இந்­தோ­னே­சிய விமான விபத்து: கறுப்பு பெட்டி தகவல் வெளி­யீடு

0 791

இந்­தோ­னே­சி­யாவில் கடந்த ஒக்­டோபர் மாதம் விபத்­துக்­குள்­ளான லயன் எயார்லைன்ஸ் விமானம் எப்­படி கடலில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது என்­பது குறித்த விமா­னத்தின் கறுப்புப் பெட்டி தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தோ­னே­சி­யாவின் தலை­நகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நக­ருக்கு லயன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த ஒக்­டோபர் 29 ஆம் திகதி காலை புறப்­பட்­டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்­தது.விமா­னத்தில் பய­ணிகள், ஊழி­யர்கள் என மொத்தம் 188 பேர் பய­ணித்த நிலையில், விமானம் புறப்­பட்ட 13 நிமி­டங்­களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது. இந்த விபத்தில் விமா­னத்தில் பய­ணித்­த­வர்கள் அனை­வரும் இறந்­து­விட்­ட­தாக இந்­தோ­னே­சிய அரசு அறி­வித்­தது.

நீண்ட தேடு­த­லுக்­குப்பின் விமா­னத்தின் கறுப்புப் பெட்டி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதை ஆய்வு செய்த அதி­கா­ரிகள் விமானம் எப்­படி விபத்­துக்­குள்­ளா­னது என்­பது குறித்த தக­வலை வெளி­யிட்டு, அதன் முதல்­கட்ட அறிக்­கையை இந்­தோ­னே­சிய பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்­ளனர். போயிங் விமா­னத்தின் முன்னாள் பொறி­யி­ய­லா­ளரும், செயற்­கைக்கோள் மற்றும் விமானப் போக்­கு­வ­ரத்துத் துறையில் நீண்ட அனு­பவம் கொண்ட பீட்டர் லேமே தலை­மை­யி­லான குழு கறுப்புப் பெட்­டியை ஆய்வு செய்து அறிக்கை அளித்­துள்­ளது. அந்த அறிக்­கையில், “விமா­னத்தில் இருந்த தானி­யங்கி பாது­காப்பு முறை செய­லி­ழந்து விமா­னத்தின் மூக்­குப்­ப­கு­தியை கீழ்­நோக்கி இழுத்­துள்­ளது. விமானி விமா­னத்தைப் பலமுறை மேல்­நோக்கி தூக்கிப் பறக்க முயற்­சித்தும் விமா­னத்தின் மூக்­குப்­ப­குதி கீழ்­நோக்­கியே சரிந்­துள்­ளது. இதனால், விமா­னியின் கட்­டுப்­பாட்டை இழந்து விமானம் விபத்­துக்­குள்­ளாகி இருக்கும்” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், இது முதல்­கட்ட அறிக்­கைதான். இன்னும் தீவி­ர­மாக ஆய்­வு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். சென்­சாரில் இருந்து தவ­றான சமிக்­ஞைகள் ஏதும் வந்­ததா, விமா­னத்தின் மூக்கு கீழ்­நோக்கி சரிந்­ததா என்­பது குறித்தும் ஆய்வு செய்து வரு­கி­றார்கள்.

கறுப்புப் பெட்­டியை ஆய்வு செய்த பொறி­யி­ய­லாளர் பீட்டர் லேமே கூறு­கையில், “ஏறக்­கு­றைய விமானம் புறப்­பட்ட 11 நிமி­டங்­களில் 26 முறை இதே­போன்று விமா­னத்தை மேல்­நோக்கி விமா­னத்தைப் பறக்க வைக்க முயன்­றி­ருக்­கிறார். ஆனால், விமானம் டைவ் அடித்­துள்­ளது. ஆனால், விமா­னியால் எதையும் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடி­ய­வில்லை. நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­க­ளுடன் விளை­யா­டிய ஆபத்­தான விளை­யாட்­டா­கி­விட்­டது.

அதே­ச­மயம், சென்­சாரில் இருந்து தவ­றான தகவல் ஏதும் தரப்­பட்­டதா என்­பது குறித்து ஆய்வு செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், இதற்கு முன் இது­போன்ற பிரச்­சினைகள் பல்­வேறு விமா­னங்­களில் நடந்­துள்­ளன. இந்தப் பிரச்­சி­னையை போயிங் நிறு­வ­னத்­தினர் சரி செய்­தார்­களா எனத் தெரி­ய­வில்லை. சரி செய்­தி­ருந்தால், விபத்து நிகழ்ந்­தி­ருக்­காது” எனத் தெரி­வித்தார்.

இதற்­கி­டையே போயிங் நிறு­வ­னத்­திடம் இதுகுறித்து கேட்­ப­தற்­காகப் பல­முறை மின்­னஞ்சல் அனுப்­பியும், தொலை­பே­சியில் தொடர்ந்து கொண்டும் செய்­தி­யா­ளர்கள் முயன்­றனர். ஆனால், அந்த நிறு­வனம் பதில் அளிக்­க­வில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.