சுவர்­களில் ஓவியம் வரை­யும்­போது இஸ்­லா­மிய வரை­ய­றை­களை பேணுக

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை

0 598

வெற்றுச் சுவர்­களை அலங்­க­ரித்து சித்­தி­ரங்கள் வரை­யும்­போது முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணி நடந்து கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்ளது.

இந்த விடயம்தொடர்­பாக உரிய அதி­கா­ரி­க­ளுடன் தொடர்பு கொண்டு திட்­ட­மிட்டு ஜம்­இய்­யாவின் கிளை­களும், மஸ்ஜித் நிரு­வா­கமும், ஊர் தலை­வர்­களும் கரி­சனை செலுத்­து­மாறும் ஜம்­இய்­யத்துல் உலமா தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டின் ஜனா­தி­பதி உட்­பட பலரின் பாராட்­டுக்­க­ளுக்கு மத்­தியில் நாட்டில் ஆங்­காங்கே காணப்­படும் வெற்றுச் சுவர்­களை அலங்­க­ரிக்கும் பணி­களை அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், சிவில் அமைப்­புக்கள் உட்­பட தனி நபர்­களும் ஒன்­றி­ணைந்து திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் சித்­தி­ரங்­களை வரைந்து மெரு­கூட்டி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவ்­வா­றான செயற்­றிட்­டங்­களை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வர­வேற்­கின்­றது. இச்­சித்­திர வேலைப்­பா­டுகள் நாட்டின் அபி­வி­ருத்தி, நன்­ன­டத்­தைக்­கான வழி­காட்டல் போன்ற விட­யங்­களை உள்­ள­டக்கும் வண்ணம் அமை­வதே இன்­றைய தேவை­யாகும். நம் நாட்டு ஓவி­யர்­களின் கலைத்­தி­றன்­களை வெளிப்­ப­டுத்­து­வதில் சகல இன மக்­களும் விஷே­ட­மாக, அனைத்து வாலி­பர்­களும் ஒத்­து­ழைப்­பதன் மூலம் நம் நாட்டில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை கண்டு கொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.