ரிஷாத் எம்.பி.யிடம் 3 மணி நேர விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வவுனியாவில் சகோதரர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி

0 666

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னிடம் நேற்று சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது. 4/21 உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சி.ஐ.டி.யின் விஷேட பொலிஸ் குழுவே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. அதன்­படி நேற்று முற்­பகல் முதல் சுமார் 3 மணி நேர விசா­ர­ணைகள் முன்னாள் அமைச்சர் ரிஷா­திடம் நடாத்­தப்­பட்­ட­தா­கவும் அவ­ரிடம் வாக்­மூ­ல­மொன்று பதிவு செய்­யப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்பட்­ட­தா­கவும் சி.ஐ.டி.யின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் சகோ­தரர் ஒருவர் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யான ஏப்ரல் 26 ஆம் திகதி இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில் விசா­ர­ணையின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். குறித்த சகோ­தரர் அரச வாக­னத்தில் பய­ணிக்­கும்­போது வீதிச் சோத­னை­யி­லீ­டு­பட்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு மன்னார் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இது தொடர்­பி­லேயே நேற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னிடம் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

குறித்த முன்னாள் அமைச்­சரின் சகோ­தரர் அப்­போது பய­ணித்­தி­ருந்த அந்த வாகனம், அப்­போது ரிஷாட் அமைச்­ச­ராக இருந்த வர்த்­தக வாணிப விவ­கார அமைச்­சுக்கு சொந்­த­மா­ன­தெனத் தெரி­ய­வந்­துள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ளன. எவ்­வா­றா­யினும் குறித்த வாக­னத்தை தனது சகோ­தரர் எடுத்துச் சென்றமை தொடர்பில் அப்போது தனக்கு எதுவும் தெரிந்திருக் கவில்லையென முன்னாள் அமைச்சர் சி.ஐ.டி.யிடம் தெரிவித்ததாக உள்ளக தகவல்கள் தெரிவித்தன.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.