சஹ்­ரானின் தாக்­கு­தல்கள் தொடர்பில் மூன்று வரு­டங்களில் 97 எச்­ச­ரிக்­கைகள்

தேசிய புலனாய்வு பிரிவு விடுத்ததாக நீதியரசர்கள் முன் சுட்டிக்காட்டு

0 714

பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசிம் உள்­ளிட்ட குழு­வி­னர்­களின் தாக்­கு­தல்கள் தொடர்பில் 97 எச்­ச­ரிக்கை அறி­வித்­தல்­களை தேசிய புல­னாய்வு பிரி­வினர் கடந்த மூன்று வரு­டங்­களில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாது­காப்பு செய­லா­ள­ருக்கு அறி­வித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி சட்­ட­த்த­ரணி சஞ்­சய ஜய­வர்­தன உயர் நீதி­மன்­றத்தில் தெரி­வித்தார்.

2017, 2018 மற்றும் 2019 ஆகிய வரு­டத்­திற்குள் தேசிய புல­னாய்வு துறையின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிலந்த ஜய­வர்­தன முன்­வைத்­துள்ள சத்­தியக் கட­தாசி மற்றும் ஏனைய ஆவ­ணங்­களின் மூலம் இந்த விடயம் உறு­திப்­ப­டுத்தப்பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தல்­களை தடுக்கத் தவ­றி­ய­மை­யினால் அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

ஏழு பேர் கொண்ட உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழா­மினால் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதே­வேளை, குறித்த தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் கீழ் அமைச்­ச­ரவை நாட்டு மக்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டுள்­ள­தா­கவும், பாது­காப்பு அமைச்சை மாத்­திரம் குற்­றச்­சாட்ட முடி­யா­தெ­னவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி இதன்­போது விளக்­க­ம­ளித்­துள்ளார்.

பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய தலை­மையில் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான புவ­னகே அலு­வி­ஹார, சிசி­ரத ஆப்ரூ, பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, எல்.டி.பீ.தெஹி­தெ­னிய மற்றும் மூர்து பெர்­னாண்டோ ஆகியோர் முன்­னி­லை­யி­லேயே 12 மனுக்­களும் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­த­லினால் தனது இரு பிள்­ளை­களை இழந்த வெல்­லம்­பிட்டி பகு­தியைச் சேர்ந்த நந்­தன சிறி­மான, சுற்­றுலா தொழிற்­ற­ுறையைச் சார்ந்த ஜனாத் வித்­தா­னகே, இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம், ஹென்றி மேரியன் அசோக் ஸ்டீவன், சரத் இந்­த­மல்­கொட மற்றும் ஹெல் எவன்ஸ்டன் பெர்­னாண்டோ ஜய­வர்­தன ஆகிய மத­கு­ருக்கள், நாகா­னந்த கொடித்­து­வக்கு, ஜூட் பெரேரா, நிமல் குமா­ர­சிறி உள்­ளிட்ட பிர­ஜைகள், அஹ்­கு­லு­கல்ல ஜீனா­நந்த தேரர் மற்றும் சட்­ட­த­ரணி முதித்த ஏக்­க­நா­யக்க உள்­ளிட்­ட­வர்­களே இந்த 12 அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர்.

புல­னாய்வுத் தகல்கள் கிடைக்­கப்­பெற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தேவா­ல­யங்­க­ளிலும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தல்­களை தடுக்க முடி­யாமல் போனது. இத­னூ­டாக மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக அந்த மனுக்­களில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பிரதி பொலிஸ்மா அதிபர் ஸ்ரீலால் திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டதரணி அனுஜ பிரேமரத்ன மற்றும் சட்டதரணி விரான் கொராயா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.