குருநாகல் கிராமங்களில் வன்முறைகள்: நாமல் குமாரவுக்கு விளக்கமறியல்

ஹெட்டிபொல நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டபோது உத்தரவு

0 1,039

வட மேல் மாகா­ணத்தில் குறிப்­பாக குரு­ணாகல் மாவட்டம், குளி­யா­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்டி பகு­தி­களில் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட குழுக்கள் முன்­னெ­டுத்த தொடர் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் கைது செய்­யப்­பட்டு சுமார் 7 மாதங்­க­ளாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்ட ஊழ­லுக்கு எதி­ரான படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பாளர் என அறி­யப்­படும் அத்­த­நா­யக்க முதி­யன்­ச­லாகே நாமல் குமார எதிர்­வரும் 26 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

நேற்­றைய தினம் அவரை குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் மனிதப் படு­கொ­லைகள் குறித்த விசா­ரணைப் பிரி­வினர் ஹெட்­டி­பொல நீதிவான் எஸ்.எப். மஹ்பி முன்­னி­லையில் ஆஜர் செய்த போதே, இந்த உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து வட மேல் மாகா­ணத்தில், குரு­ணாகல், வாரி­ய­பொல, நிக்­க­வ­ரட்­டிய, குளி­யா­பிட்­டிய, சிலாபம், பிங்­கி­ரிய, தும்­ம­ல­சூ­ரிய, நாத்­தாண்­டிய உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்த தாக்­கு­தல்கள் பல நடாத்­தப்­பட்­டன. அவை தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிறப்பு பொலிஸ் குழு­வி­ன­ருக்கு விசா­ரணை அதி­காரம் பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவால் வழங்­கப்­பட்­டது.

இந் நிலையில் குறித்த பொலிஸ் குழுக்­களை வழிநடாத்­திய அப்­போ­தைய கொழும்பு தெற்கு பொலிஸ் அத்­தி­யட்­சகரும் தற்­போ­தைய கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரு­மான நிஷாந்த டி சொய்­ஸாவின் ஆலோ­ச­னைக்கு அமைய கடந்த மே 14 ஆம் திகதி நாமல் குமார கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

வர­க்கா­பொலை பொலிஸ் நிலை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்ட அவர் கொழும்­புக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து வெளிப்­ப­டுத்­தப்­பட்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை தொடர்ந்து அவர் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

இந் நிலை­யி­லேயே பயங்­க­ர­வாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது. அவ்விசாரணைகளின் பின்னரே நேற்று அவர் ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.