ஹொரவப்பொத்தானையில் கைதான 9 பேர் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடுவிப்பு

0 589

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் பேரில் ஹொர­வப்­பொத்­தான பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட 10 பேரில் 9 பேர் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

கெப்­பித்­திக்­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்றில் நேற்­றைய தினம் இவர்கள் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே மேற்­படி 9 பேரும்தலா 5 இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப் பிணை­யிலும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டி­ருந்த மெள­லவி நியாஸ் என்­ப­வ­ருக்கு மாத்­திரம் நேற்­றைய தினம் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை.

சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் வழக்கை கொண்டு நடாத்த போதிய சான்­றுகள் இல்­லை­யென்றும் முத­லா­வது சந்­தேக நபரை தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்கும் படியும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வினர் நீத­ிவானை வேண்­டினர். இதற்­க­மைய முத­லா­வது சந்­தேக நபரைத் தவிர ஏனையோர் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

மேற்­படி 9 பேரில் ஒருவர் கடந்த ஏப்ரல் 26 ஆம் திக­தியும் இருவர் மே 16 ஆம் திக­தியும் ஐவர் மே 24 ஆம் திக­தியும் மற்­று­மொ­ருவர் ஜூன் 1 ஆம் திக­தியும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு எதி­ராக அடிப்­ப­டை­வாத மதக் கொள்­கை­களைப் பரப்­பி­யமை, பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பி­லி­ருந்­தமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. இந் நிலையில் குறித்த சந்­தேக நபர்கள் தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து கிடைக்கப் பெற்ற அறிக்­கைக்கு அமை­யவே இவர்கள் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான சாதிக்குல் அமீன், மொஹமட் சரூக், நுஷ்ரா சறூக், முபீன் மற்றும் திலிசா திசா­நா­யக ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

மேற்­படி சந்­தேக நபர்கள் தொடர்பில் பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களைச் சுமத்தி சிங்­கள ஊட­கங்­களில் வெளியான செய்திகள் தொடர்பில் ‘விடிவெள்ளி‘ பத்திரிகை கடந்த காலங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு உண்மைத் தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.