கோத்தாபய, பொதுபலசேனா அமைப்பின் ஆதரவாளரல்ல

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உவைஸ்

0 790

பொது­ஜன பெர­மு­னவின் ஜனாதிபதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ பொது­பலசேனா அமைப்பின் ஆதரவாளர் என்ற கருத்து முஸ்­லிம்கள் மத்தியில் பரப்­பப்­பட்­டு­வ­ரு­கி­றது. இது தவ­றான கருத்­தாகும். கோத்­தா­பய ராஜபக் ஷ முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்கு உத்­த­ர­வாதம் வழங்­கி­யுள்ளார். அனைத்து மதங்­க­ளுக்கும் சம உரிமை வழங்­கு­வதே அவ­ரது கொள்­கை­யாகும் என பொது­ஜன முஸ்லிம் முன்­ன­ணியின் கொழும்பு மத்திய அமைப்பாளரும் முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்பி­ன­ரு­மான ஏ.எல்.எம்.உவைஸ் தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் ஒரு பிரி­வான பொது­ஜன முஸ்லிம் முன்­னணி ஜனாதி­பதி அபேட்­சகர் கோத்­தா­பய ராஜபக் ஷ வை ஆத­ரிக்­கு­மாறு கோரிக்கை விடுப்­ப­தற்­கான காரணம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘‘கோத்­தா­பய ராஜபக் ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னவர். பொது­பல சேனாவின் ஆத­ர­ வாளர் என்று தவ­றான கருத்து பரப்பப் ­பட்டு வரு­கி­றது. முஸ்­லிம்­களைப் பாது ­காப்போம். பள்­ளி­வா­சல்­களைப் பாது­காப்போம் என்று கோஷ­மிடும் இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலே அதிக எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன; எரிக்­கப்­பட்­டன; தொழு­கை­க­ளுக்கும் தடை­வி­திக்­கப்­பட்­டன.

பொது­ஜன பெர­முன அமைக்­கவுள்ள ஆட்­சியில் இவ்­வா­றான வன்செயல்களுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. கோத்தா­பய ராஜபக் ஷ அன்று காலியில் நூல் நிலை­ய­ மொன்­றையே திறந்­து­வைத்தார். அது பின்னர் பொது­பலசேனாவின் காரி­யா­ல­ய­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இந்தச் சம்­ப­வத்தைக் கொண்டு கோத்­தா­பய ராஜபக் ஷ பொது­பலசேனாவின் ஆத­ர­வாளர் எனக் குறிப்­பிட்டு முஸ்­லிம்­களை அவ­ரி­லி­ருந்தும் தூர­மாக்க சிலர் முயற்­சிக்­கி­றார்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷ முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார். நாட்டில் சட்­டத்­தையும், ஒழுங்­கையும் நிலை­நாட்டி ஊழல்­களை இல்­லாமற் செய்­வ­தற்கு கோத்­தா­பய ராஜபக் ஷவி­னாலே முடியும். கடந்­த­கால தேர்­தல்­களில் முஸ்­லிம்கள் தாம் விட்ட தவ­று­களை இப்­போது உணர்ந்­து­கொண்­டுள்­ளார்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்திலே முஸ்லிம்களின் வர்த்தகம் அபிவிருத்தியடைந்தது. இன்று முஸ்லிம்கள் வர்த்தகத்தில் பின்தள்ளப்பட்டுள்ளனர். கோத்தாபயவின் எதிர்கால ஆட்சியில் முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு உத்தரவாதம் வழங்கப்படும்’’ என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.