ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பள்ளிவாசலுக்கான விருதை பேர்மிங்ஹாம் பள்ளிவாசல் பெற்றது

0 599

இரண்­டா­வது வரு­டாந்த பிரித்­தா­னிய பீகோன் பள்­ளி­வாசல் விருது வழங்கும் 2019 ஆம் ஆண்­டுக்­கான நிகழ்வில் ஐக்­கிய இராச்­சி­யத்தின் சிறந்த பள்­ளி­வா­ச­லுக்­கான உயர் கெள­ரவ விருதை பேர்­மிங்ஹாம் பள்­ளி­வாசல் பெற்­றுக்­கொண்­டது.

அவர்கள், கொடுப்­ப­தற்­காகப் பத்து விரு­து­களை வைத்­தி­ருந்­தார்கள். இவ்­வ­ருடம் சிறந்த முறையில் பரா­ம­ரிக்­கப்­படும் பள்­ளி­வாசல் என்ற விருது எமக்குக் கிடைத்து. இது மிகவும் கௌர­வ­மிக்க விரு­தா­கு­மென கிரீன் லேன் பள்­ளி­வாசல் மற்றும் சன­ச­மூக நிலை­யத்தின் பொது முகா­மை­யா­ள­ரான கமரன் ஹுஸைன் தெரி­வித்தார்.

இந்த விரு­தைப் பெறு­வதில் நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம், நாம் செய்­துள்ள பணி­க­ளுக்கு இது நல்­ல­தொரு அங்­கீ­கா­ர­மாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.
2018 ஆம் ஆண்டு இஸ்­லா­மிய வழி­பாட்டுத் தலங்கள் சிறந்த முறையில் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தையும் உல­க­ளா­விய ரீதி­யான தரா­த­ரத்தை உரு­வாக்கும் வகை­யி­லு­மான முன்­னெ­டுப்­பாக பெய்த் அசோ­சி­யேஷன் என்ற அமைப்பு பீகோன் பள்­ளி­வாசல் தரப்­ப­டுத்தல் பணி­யினை ஆரம்­பித்­தது.

பத்து வகு­தி­களின் கீழ் பள்­ளி­வா­சல்கள் மதிப்­பீடு செய்­யப்­ப­டு­கின்­றன. அவை உள்ளூர் சமூ­கத்­திற்கு வழங்கும் பங்­க­ளிப்பு தொடக்கம் முகா­மைத்­துவம் மற்றும் ஆளுகை வரை அமைந்­துள்­ளன. இறு­தி­யாக மூன்று, நான்கு அல்­லது ஐந்து நட்­சத்­திர தர­நிர்­ணய விரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

பீகோன் பள்­ளி­வாசல் வரு­டாந்த விருது வழங்கும் நிகழ்வு செப்­டம்பர் மாதம் 9 ஆம் திகதி நடை­பெற்­றது.

பெய்த் அசோ­சி­யே­ஷ­னினால் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள பத்து வகு­தி­களின் கீழும் சிறந்த சேவை­யினை வழங்­கு­வ­தற்கு உழைக்கும் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் விண்­ணப்­பங்கள் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டன.

கடந்த வருடம் கிரீன் லேன் பள்­ளி­வாசல் மற்றும் சன­ச­மூக நிலையம் சிறந்த உதவிச் செயற்­றிட்­டத்­திற்­கான விரு­தினைப் பெற்ற அதே­வேளை, மற்­று­மொரு உள்ளூர் அமைப்­பான பல்சால் ஹீத்தில் அமைந்­துள்ள பாகு நம்­பிக்கை நிதியம் சிறந்த பசுமைத் திட்­டத்­திற்­கான விரு­தினைப் பெற்­றது.

இந்த விருது வழங்கும் விழாவில் குறித்த விரு­தினை தொழு­கை­யினை முடித்­துக்­கொண்டு வீட்­டுக்கு சென்­று­கொண்­டி­ருந்­த­போது படு­கொலை செய்­யப்­பட்ட ஜமா­அத்தின் உறுப்­பி­ன­ருக்கு குறித்த விரு­தினை சமர்ப்­பணம் செய்­வ­தாக கிரீன் லேன் பள்­ளி­வாசல் மற்றும் சன­ச­மூக நிலை­யத்தின் பொது முகா­மை­யா­ள­ரான கமரன் ஹுஸைன் தெரி­வித்தார்.

விரு­தினை பெறு­வ­தற்­காக மேலே மேடைக்கு சென்­ற­போது இஸ்­லா­மியப் பீதி தொடர்பில் பேசினேன். 2013 ஆம் ஆண்டு வெறுப்­பு­ணர்வு குற்­றச்­செயல் கார­ண­மாக கொல்­லப்­பட்ட எமது ஜமா­அத்தின் உறுப்­பி­ன­ருக்கு இவ் விரு­தினை சமர்ப்­பணம் செய்­வ­தென நாம் தீர்­மா­னித்தோம் எனவும் ஹுஸைன் தெரி­வித்தார்.

மாலை நேரத் தொழு­கை­யினை நிறை­வேற்­றி­விட்டு வீடு செல்­லும்­போது பேர்­மிங்­ஹாமைச் சேர்ந்த மொஹமட் சலீம் தீவிர வல­து­சாரி தீவி­ர­வா­தி­யினால் படு­கொலை செய்­யப்­பட்டார்.

1970களில் ஆரம்­பிக்­கப்­பட்டு 2008 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் தர்ம ஸ்தாப­ன­மாகப் பதிவு செய்­யப்­பட்ட அஹ்லி ஹதீத் ஸலாபி இயக்­கத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக பேர்­மிங்­ஹா­மி­லுள்ள கிரீன் லேன் பள்­ளி­வாசல் மற்றும் சன­ச­மூக நிலையம் காணப்­ப­டு­கின்­றது.

பேர்­மிங்ஹாம், ஸ்மோல் ஹீத், ககிரீன் வீதியில் மிக முக்­கி­யமான கேந்­திர நிலை­யத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. இதன் கட்டடங்களுள் ஒன்று உள்ளூர் கட்டடக் கலைஞர்களான மார்ட்டின் மற்றும் சம்பேர்லைன் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு செங்கல் மற்றும் மண்ணைப் பயன்படுத்தி 1893 மற்றும் 1902 இடைப்பட்ட கால, கோதிக் – ஜகோபீன் வடிவத்தில் ஆரம்பத்தில் நூலகமாகவும் குளியல் பகுதியாகவும் அமைக்கப்பட்டது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.