ஜனா­தி­ப­தியை சாட்­சி­ய­ம­ளிக்­கு­மாறு தெரி­வுக்­குழு எழுத்து மூலம் அழைப்பு

0 555

ஈஸ்டர் தாக்­குதல் குறித்த விசா­ர­ணைகள் நடத்தும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சாட்­சி­ய­ம­ளிக்க வரு­மாறு தெரி­வுக்­குழு ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூலம் அறி­வித்தல் விடுத்­துள்­ளது. 

ஜனா­தி­பதி தெரி­வுக்­கு­ழு­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினால் மட்­டுமே அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வுக்­குழு சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட விசேட தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் முடிந்­துள்ள நிலையில் இறு­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வாக்­கு­மூலம் மாத்­திரம் பெறப்­ப­ட­வுள்ள நிலையில் அடுத்த வாரங்­களில் ஒரு தினத்தில் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க வரு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு எழுத்­து­மூல அறி­விப்பை விடுத்­துள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு இல­கு­வான ஒரு தினத்தில் தாம் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வர முடியும் எனவும் அவ்­வாறு அவர் ஒத்­து­ழைப்பை வழங்­கினால் தெரி­வுக்­குழு அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த முடியும் எனவும் ஆகவே அதற்­கான ஒத்­து­ழைப்பை ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வுக்­கு­ழுவின் தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தெரி­வித்தார். தெரி­வுக்­குழு கால எல்­லையை ஒரு மாத­காலம் நீட்­டித்­துள்ள நிலையில் இந்த காலப்­ப­கு­தியில் அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

ஆகவே இதில் சகல தரப்­பி­ன­ரதும் ஒத்­து­ழைப்பு வேண்­டி­யுள்­ளது. அரச தலை­வர்கள் இதில் தமது பங்­க­ளிப்பை செய்தால் தான் இந்த விசா­ர­ணை­களை நாம் முன்­னெ­டுத்ததில் ஒரு முழு­மை­யான வெளி­ப்பாட்டை வெளிப்­ப­டுத்த முடியும் என்றார்.

எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தான் வரப்போவதில்லை எனவும் தெரிவுக்குழு நகர்வுகள் பக்கசார்பாக முன்னெடுக்கப்படுவதாக கூறி தான் தெரிவுக்குழு நகர்வுகளை நிராகரிப்பதாக தொடர்ச்சியாக இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.