ஏப்ரல் 21 தாக்குதல், பிணை முறி குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்

0 657

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் மற்றும் மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதிர்­வரும் 2020 மார்ச் மாதம் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும். இந்தச் சவாலை நான் அர­சாங்­கத்­திற்கு விடுக்­கிறேன் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­பால ஹெட்டி ஆராச்சி தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமைக் காரி­யா­லயம் சிறி­கொத்­தவில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது இந்த அர­சாங்­கத்தின் பங்­கா­ளர்கள் தாம் பத­விக்கு வந்து 24 மணித்­தி­யா­ல­யங்­க­ளுக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளி­க­ளுக்கும் மத்­திய வங்கி பிணை­முறி ஊழ­லுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளி­க­ளுக்கும் தண்­டனை வழங்­கப்­படும் என்று உறு­தி­ய­ளித்­தார்கள். மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் ஒரு மாத­காலம் கடந்­து­விட்ட நிலையில் இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை தற்­போ­தைய அர­சாங்கம் உட­ன­டி­யாக நிறை­வேற்­ற­வேண்டும். இல்­லையேல் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மக்கள் உரிய பாடம் புகட்­டு­வார்கள்.

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் வாக்­கு­மூ­லங்­களைப் பதி­வு­செய்து அறிக்­கை­யையும் கைய­ளித்­துள்­ளது. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய அரசாங்கம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவது காலத்தை வீணே கடத்துவதாகும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.