளமை அப்­ப­குதி முஸ்­லிம்­களின் சக­வாழ்­வினைப் பாதித்­துள்­ளது. முஸ்­லிம்கள் மத்­தியில் ஓர் அச்ச உணர்வு குடி­கொண்­டுள்­ளது.

புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்­பான்மைச் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் அச்­சி­லையை பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கிலே வைத்­துள்­ளனர். இச்­செயல் வேண்­டு­மென்றே இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை­யினைத் தோற்­று­விப்­ப­தற்­கா­கவே திட்டமிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கருத வேண்­டி­யுள்­ளது. புத்தர் சிலை­யொன்று நிறு­வு­வ­தற்கு அப்­ப­கு­தியில் பல இடங்கள் இருந்­த­போதும் அவ்­வி­டங்கள் இதற்­காகத் தேர்ந்­தெ­டுக்கப்பட­வில்லை.

கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 2 மணிக்கு புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. சம்­பவம் வரக்­கா­பொல பொலி­ஸுக்கு அறி­விக்­கப்­பட்­டதும் உட­ன­டி­யாக அங்கு சென்ற பொலிஸார் அங்கு நில­விய பதற்ற நிலை­யினைத் தணித்துள்­ளார்கள். அங்கு பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உயர் பொலிஸ் அதி­கா­ரிகளும் அங்கு விஜயம் செய்­துள்­ளார்கள்.

இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் இணக்­கப்­பா­டொன்­றினை ஏற்­ப­டுத்தி பிரச்­சி­னையைச் சுமு­க­மாகத் தீர்ப்­ப­தற்கு பொலிஸார் முயற்­சித்­த­போதும் அது பல­ன­ளிக்­க­வில்லை. பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் அங்­கி­ருந்து புத்தர் சிலையை அகற்­றிக்­கொள்­வ­தற்கு மறுப்­புத்­தெ­ரி­வித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து வரக்­கா­பொல பொலிஸார் இவ்­வி­வ­கா­ரத்தை நீதி­மன்ற உத்­த­ரவு மூலம் தீர்த்­துக்­கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்­தனர். வரக்­கா­பொல நீதிவான் நீதி­மன்றம் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ரையும், பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளையும் எதிர்­வரும் 8 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்­ளது.

‘‘இரு தரப்­பி­ன­ரையும் நீதி­மன்­றுக்கு அழைத்து பிரச்­சி­னைக்குத் தீர்வு காணு­வதே சிறந்­தது. அதுவே நிரந்­தரத் தீர்­வா­கவும் அமையும்‘‘ என வரக்­கா­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்துள்ளார்.
முஸ்­லிம்கள் ஏனைய சம­யங்­களை எதிர்க்­க­வில்லை. ஏனைய சமூ­கங்­களின் வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­து­வதைப் பாவ­மா­கவே கரு­து­கி­றார்கள். இந்­நிலையில் முஸ்­லிம்­களின் பொறு­மை­யினைச் சோதிப்­ப­தாற்கா­கவே இச்­செயல் என கரு­தப்­ப­டு­கி­றது.
பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பகு­தியில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். சுமார் 50 முஸ்லிம் குடும்­பங்­களே அப்­ப­கு­தியில் வாழ்­வ­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் தெரி­வித்­துள்ளார்.
பள்­ளி­வாசல் தலை­வரின் கருத்­துப்­படி அங்கு பல தசாப்த கால­மாக முஸ்­லிம்கள் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் ஒற்­று­மை­யாக, அந்­நி­யோன்யமாகவே வாழ்ந்­துள்­ளனர். அவர்­களின் சுக­துக்­கங்­களில் பங்கு கொண்­டுள்­ளனர். இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் இவ்­வி­வ­கா­ரத்தில் அமை­தி­காக்­கி­றது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி இரு சமூகங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிப்பதை விட சுமுக தீர்வைக் காண்பதே வரவேற்கத்தக்க செயற்பாடாக அமையும்.

கடந்­த ­காலங்களிலும் நாட்டின் பல பகுதிகளிலும் இவ்­வாறு புத்­தர்­ சி­லைகள் நிறுவப்பட்­டன. பெரும்­பான்மைச் சமூகம் வாழாத பகு­தியில் கூட புத்தர் சிலைகள் நிறு­வப்­பட்­டன. ஆனால் இங்கு உடு­கும்­புற பகு­தியில் பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் வாழ்­வி­டங்கள் இருந்­தாலும் பள்­ளி­வாசல் வளா­கத்தில் புத்­தர்­சிலை நிறு­வப்­பட்­டமையே சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

சில தீய சக்திகளால் முஸ்லிம்– சிங்­கள உற­வுக்கு குந்­தகம் விளை­விப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சதித்­திட்­ட­மாகக் கூட இது இருக்­கலாம். ஆகவே அர­சாங்­கமும், பாது­காப்புப் பிரி­வி­னரும் இது தொடர்பில் ஆராய வேண்டும். இதன் பின்­ன­ணியை அறிந்து தீர்வு வழங்­கு­வதன் மூலமே அப்­ப­கு­தியில் இன நல்­லு­றவைப் பலப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும்.

எதிர்­வரும் 8 ஆம் திகதி நீதி­மன்று நீதியான தீர்வினை வழங்கும். இரு தரப்பும் நிச்சயம் அந்த உத்தரவினை, தீர்ப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறான நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பிரதேச அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள், சமயத் தலைவர்கள் முன்வரவேண்டும். இவ்வாறானவர்கள் இரு தரப்பிலிருந்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே பிரதேசத்தில் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுப்பதாக அமையும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.