மூவின மக்கள் மத்தியிலும் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள்

எதிர்கால பாதக விளைவுகள் குறித்து அநுரகுமார எச்சரிக்கை

0 1,354

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டுத்­தப்­போகும் பாத­க­வி­ளை­வுகள் குறித்து எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் தேசிய மக்கள் சக்தி இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான அநு­ர­கு­மார திசா­நா­யக்க தேர்தல் நாட்டின் மூவின மக்கள் மத்­தியில் பேதங்­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான முடி­வு­க­ளையே தந்­துள்­ளது, இதனால் ஒற்­று­மைக்கு பதி­லாக பிரி­வி­னையே ஏற்­படும் என்றும் கூறி­யுள்ளார்.

பத்­த­ர­முல்ல – மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் காரி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

தேர்­தலின் போது எமக்கு ஆத­ர­வாக 4 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 553 வாக்­குகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. எமக்கு வாக்­க­ளித்த அனை­வ­ருக்கும் எமது நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கின்றோம். ஆனால் நாங்கள் எதிர்­பார்த்த முடிவு எமக்கு கிடைக்­க­வில்லை. இருந்த போதும் கிடைக்கப் பெற்­றுள்ள முடிவை நாம் கட்­டாயம் ஏற்றுக் கொண்டே ஆக­வேண்டும்.

நாட்டின் இரு பிர­தான கட்­சி­களும் தேர்­த­லுக்­காக கள­மி­றங்­கி­யி­ருந்த நிலையில் எமக்கு அவர்­க­ளுடன் போட்­டி­யி­டு­வதில் பெரும் சவால் ஏற்­பட்­டி­ருந்­தது. எங்­க­ளு­டைய தேர்தல் செயற்­பா­டு­க­ளுக்­காக எந்­த­வித சுய­லா­பத்­தையும் எதிர்­பார்க்­காத பெருந்­தொ­கை­யானோர் இணைந்­தி­ருந்­தனர்.

எமது பிர­சா­ரங்­களின் போது நாட்டு மக்கள் எதிர்­நோக்க வேண்­டி­யுள்ள சவால்கள் தொடர்பில் நாம் பல விட­யங்­களை தெரி­வித்­தி­ருந்தோம். இது­வரை காலமும் தேர்தல் மேடைகள் கேலித்­த­ன­மா­கவே காணப்­பட்­டன. ஆனால் இம்­முறை நாங்கள் நாட்டின் அபி­வி­ருத்தி , பொரு­ளா­தார முன்­னேற்றம் , இன ஒற்­றுமை , கலா­சார பண்­பு­களை பாது­காப்­பது தொடர்­பான பல­வி­ட­யங்கள் தொடர்பில் மக்­களை சிந்­திக்க வைத்தோம்.

இந்த தேர்தல் முடி­வுகள் நாட்டில் ஏற்­ப­டுத்தும் பாதிப்­புகள் குறித்து நாம் அறிவோம். எம்­நாட்டு சிங்­கள , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் மத்­தியில் இன­பே­தத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான முடி­வினை வழங்­கி­யுள்­ளது.இந்த முடி­வுகள் நாட்டு மக்கள் மத்­தியில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மாறாக பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன.

தேர்­தலின் போது மேடை­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் பேசப்­பட்ட விட­யங்கள் தொடர்­பிலே மக்கள் முடி­வெ­டுத்­துள்­ளனர். வடக்கு கிழக்கு தமி­ழர்கள் 2005க்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் தாம் எதிர்­நோக்­கிய சம்­ப­வங்­களை கருத்­திற்­கொண்டு வாக்­க­ளித்­துள்­ளனர். முஸ்லிம் மக்­களும் அவர்­களின் பாது­காப்­பிற்­காக இவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ள­துடன் தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் அடிப்­படைவாதி­க­ளுக்குப் பயந்தே இவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் மக்­களின் உண்­மை­யான எண்ணம் இங்கு பிர­தி­ப­லிக்கவில்லை. எனினும் தற்­போது மக்­களால் வழங்­கப்­பட்­டுள்ள தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்­ளதான் வேண்டும். எதிர்­வரும் காலங்­களில் மக்­களின் உரி­மைகள் மற்றும் ஜன­நா­யகம் மீறப்­படும் சந்­தர்ப்­பங்­களில் நாங்கள் எப்­போதும் போல் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டுவோம்.

கேள்வி: பெரும் எதிர்­பார்பை நீங்கள் கொண்­டி­ருந்த போதிலும் ஏன் உங்­களால் போதிய வாக்­கு­களை பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை?

பதில்: நாம் ஒரு­போதும் எமது தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கான இன, மத­வா­தத்தை முன்­வைக்க மாட்டோம்.பொது மக்­களின் சொத்­து­களை மோசடி செய்யும் வகை­யி­லான அர­சியல் செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுக்க மாட்டோம். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுப்போம்.

இரு பிர­தான கட்­சி­க­ளுடன் மோத வேண்டி ஏற்­பட்­ட­மை­யினால் வாக்­குகள் பிரிந்து சென்­றுள்­ளன. தேர்தல் முறை­கே­டுகள் கடந்த காலத்தை விட குறை­வ­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடி­யாது.எமது நாட்டின் தேர்தல் முறை­கே­டுகள் தற்­போது மாற்­ற­ம­டைந்­துள்­ளன.

ஒரு காலத்தில் வாக்­க­ளர்­க­ளி­ட­மி­ருந்து வாக்கு சீட்­டுகள் பறிக்­கப்­பட்­டன. சில­காலம் சென்­ற­வுடன் வாக்­கா­ளர்­களை தடுத்து அந்த வாக்கு சீட்­டு­களை கைப்­பற்றி அவர்­களே வாக்­க­ளித்­தனர். பின்னர் வாக்கு பெட்­டி­களை திரு­டினர். இந்த நிலை­மைகள் அனைத்­துமே மக்­களின் எண்­ணத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமையப் பெற்­றுள்­ளன.

சில அரச மற்றும் தனியார் ஊட­கங்கள் மக்­களின் எண்­ணத்தில் தாக்கம் செலுத்தி முடி­வு­களை எடுக்க தூண்­டி­யுள்­ளன.இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணை­யா­ளரும் நேற்று முன்­தினம் கருத்து தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு நாங்­களும் இணக்கம் தெரி­விக்­கின்றோம். ஆனால் அவர் இந்த விடயம் தொடர்பில் செயற்­பட்ட விதம் எமக்கு திருப்­தி­ய­ளிக்கவில்லை.

கேள்வி: ஊட­கங்கள் இவ்­வாறு செயற்­பட்டால் எதிர்­வரும் தேர்­தல்­களில் வெற்றி பெறு­வ­தற்­காக நீங்கள் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்?

பதில்: இதனை கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்றால் இவ்­வாறு செயற்­படும் ஊட­கங்கள் தொடர்­பான தக­வல்­களை நாம் வெளிப்­ப­டுத்த வேண்டும். ஊட­கங்­க­ளுக்கு அர­சியல் வாதி­களை விமர்­சிப்­ப­தற்­கான உரிமை இருப்­பது போன்று எமக்கும் அவர்­களை விமர்­சிப்­ப­தற்­கான உரிமை உண்டு. எதிர்­வரும் காலங்­களில் அவ்­வா­றான நிலைமை தோன்­றினால் அவர்­க­ளுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை நாங்கள் முன்­னெ­டுப்போம்.

அதே­வேளை, ஊட­கங்கள் எமக்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை என்று நாங்கள் கூற­வில்லை. சில வேட்­பா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி அவர்­க­ளுக்கு சாத­க­மான செய்­தி­களை வெளி­யிட்­டன. நாம் கூறும் சில விட­யங்­களை காண்­பித்து அவர்­களின் கருத்­து­க­ளையும் அதில் இணைத்து வெளி­யிட்­டன. இவ்­வா­றான நிலை­மை­களில் மாற்றம் ஏற்­பட வேண்டும்.

கேள்வி: கடந்த வருடம் அக்­டோபர் மாதம் இடம்­பெற்ற 52 நாட்கள் அர­சியல் மாற்­றத்தின் போது நீங்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவின் பத­வியை பாது­காப்­ப­தற்­காக செயற்­பட்­ட­மையின் கார­ண­மா­கவா உங்­க­ளுக்கு ஆத­ரவு குறைந்­துள்­ளது?

பதில்: நாங்கள் எந்தக் கட்­சி­யையும் , எந்த நபரையும் ஆதரிப்பதற்காக அன்று செயற்பட வில்லை. நாட்டின் அரசியலமைப்பிற்கு புறம்பாக ஒவ்வொருவரும் நினைத்தவாறு செயற்படக் கூடாது என்பதனை உணர்த்துவதற்காகவே நாங்கள் அவ்வாறு செயற்பட்டோம். இது தொடர்பில் நாங்கள் பல தடவை கருத்து தெரிவித்தும் உள்ளோம்.

நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தை அடுத்து இது  கோத்தாபயவின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்றும் எம்மை விமர்சித்தனர்.ஆனால் நாங்கள் அவ்வாறு யாருக்கும் சார்பாக எந்த முடிவையும் எடுத்ததில்லை. நாம் எடுக்கும் சில தீர்மானங்கள் ஒரு கட்சிக்கு தாக்கம் செலுத்துவதை எம்மால் தடுக்க முடியாது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.