தமிழ் தொலைக்காட்சித்துறையில் இளம் ஆளுமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்

0 1,715

உலக தொலைக்­காட்சி தினம் (நவம்பர் 21) இன்­றாகும். இதற்­க­மைய இலங்கை கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தால் நடாத்­தப்­படும் அரச தொலைக்­காட்சி விருது வழங்கல் விழா இன்­றைய தினம் கொழும்பில் நடை­பெ­று­கி­றது. இதனை முன்­னிட்டு குறித்த விருதுக் குழுவின் தலைவர் பேரா­சி­ரியர் ஸ்ரீ. பிர­சாந்தன் வழங்­கிய நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.

அரச தொலைக்­காட்சி விருது வழங்கல் விழாவை முன்­னிட்டு நிய­மிக்­கப்­பெற்ற தமிழ்­மொ­ழி­மூல நடுவர் குழுவின் தலை­வ­ராக செயற்­பட்­டுள்­ளீர்கள். இவ்­வாண்டு போட்­டிக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட நிகழ்ச்­சிகள் பற்­றிய தங்கள் பொது அபிப்­பி­ராயம் என்ன?

2018 ஆம் ஆண்டு தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பான நிகழ்ச்­சி­களில் மிகத்­த­ர­மா­ன­வற்­றுக்­கான விரு­து­களைத் தெரிவு செய்­வ­தற்­காக இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. கடந்த சில ஆண்­டு­களில் இவ்­வி­ருதுத் தெரி­வுக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ராகக் கட­மை­யாற்­றிய பழைய அனு­ப­வங்­க­ளோடு ஒப்­பி­டும்­போது இவ்­வாண்டில் தமிழ்­மொழி மூல­மான விண்­ணப்­பங்கள் தொகை­ய­ளவில் பெரு­வா­ரி­யாக அதி­க­ரித்­துள்­ளதைக் காண­மு­டிந்­தது. சில பிரி­வு­களில் சிங்­கள மொழி மூல விண்­ணப்­பங்­களை விடவும் தமிழ்­மொழி மூல விண்­ணப்­பங்கள் அதி­க­மாக இருந்­தன. புதிய தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு நிறு­வ­னங்கள் சில இம்­முறை மிகுந்த ஆர்­வத்­துடன் அதி­க­ள­வி­லான விண்­ணப்­பங்­களை அனுப்­பி­யி­ருந்­தன. மேலும், முன்­னைய சில ஆண்­டு­களில் அனைத்து உப­பி­ரி­வு­க­ளுக்கும் தமிழ்­மொழி மூல விண்­ணப்­பங்கள் கிடைப்­ப­தில்லை. அவ்­வா­றில்­லாமல் இவ்­வாண்டு அனைத்துப் போட்டிப் பிரி­வு­க­ளுக்கும் தமிழ் நிகழ்ச்­சிகள் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இது 2018 இல் தமிழ் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சைகள் பரந்­து­பட்ட அளவில் வெவ்­வேறு வகை­யான நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்­பி­யி­ருந்­த­மை­யையே காட்­டு­கின்­றது.

தொகை­ய­ளவில் அதிகம் என்று குறிப்­பி­டு­கின்­றீர்கள். அப்­ப­டி­யாயின் அவற்றின் தரம் குறித்து தங்கள் அபிப்­பி­ராயம் என்ன?

போட்­டிக்­கென அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த சில நிகழ்ச்­சிகள் பாராட்டைப்­பெறும் தரத்தில் அமைந்­தி­ருந்­தன. நடுவர் குழு­வா­னது பல்­வி­த­மான ஆளு­மை­யா­ளர்­களின் சங்­க­ம­மாக இருந்­தது. தொடர்­பா­டல்­துறை மற்றும் ஊட­கத்­துறைப் பேரா­சி­ரி­யர்கள், விரி­வு­ரை­யா­ளர்கள், முன்னாள் தொலைக்­காட்சிப் பணிப்­பாளர், அரச தொலைக்­காட்சி ஆலோ­ச­னைக்­குழு உறுப்­பினர், ஊட­க­வி­ய­லாளர், தொழில்­நுட்ப ஆற்­ற­லாளர், முன்னாள் நிகழ்ச்சித் தயா­ரிப்­பாளர், குறும்­பட இயக்­குநர் என்று பல்­வித ஆளு­மை­யா­ளர்கள் நடுவர் குழுவில் இருந்­தனர். இவ்­வாறு வேறு­பட்ட ஆளு­மை­யா­ளர்­க­ளதும் பல்­வி­த­மான எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றக்­கூ­டிய சில படைப்­புக்கள் போட்­டிக்­காகப் பார்­வைக்கு வந்­தன என்­பது உண்­மையே. இது­கு­றித்து மகிழ்ச்­சி­ய­டைய முடியும். எனினும் அவை தொகையில் மிக மிகக் குறைந்த அள­வி­ன­தா­கவே இருந்­தன. அதா­வது, நல்­ல­தொரு விட­யத்தை சிறந்த தொழில்­நுட்ப உத்தி, ஒலி, ஒளிப்­ப­திவு, கலை­யாக்கம், செவ்­வி­தாக்கம் முத­லி­ய­வற்றைப் பயன்­ப­டுத்தி புது­மை­யாகத் தயா­ரிக்­கப்­பட்ட தர­மான நிகழ்ச்­சி­களின் எண்­ணிக்கை சொற்­ப­மா­ன­தா­கவே இருந்­தது.

விடயம் என்ற உள்­ள­டக்­கத்­தைத்­தானே சுட்­டு­கின்­றீர்கள். இம்­முறை தெரி­வுக்கு வந்த நிகழ்ச்­சி­களின் உள்­ள­டக்கம் குறித்து என்ன கரு­து­கி­றீர்கள்?

பொது­வாக சஞ்­சிகைப் பிரிவு, ஆவணப் பிரிவு போன்ற பிரி­வு­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட போட்­டிக்­கான நிகழ்ச்­சி­களில் பல வழ­மை­யான பிரச்­சி­னை­களை அல­சு­வ­ன­வா­கவே இருந்­தன. பல நிகழ்ச்­சிகள் சமையல், ஒப்­பனை, பெரு­நாள்­களின் கொண்­டாட்­டங்கள் எனும் எல்­லையைக் கடக்­க­வில்லை.

எனினும் சில படைப்­புக்கள், இது­வரை காலமும் கவ­னக்­கு­விப்பைப் பெறாத நகர குப்பைக் கழி­வ­கற்­றுதல், இரா­ணு­வத்தால் விடு­விக்­கப்­பட்ட காணி­களில் குடி­யே­று­த­லி­லுள்ள சவால்கள் முத­லிய உள்­ள­டக்­கங்­களைக் கொண்­டி­ருந்­தன. மேலும், தொலைக்­காட்­சி­களில் இது­வரை பேசாப்­பொ­ருள்­க­ளாக இருந்த மசாஜ் நிலை­யங்கள், கராஜ் தொழி­லாளர் அவலம் முத­லிய விட­யங்கள் பல­வற்றை துணி­க­ர­மாகப் பேசி அளிக்கை செய்­யப்­பட்ட படைப்­புகள் இவ்­வாண்டு பார்­வைக்கு வந்­தன என்­பது மகிழ்ச்­சிக்கு உரி­யது.

தமிழ்த் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களின் ஒளி­ப­ரப்பு மற்றும் தொழில்­நுட்பத் தரம் குறித்த தங்கள் கருத்­தென்ன ?

இது­கு­றித்து தமிழ் ஒளி­ப­ரப்­பா­ளர்கள் நீண்ட அக்­கறை செலுத்த வேண்டும் என்­பது தெளி­வாகப் புல­னா­கின்­றது. அதா­வது, தமிழ் நிகழ்ச்­சி­களின் தொழில்­நுட்­பத்­தரம் பாராட்­டும்­ப­டி­யாக இல்லை. கடந்த பல வரு­டங்­க­ளாக விருது பெற்­று­வரும் சில தொடர்­நி­கழ்ச்­சிகள் இவ்­வாண்டும் போட்­டிக்கு வந்­தன.

ஒளிப்­ப­திவு செய்­யப்­படும் கலை­ய­கத்தின் தரத்­தினால் குறிப்­பி­டத்­தக்க கவ­னிப்பை அவை பெறு­கின்­றன. எனினும் நிகழ்ச்­சி­களில் புதிய மாற்­றங்­களோ அடுத்த கட்டப் பாய்ச்­சல்­களோ இல்லை. எமக்குச் சமாந்­த­ர­மாக சிங்­கள மொழி மூல நடுவர் குழு சிங்­கள தொலைக்­காட்சி விருதுத் தெரி­வு­களை மேற்­கொண்­டது. அவர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது வெளி­வந்த உண்­மையை இவ்­விடம் பதி­வி­டு­வது அவ­சி­ய­மா­னது. தமிழ்த் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளில்­கூட தர­மான ஒளிப்­ப­திவு மற்றும் தொழில்­நுட்ப விட­யங்கள் சிங்­களக் கலை­ஞர்­க­ளா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே அவற்­றுக்­கான விரு­து­களும் – தமிழ்­மொழி மூலப் பிரிவு எனினும் – அவர்­க­ளுக்குச் செல்­வது இயல்­பா­னதே.

இவ்­வி­டத்தில் தமிழ் ஒளி­ப­ரப்­புத்­து­றை­யி­னர்க்கு நான் வேண்­டுகோள் ஒன்றை விடுக்க விரும்­பு­கின்றேன். அவர்கள் இந்த ஒளிப்­ப­திவு மற்றும் தொழில்­நுட்பத் துறை­களில் ஆர்வம் மிக்க இளை­ஞர்­களை ஈடு­ப­டுத்தி, நன்கு கற்­பிக்­க­வேண்டும். அவர்கள் ஆளுமை மேம்­படும் வகை­யி­லான வாய்ப்­புக்­களை வழங்க வேண்டும். தேவை­யேற்­படின், வெளி­நா­டு­களில் பயிற்சி பெறு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­க­ளையும் அவர்­க­ளுக்கு நல்க வேண்டும். நம் ஒளி­ப­ரப்­புத்­து­றையின் எதிர்­கால வளர்ச்­சிக்கு இது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

இவ்­வி­டத்தில் தொலைக்­காட்சித் தயா­ரிப்­பா­ளர்களுக்கு ஏதேனும் தெரி­விக்க விரும்­பு­கின்­றீர்­களா?

நிச்­ச­ய­மாக. நமது தயா­ரிப்­பா­ளர்கள் முதலில் தமி­ழக சின்­னத்­தி­ரை­களின் தழுவல் பிர­தி­க­ளாக நமது நிகழ்ச்­சி­களைக் கருதும் மனோ­பா­வத்­தி­லி­ருந்து விடு­பட வேண்டும். தமிழ்­நாட்டுத் திரை­ப்படக் காட்சிச் சுருக்­கங்­களைத் தொகுத்து வழங்­கு­வதோ, வெளி­நாட்டு விளை­யாட்டுச் செய்திச் சேவை­க­ளி­லி­ருந்து அப்­ப­டியே தர­வி­றக்கம் செய்து குரல் கொடுப்­பதோ இலங்கை ஒளி­ப­ரப்புத் துறையின் வளர்ச்­சி­யா­காது என்­பதை ஒளி­ப­ரப்புத் துறையில் ஈடு­ப­டு­ப­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். அதா­வது இணை­யத்­தி­லி­ருந்தும் பிற­நாட்டு ஒளி­ப­ரப்புச் சேவை­க­ளி­லி­ருந்தும் அப்­ப­டியே சில நிகழ்ச்­சி­க­ளையோ, பகு­தி­க­ளையோ பயன்­ப­டுத்­தி­விட்டு இலங்கை ஒளி­ப­ரப்புத் துறைக்­கான அதி­யுச்ச விருதை எதிர்­பார்ப்­பது எவ்­வ­ளவு தூரம் ஆரோக்­கி­ய­மா­னது என்­பதை யாவரும் எண்­ணிப்­பார்க்க வேண்டும்.

மேலும், போட்­டிக்கு விண்­ணப்பம் அனுப்பும் தயா­ரிப்­பா­ளர்கள் முதலில் விதி மற்றும் நிபந்­த­னை­களை சரி­யாக விளங்கிக் கொள்ள வேண்டும். இம்­முறை எமக்கு மிகவும் சவா­லாக அமைந்­தது எது­வென்றால் பல தயா­ரிப்­பா­ளர்கள் தம் நிகழ்ச்­சி­களை பொருத்­த­மற்ற போட்டிப் பிரி­வுக்கு விண்­ணப்­பித்து இருந்­த­துதான். அதா­வது, ஒரு நிகழ்ச்­சியை அதன் தயா­ரிப்பைக் கருத்­திற்­கொண்டு இது, சஞ்­சி­கையா, ஆவ­ணமா, அறிக்­கை­யி­டலா? என்­பதைச் சரி­யாக உணர்ந்து பொருத்­த­மான பிரிவில் விண்­ணப்­பிக்க வேண்டும். ஆனால் இம்­முறை விண்­ணப்­ப­தா­ரிகள் பலரும் இவ்­வி­ட­யத்தில் தவ­றி­ழைத்­துள்­ளனர். அதா­வது, பிரிவு மாறி­மாறி வந்த விண்­ணப்­பங்கள் இவ்­வாண்டும் குறிப்­பி­டத்­தக்­க­ளவு காணப்­பட்­டன.

அதே­போல சில பிரி­வுக்­கான நிகழ்ச்­சி­க­ளுக்குத் திணைக்­க­ளத்தில் குறித்த கால எல்லை வழங்­கப்­பட்­டுள்­ள­தையும் விண்­ணப்­ப­தா­ரிகள் கவ­னத்திற் கொள்­ள­வில்லை. 10 நிமி­டத்­துக்கு மேலே அமைய வேண்­டு­மென நிபந்­தனை வழங்­கப்­பெற்ற நிகழ்ச்சிப் பிரி­வுக்கு வந்த சில ஒளிப்­பே­ழைகள் 5 நிமி­டம்­கூட இருக்­க­வில்லை. எனவே அவற்றை நிரா­க­ரிக்க வேண்டி ஏற்­ப­டு­கி­றது. இனி­வருங் காலங்­களில் இத­னையும் தயா­ரிப்­பா­ளர்கள் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

அடுத்து குறித்த – CD, Data அமைப்பில் வழங்க வேண்டும் என்­ப­தையும் பல தயா­ரிப்­பா­ளர்கள் கவ­னித்­த­தாகத் தெரி­ய­வில்லை. மேலும், நேர்­காணல், ஒளிப்­ப­திவு, தயா­ரிப்பு தொடர்பில் எழத்­தக்க நுட்­ப­மான தொழில்­நுட்ப சிக்­கல்­க­ளையும் விண்­ணப்­ப­தா­ரிகள் கவ­னத்தில் எடுக்­க­வில்லை என்­ப­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது. மொத்­தத்தில் விண்­ணப்ப அறி­வு­றுத்­தல்­களைச் சரி­யாகக் கடைப்­பி­டிக்­காமை எமது விருது தெரிவுக் குழுவின் சுமையைப் பெரு­ம­ளவில் அதி­க­ரிக்கச் செய்­தது. இனி­வரும் காலங்­களில் இதனை நிவர்த்­தி­செய்தல் அவ­சி­ய­மாகும். குறித்த பொருத்­த­மான பிரிவில் நிபந்­த­னை­க­ளுக்கு அமை­வாக அடுத்­து­வரும் வரு­டங்­களில் தயா­ரிப்­பா­ளர்கள் போட்­டி­க­ளுக்கு விண்­ணப்­பிக்க வேண்டும் என்­பது எமது பெரு­வி­ருப்­பாகும்.

தாங்கள் ஒரு மொழித்­துறைப் பேரா­சி­ரியர் என்ற வகையில் அறி­விப்­பா­ளர்­களின் மொழிப்­பி­ர­யோகம் திருப்­தி­க­ர­மாக உள்­ளதா?

ஒரு காலத்தில் இலங்கை அறி­விப்­புத்­துறை உலக அரங்கில் திசை­காட்­டி­யாக இருந்து கோலோச்­சி­யதை நாம் மறத்­த­லா­காது. இத்­து­றையில் தமிழ்­நாட்­ட­வர்­க­ளுக்கே எமது அறி­விப்­பா­ளர்­கள்தாம் வழி­காட்­டிகள். ஆனால் இன்று நிலைமை அப்­படி இல்லை. அறி­விப்­பிலும் தமி­ழக ஊடகச் செல்­வாக்கே காணப்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்டில் ஆங்­கி­ல­மொழி மூலக் கல்வி கார­ண­மாக, சாதா­ரண உரை­யா­ட­லிலும் ஆங்­கிலக் கலப்பே மிகு­தி­யாக உள்­ளது. எனவே, அங்கு ஊட­கங்­களும் ஆங்­கிலக் கலப்­புற்ற இம்­மொ­ழி­யையே பயன்­ப­டுத்­து­கின்­றன. ஆனால் தாய்­மொழி மூலக் கல்வி வழங்­கப்­படும் இலங்­கையில் நிலைமை அவ்­வா­றில்லை. சாதா­ரண பொது­மக்கள் பாவ­னையில் தமிழ்ப்­பி­ர­யோ­கங்­களே அதிகம். ஆனால், தொலைக்­காட்சி அறி­விப்­பா­ளர்­கள்தாம் தழி­ழகச் செல்­வாக்கால் ஆங்­கிலம் மிகு­தி­யாகக் கலப்­புற்ற ஒரு­வி­த­மான மொழிப்­பி­ர­யோ­கத்தை சமு­தா­யத்­தினுள் புகுத்த முனை­கின்­றனர். இம்­மு­றை­கூட, போட்­டியில் கலந்­து­கொண்ட ஒரு­சில நிகழ்ச்சி அறி­விப்­பு­களை நோக்­கும்­போது, இவர்கள் தமிழ் அறி­விப்பு விரு­துக்கு இவற்றை அனுப்­பி­னார்­களா, இல்லை ஆங்­கில அறி­விப்பு விரு­துக்கு இவற்றை அனுப்­பி­னார்­களா என்ற ஐயமே மிகுந்­தது. இதனைக் கூறு­வ­தனால், மக்கள் வழக்­கி­லில்­லாத தனித்­தமிழ் நடையில் அறி­விப்புச் செய்ய வேண்­டு­மென நாம் எதிர்­பார்ப்­ப­தாகக் கரு­த­வேண்டாம். இலங்கை இர­சி­கர்­க­ளுக்கு புரி­யும்­ப­டி­யான, அவர்கள் வழங்­கு­கின்ற ஆங்­கிலக் கலப்புக் குறைந்த நடையில் – பொருத்­த­மற்ற அங்க சேட்­டை­களைத் தவிர்த்து – அறி­விப்பு மேற்­கொள்­வதே சாலச்­சி­றந்­தது.

பொது­வாக தமிழ்த் தொலைக்­காட்­சிகள் நாடகத் துறையில் அக்­கறை கொள்­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு ஆண்­டு­தோறும் வைக்­கப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாண்டு நிலைமை எப்­படி?

இவ்­வாண்டும் மாற்­ற­மேதும் இல்லை. தமி­ழ­கத்து தொடர் நாட­கங்­களை மறு­ ஒ­ளி­ப­ரப்புச் செய்யும் ஊடகக் கலா­சாரம் ஒழி­யும்­வரை இந்­நி­லைமை மாறும்­போலத் தெரி­ய­வில்லை. இவ்­வாண்டு நாட­கப்­பி­ரிவில் ஓரங்க மற்றும் தொடர் நாடகப் பிரி­வு­களில் ஒரு­சில விண்­ணப்­பங்­களே வந்­தி­ருந்­தன. சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த இயக்கம் எனப் பல விரு­து­க­ளுக்­காக விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டி­ருந்­தாலும், அவற்­றுக்­கு­ரிய உயர் தரத்தில் வந்த ஒரு­சில நாட­கங்­களும் அமை­ய­வில்லை என்­பதே உண்மை. எனவே பாராட்­டும்­ப­டி­யாக அமைந்த ஒரு­சில பிரி­வு­க­ளுக்கு மட்டும் விரு­து­களை சிபார்சு செய்­ய­வேண்டி நேர்ந்­துள்­ளது. அதுவும் அத்­து­றை­க­ளி­லான உச்­ச­கட்ட திற­மை­யென விரு­தா­ளர்கள் திருப்­தி­ய­டைய முடி­யாது. இவ்­வி­ருதை முதற்­ப­டி­யா­கக்­கொண்டு நாட­கத்­து­றையில் பய­ணிக்க இன்னும் எவ்­வ­ளவோ தூரம் உள்­ள­தென்­பதை மனங்­கொண்டு தம்மை அவர்கள் மென்­மேலும் வளர்க்க வேண்டும்.

இன்­றைய விழாவைப் பற்றி..?

இன்று உலக தொலைக்­காட்சி தின­மாகும். வரு­டந்­தோறும் இத் தொலைக்­காட்சி தின­மா­கிய நவம்பர் 21 அன்­றுதான் இந்த அரச விருது வழங்கல் வைபவம் இடம்­பெ­று­வது வழக்கம். இவ்­வாண்டு ஜனா­திபதித் தேர்தல் நவம்பர் 16 இடம்­பெற்­றதால் 21 அன்று இவ்வைபவத்தை வைக்கலாமா.. இல்லையா… என்று சிந்தித்தாலும் பின்பு அதேதினத்தில் வைப்பதுதான் பொருத்தமானது என்பது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானமாக இருந்தது.

அதனால் அரச விருது வழங்கல் விழாவானது, மாலினி பொன்சேகா ஆகிய கலையுலக உயர் ஆளுமைகள் விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இனிவரும் காலங்களில் விருது வழங்கும் செயற்பாடு மேலும் காத்திரமானதாக அமைய இன்றைய தெரிவுக்குழுவின் தலைவரான நீங்கள் என்ன ஆலோசனைகளை முன்மொழிகின்றீர்கள்?

இவ்வைபவத்தை ஆண்டுதோறும் நடாத்திவரும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஏலவே நாம் ஒரு சில முன்மொழிவுகளை வழங்கியுள்ளோம். விருதுக்கான அறிவித்தல் வெளியிடப்படும்பொழுது தொலைக்காட்சி நிறுவனங்களின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளையும் அழைத்து ஆரோக்கியமான செயலமர்வுகளை நடாத்தும்படியாக நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இது மிகவும் அவசியமானதாகும். மேலும், பல்லாண்டுகளாக சீரமைக்கப்படாதுள்ள போட்டிகளுக்கான விதி மற்றும் நிபந்தனைகளில் காலத்துக்கு ஏற்றதான மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த பணிப்பாளர்களுக்குத் தெரிவித்துள்ளோம்.

அவ்வாறே மொழிபெயர்ப்பில் காணப்படும் விளக்கக்குறைவு பற்றியும் எடுத்துக் கூறியுள்ளோம். இவை இனிவருங் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பது எமது நம்பிக்கை.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.