ஜனாதிபதி தேர்தலுக்கு அவசரப்பட மாட்டோம்

அமைச்சரவை ஊடக பேச்சாளர்

0 678

ஜனா­தி­பதித் தேர்தல் எவரும் அவ­ச­ரப்­ப­டு­வது போன்று விரைவில் நடத்­தப்­ப­ட­மாட்­டாது. உரிய காலத்­தி­லேயே ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும். ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் நிறை­வு­று­வ­தற்கு இன்னும் 13 மாத காலம் இருக்­கி­றது. அதன் பின்பே ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும். ஹக்­கீமும், சம்­பந்­தனும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூறு­வது போன்று விரைவில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த முடி­யாது என அமைச்­சரும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

நேற்று தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது;

‘தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து பாடம் படிப்­பிப்­ப­தா­கவும், ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­துங்கள் என்றும் ஹக்கீம் கூறு­கிறார். அவர்கள் அவ­ச­ரப்­ப­டு­வது போன்று ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த முடி­யாது.

தற்­போது அர­சி­யலில் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைக்கு தீர்வு ஜனா­தி­பதி தேர்தல் அல்ல. தற்­போது அதி­கா­ரத்­தி­லுள்ள அர­சாங்­கத்தை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது எவ்­வ­ளவு காலத்­துக்கு அர­சாங்­கத்தைக் கொண்டு நடத்த முடியும் என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும். பொதுத் தேர்­த­லுக்குச் செல்­வதா? உயர்­நீ­தி­மன்றத் தீர்ப்பு எவ்­வாறு அமையும் என்­பது பற்றி நாம் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. பிரச்­சி­னை­க­ளுக்கு ஜனா­தி­பதி தேர்தல் மூலம் தீர்வு பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென்றால் நாம் எப்­போதோ ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தி­யி­ருப்போம்.

உயர் நீதி­மன்றில் பாரா­ளு­மன்றக் கலைப்­புக்கும் தேர்தல் ஒன்­றினை நடத்­து­வ­தற்கும் தற்­போது இடைக்­கால தடை­யுத்­த­ரவு ஒன்று இருக்­கி­றது. எனவே உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­பின்­ப­டியே எம்மால் செயற்­பட முடி­யாது. பாரா­ளு­மன்றின் நிலை­யியற் கட்­ட­ளைக்கு முர­ணா­கவே எதிர்க்­கட்­சி­யி­னரால் 3 நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இது ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மீறிய செய­லாகும். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்­றத்தில் சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது. இதனை உயர்­நீ­தி­மன்­றிலே சவா­லுக்­குட்­ப­டுத்த முடியும்.

19 ஆவது திருத்த சட்­டத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் சில அதி­கா­ரங்­களை ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பெற்­றுக்­கொள்ள முயற்­சித்தார். அதற்­கெ­தி­ராக உயர் நீதி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­யப்­பட்­டது. உயர் நீதி­மன்றம் சில விட­யங்­களை நீக்கிக் கொள்­ளு­மாறும் இன்றேல் 2/3 பெரும்­பான்மை பெற்றுக் கொள்ளும் படியும் கூறி­யது. இல்­லையேல் சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்குச் செல்­லும்­படி கூறி­யது.

மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தியை பொம்­மை­யாக்கி அவ­ரது அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்ளும் தேவை ரணி­லுக்கு இருந்­தது.

ரணிலின் செயற்­பா­டு­க­ளி­னாலே இன்று நாடு ஸ்திர­மற்ற தன்­மைக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

ஏதும் பிரச்­சி­னை­க­ளி­­ருந்தால் சட்ட ரீதி­யாக உரிய முறையில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையைக் கொண்டு வாருங்கள். மஹிந்த பிர­தமர் பதவி வகிக்கும் இந்த அர­சாங்­கத்தில் நம்­பிக்கை இல்லை என பிரே­ரணை கொண்டு வரு­மாறே நாம் கோரு­கிறோம்.

கடந்த அர­சாங்க காலத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அனைத்து அமைச்­சர்­க­ளி­னதும் அதி­கா­ரங்­களை தானே சுய­மாகக் கையாண்டார். அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­க­ளிலும் தனது செல்­வாக்கைச் செலுத்­தினார். இத­னா­லேயே மத்­திய வங்­கியும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது.

சில கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்கு ஜனா­தி­பதி எதிர்ப்புத் தெரி­வித்தும், ரணில் தனது செல்­வாக்கை செலுத்­தினார். இத­னா­லேயே இதனைப் பொறுக்க முடி­யாத ஜனா­தி­பதி அர­சி­யலில் மாற்­றங்­களை ஏற்படுத்தினார் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.