4/21 தொடர் தற்கொலை தாக்குதல் விவகாரம்: ஹக்கீம், ரிஷாத்திடம் விசாரிப்பதற்கு திட்டம்

நீதிமன்றுக்கு அறிவித்தார் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

0 741

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­மான ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாத் பதி­யுதீன் ஆகி­யோ­ரிடம் சி.ஐ.டி. விசா­ரணை நடாத்தி வாக்­கு­மூலம் பெற­வுள்­ள­தாக அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­ன­கே­வுக்கு அறி­வித்தார். அத்­துடன் வடக்கு மற்றும் கிழக்­கி­லுள்ள மேலும் பல­ரி­டமும் இவ்­வாறு இந்த விவ­கா­ரத்தில் வாக்­கு­மூலம் பெற­வுள்­ள­தாக அவர் நீதி­வா­னுக்கு மேலும் தெரி­வித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறித்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் இடம்­பெறும் சி.ஐ.டி. விசா­ர­ணை­க­ளுக்­க­மைய இந்த வாக்­கு­மூ­லங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இந்த விடயம் தொடர்­பி­லான நீதிவான் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது விளக்­க­ம­ரி­ய­லி­லுள்ள கட்­டாய விடு­முறை வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்ர விம­ல­சிறி மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்ப்­பித்­த­துடன், பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் விடயம் தொடர்பில் மன்­றுக்குத் தெளி­வு­ப­டுத்­தினார்.

‘இந்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான வாக்­கு­மூ­லங்­களை பதி­வு­செய்ய முன்னாள் ஜனா­தி­பதி, முன்னாள் பிர­தமர் மற்றும் தற்­போ­தைய சபா­நா­யகர், பல செய­லா­ளர்­க­ளிடம் திகதி கோரப்­பட்­டுள்­ளது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி வாக்­கு­மூலம் வழங்க திக­தியை இது­வரை அறி­விக்­க­வில்லை. தொடர்ந்து அவர் திக­தி­யொன்றை வழங்­காது இழுத்­த­டிப்­பா­ராயின், அது தொடர்பில் மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்து தேவை­யான கட்­ட­ளை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்போம். தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் முன்னாள் அமைச்­சர்­க­ளான ரிஷாட் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் ஆகி­யோ­ரிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்ய எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் வடக்கு, கிழக்கை சேர்ந்த மேலும் பல­ரி­டமும் வாக்­கு­மூலம் பெறப்­ப­ட­வுள்­ளது.
இந்த விவ­கா­ரத்தில் இரு பிரதிப் பொலிஸ்மா அதி­பர்கள், அமைச்­ச­ரவை செய­லா­ளரின் வாக்­கு­மூ­லங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்­ட­கை­யிடம் எதிர்­வரும் நத்தார் தினத்­துக்கு பிறகு வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­படும்’ என அறி­வித்தார்.

இந்­நி­லையில் விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் பிரி­யந்த லிய­னகே, சந்­தேக நபர்­க­ளான பூஜித் ஜய­சுந்­தர, ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோரை எதிர்­வரும் 2020 ஜன­வரி 6 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் 250 இற்கும் அதி­க­மானோர் பலி­யா­கவும் பாரிய சொத்து சேதம் ஏற்­ப­டவும் உதவி ஒத்­தாசை புரியும் வகையில் செயற்பட்டுள்ளதாகக்கூறி மேற்படி இருவருக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவையின் 250, 296, 298, 326, 327, 328, 329 மற்றும் 410 ஆம் அத்தியாய்ங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக்குரிய குற்றமொன்றினை புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.