அல்குர்ஆனை மனனமிட்டு வந்த 26 மாணவர்கள் தீ விபத்தில் பலி

லைபீரியாவில் சம்பவம் ; அனைவரும் 10 முதல் 20 வயதுக்கிடைப்பட்டவர்கள்

0 1,001

மேற்கு ஆபி­ரிக்க நாடான லைபீ­ரி­யாவில் மத்­ரஸா ஒன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு ஏற்­பட்ட தீ விபத்தில் சிக்கி 26 சிறு­வர்கள் உட்­பட 28 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். பள்­ளி­வாசல் ஒன்­றுடன் இணைந்­த­தாக செயற்­பட்டு வந்த குறித்த மத்­ர­ஸாவில் அல்­குர்­ஆனை மன­ன­மிட்டு வந்த சிறார்­களே இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர்.

லைபீ­ரியா தலை­நகர் மொன்­ரோ­வி­யாவின் புற­ந­கர்ப்­ப­கு­தி­யான பேனேஸ்­வில்லே என்ற பிர­தே­சத்தில் இந்த மத்­ரஸா அமைந்­துள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் மாண­வர்­களின் விடு­திக்­கட்­டடம் மற்றும் பாட­சாலைக் கட்­டடம் என்­ப­வற்றில் தீ பர­வி­யுள்­ளது. இதனால் தூங்­கிக்­கொண்­டி­ருந்த 26 மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். மாண­வர்கள் தவிர ஒரு ஆசி­ரி­யரும் ஒரு விடுதி கண்­கா­ணிப்­பா­ளரும் இந்த தீவி­பத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் மோஸஸ் கார்ட்டர் தெரி­வித்­த­துடன், லைபீ­ரிய ஜனா­தி­பதி அலு­வ­லகம் அதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இச் சம்­ப­வத்தில் இரு­வரே உயிர் தப்­பி­யுள்­ளனர். அவர்கள் இரு­வரும் தீக் காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

உயி­ரி­ழந்த சிறு­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் 10 தொடக்கம் 20 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்கள் என ஜனா­தி­பதி அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

“பிள்ளைகள் விடு­தியில் தூங்கிக் கொண்­டி­ருந்த சமயம் தீ ஏற்­பட்­டுள்­ளது” என கார்ட்டர் தெரி­வித்தார். பாட­சாலை வளா­கத்­தினுள் தீ எவ்­வாறு ஏற்­பட்­டது என்­பது பற்றி இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பான விசா­ர­ணை­களை லைபீ­ரிய பொலிஸார் தீவி­ர­மாக மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

பாது­காப்பு மற்றும் மீட்­புப்­ப­டை­யினர் தீயில் கரு­கிய பிள்­ளை­களின் உடல்­களை பையில் எடுத்துச் செல்­வதைக் காணும் பெற்­றோர்கள் மற்றும் உற­வி­னர்கள் கதறி அழும் காட்­சிகள் ஊட­கங்­களில் காண்­பிக்­கப்­பட்­டன.

அழுதும் புலம்­பியும் செய்­வ­த­றி­யாது பொலி­ஸா­ருடன் சண்­டை­யிடும் பெற்­றோர்­க­ளையும் கூடி­யி­ருக்கும் கூட்­டத்­தி­ன­ரையும் பாது­காப்­புப்­ப­டை­யினர் விலக்­கி­விட்டு அம்­புலன்ஸ் வண்­டி­களில் உடல்­களை கொண்டு செல்லும் காட்­சிகள் காண்­போரை கண்­ணீரின் எல்லை வரை கொண்­டு­செல்­கி­றது.

பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள ஒரு தேவா­ல­யத்தில் பாதி­ரி­யா­ராக இருக்கும் எம்­மா­னுவேல் ஹர்­பேட்டும் தேவா­ல­யத்தில் இருந்த சிலரும் திடீ­ரென கேட்ட சத்­தத்­தினால் விழித்­தெ­ழுந்து உத­விக்கு ஆட்­களைத் திரட்­டிக்­கொண்டு சம்­பவ இடத்­துக்கு விரைந்­துள்­ளனர்.

பாதி­ரியார் எம்­மா­னுவேல் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கும்­போது, “நான் சம்­பவ இடத்­துக்கு சென்­ற­போது நான் பார்த்த எல்லா இடமும் சிவப்பு நிற­மா­கவே காட்­சி­ய­ளித்­தது. நான் அந்த ஜன்­னல்­களைப் பார்த்­த­போது உள்­ளி­ருந்த மொத்த பகு­தியும் தீயினால் நிறைந்­தி­ருந்­தது. அந்த நெருப்பு மிகவும் கடு­மை­யாக பர­வி­யி­ருந்­தது. அதனால் கட்­ட­டத்­துக்கு உள்ளே செல்ல எந்­த­வி­த­மான வாய்ப்பும் எங்­க­ளுக்கு இருக்­க­வில்லை” என்றார்.

குறித்த தீ விபத்து ஏற்­பட்ட பேனேஸ்­வல்லே மத்­ர­ஸா­வுக்கு லைபீ­ரி­யாவின் ஜனா­தி­பதி ஜோர்ஜ் வாஹ் விஜயம் செய்தார். அங்கு ஊட­கங்­க­ளிடம் கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி வாஹ், பாதிக்­கப்­பட்ட பெற்­றோர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக அவர்­களை உணர்வு ரீதி­யாக பலப்­ப­டுத்­தவே நாம் இங்கு வந்­தி­ருக்­கின்றோம். தமது குழந்­தை­களை அவர்கள் இழந்­தி­ருப்­பது உண்­மை­யி­லேயே வலி நிறைந்த ஒன்று என்றார்.

பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு எனது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்துக் கொள்­கின்றேன். இந்த தீ விபத்து ஏற்­பட்­ட­தற்­கான காரணம் இன்னும் எங்­க­ளுக்கு புல­னா­க­வில்லை. ஆனால் இந்த தீ விபத்து தொடர்­பான சகல விசா­ர­ணை­க­ளையும் ஊக்­கப்­ப­டுத்தி வரு­கின்றோம் என வாஹ் தெரி­வித்தார்.

லைபீ­ரிய பாது­காப்பு அதி­கா­ரிகள் தீ விபத்­துக்­களை அணைப்­பதில் நன்கு பரிச்­சயம் பெற்­றி­ருந்­த­போ­திலும் இந்தத் தீயினை எளிதில் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போனது.

லைபீ­ரி­யாவில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளாக கிறிஸ்­த­வர்­களே உள்­ளனர். இருந்­த­போ­திலும் அந்­நாட்டு சனத்­தொ­கையில் சிறு­பான்­மை­யாக 4.5 மில்­லியன் முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர்.

“ஒரு முஸ்­லி­மாக நான் அல்­லாஹ்வின் நாட்­டத்தின் மீது நம்­பிக்கை கொள்­கிறேன். அவ­னது அரு­ளுக்கு நன்றி செலுத்­து­ப­வ­னாக இருக்­கின்றேன். ஆனால் இன்று நடந்த சம்­ப­வத்­தினால் என்னால் பேசவே முடி­ய­வில்லை. நான் எப்­படி எனது சகோ­த­ரனை இழந்தேன்” என குறித்த தீ விபத்தில் உயி­ரி­ழந்த ஆசி­ரி­யரின் சகோ­தரர் ஊட­கங்­க­ளிடம் கண்­ணீ­ருடன் தெரி­வித்தார்.

தேசிய அனர்த்த முக­வ­ர­கத்தின் தலைமை நிர்­வாகி ஹென்றி வில்­லியம்ஸ் இந்த தீ விபத்து தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில், தீ எவ்­வாறு ஏற்­பட்­டது என்­பது தொடர்­பாக எங்­க­ளுக்குத் தெரி­யாது. எங்­க­ளிடம் அதற்கு எந்­த­வி­த­மான ஆதா­ரமும் இல்லை. 28 பேர் உயி­ரி­ழந்­துள்­ளார்கள். உயி­ரி­ழந்த 26 சிறு­வர்­க­ளுமே ஆண் பிள்­ளைகள். மேலும் ஒரு ஆசி­ரி­யரும் ஓர் கண்­கா­ணிப்­பா­ளரும் இந்த விபத்தில் உயி­ரி­ழந்­துள்­ளார்கள் என்றார்.

‘இரவு 1 மணி­ய­ளவில் அனை­வரும் கத்­து­வது போன்ற சத்­தங்கள் கேட்ட போதும் அது­தொ­டர்­பான ஒரு குழப்­ப­மான மன­நி­லையில் இருந்­ததால் வெளி­யி­றங்­காமல் இருந்­த­தாக குறித்த பாட­சா­லைக்கு அண்­மையில் வசிக்கும் ஹோவர்ட் தெரி­வித்தார்.

“அந்த சத்­தங்கள் கொள்­ளை­யர்கள் அல்­லது திரு­டர்­க­ளு­டைய சதித்­திட்டம் என்று நினைத்தோம். அண்­மைக்­கா­ல­மா­கவே கொள்­ளை­யர்­களின் தொல்லை அதி­க­ரித்­துள்­ளது. அதனால் நாங்கள் வெளியில் வந்து பார்க்க பயப்­பட்டோம்” என அவர் தெரி­வித்தார்.

“நாங்கள் முஸ்­லிம்கள் என்­பதன் அடிப்­ப­டையில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்­கா­கவும் அவர்­க­ளது குடும்­பத்­திற்­கா­கவும் தொழு­கையில் துஆ கேட்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்றோம். நாம் இந்த நாட்டை தொழு­கையின் மூலம்தான் கட்­டி­யெ­ழுப்­பலாம். முன்னர் நிம்­பாவில் மண்­ச­ரிவு ஏற்­பட்­டதில் பலர் பாதிக்­கப்­பட்­டார்கள். இப்­போது இந்த சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது. உண்­மை­யி­லேயே இது வருத்­த­ம­ளிக்­கக்­கூ­ட­யது” என ஷெய்க் கமாரா தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்­பாக மேலும் கூறு­கையில், நாம் இந்த நாட்டின் நாளைய தலை­வர்­களை இழந்­தி­ருக்­கின்றோம். இந்த வருத்­தத்­துக்­கான கார­ணத்­தினை அல்லாஹ் ஒரு­வனே அறிவான். நாம் தொடர்ந்தும் அல்­லாஹ்வின் மீது நம்­பிக்கை கொள்வோம் என்றார்.

லைபீ­ரி­யா­வுக்கும் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் இது ஒரு துக்­க­தினம் என லைபீ­ரிய ஜனா­தி­பதி ஜோர்ஜ் வாஹ் தெரி­வித்­தி­ருந்தார்.

காயே நகரம் மற்றும் சுக்பூர் ஆகிய இடங்­க­ளி­லுள்ள முஸ்லிம் மைய­வா­டி­களில் உயி­ரி­ழந்த சிறுவர்களின் உடல்கள் மறுநாள் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன. இந்த நல்லடக்கத்தில் நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதில் ஆயிரக்கணக்கான லைபீரிய முஸ்லிம்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்களின் மையவாடிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாத போதும் ஒரு சிறுவனின் உறவுக்காரப் பெண்ணொருவரின் அழுகுரலினையும் கவலையையும் தாங்க முடியாதவர்கள் மையவாடிக்குள் ஒரு சில பெண்களையும் அனுமதித்தார்கள். உயிரிழந்த அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஜனாஸா தொழுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ஜனாஸாக்களும் ஒன்றன் பின் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டன.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.