8 மில்­லியன் குர்ஆன் பிர­திகள் விநி­யோகம்

0 897

இம் முறை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு 8 மில்­லியன் குர்ஆன் பிர­தி­களை சவூதி அரே­பியா விநி­யோ­கித்­துள்­ளது.

ஹஜ் காலத்தை முன்­னிட்டு இஸ்­லா­மிய விவ­கார, தஹ்வா மற்றும் வழி­காட்டல் அமைச்சு குர்­ஆன்­களை விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை தொடங்­கி­யது. சவூ­திக்கு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் வரும்­போது அவர்­களை குர்­ஆனைக் கொடுத்து வர­வேற்­பது ஒரு சம்­பி­ர­தா­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் அவ்­வ­மைச்சு மொழி­பெ­யர்க்­கப்­பட்ட குர்­ஆன்­க­ளையும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளது. இறு­தி­யாக யாத்­தி­ரி­கர்கள் கட­மை­க­ளுக்­காக புறப்­ப­டு­வ­தற்கு முன்­னரே குர்ஆன் தொடர்­பான ஆலோ­சனை மற்றும் வழி­காட்டல் நூலினை பெற்றுக் கொள்வர்.

இந்த செயற்­பாட்டின் நோக்கம் யாத்­தி­ரி­கர்கள் மத்­தியில் முறை­யான விழிப்­பு­ணர்வை ஊட்­டு­வதும் நம்­பிக்கை, வழி­பாடு மற்றும் நடத்தை என்­ப­வற்றை முறை­யாக பின்­பற்­று­வதும் ஆகும்.

வெளி­யீட்டு விவ­காரம் மற்றும் கல்­விசார் ஆய்வுத் திணைக்­க­ளத்தின் செய­லாளர் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அல் ஹம்தான் தெரி­வித்­த­தன்­படி ஹஜ் காலத்­திற்­காக வேண்டி இந்த வருடம் 30 மொழி­களில் 52 வகை­யான நூல்கள் வெளி­யிட உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. குர்­ஆனின் 8 மில்­லியன் பிர­திகள், பாரம்­ப­ரிய நூல்கள், மற்றும் வழி­காட்டல் நூல்கள் என்­பன ஏற்­க­னவே வழங்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இஸ்­லா­மிய இலத்­தி­ர­னியல் நூல­க­மா­னது அமைச்­சினால் எழு­தப்­பட்ட நூல்கள் மற்றும் புத்­த­கங்­களின் குரல் பதிப்­புக்­களை சவூ­தியில் ஹஜ்-­உம்ரா யாத்­தி­ரி­கர்கள் சந்­திக்­கின்ற ஒவ்­வொரு சர்­வ­தேச விமான நிலை­யத்­திலும் வெளி­யேறும் இடங்­க­ளிலும் ஒரு­சில பள்­ளி­வா­சல்­க­ளிலும் மற்றும் முக்­கி­ய­மான இடங்­க­ளிலும் கிடைக்கக் கூடி­ய­வாறு செயற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் www.islamic-ebook.com என்ற இணை­யத்­த­ளத்தின் ஊடாக எந்­த­வெரு நப­ராலும் இந்த சேவையை பெற முடியும்.

எம்.ஏ.எம். அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.