ஹஜ் செய்தித் தொகுப்பு – 2019

0 650

ஹஜ் யாத்­தி­ரையின் போது தேவை­யான முத­லு­த­வி­களை வழங்கும் நோக்கில் சவூதி செம்­பிறைச் சங்­கத்தின் தொண்­டர்கள் 1600 பேர் மக்கா மற்றும் மதீ­னாவில் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 550 பேர் மக்கா பெரிய பள்­ளி­வாசல் பகு­தி­யிலும் 1050 பேர் மதீ­னா­விலும் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

இம்முறை புனித ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் 7200 குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. யாத்திரிகர்களுக்கான சேவைகள், பொறியியல் கட்டுமானம் தொழில்நுட்பம், கலாசாரம், தகவல் ஆகிய துறைகள் அடங்கலாக இக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக் குழுக்கள் யாத்திரிகர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதையும் மேற்பார்வை செய்யவுள்ளன.

மேலும் இரு புனிதத் தலங்களை சுத்தப்படுத்தல், தரை விரிப்புகள், ஸம் ஸம் நீர், வயதானவர்கள் மற்றும் வலது குறைந்தோர் பயணிக்க உதவுதல், தொழுகை இடங்களின் சுத்தம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பும் இக் குழுக்களைச் சாரும்.

இம்­முறை விமான நிலை­யங்­களை வந்­த­டையும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான மொழி­பெ­யர்ப்பு ரீதி­யான உத­வி­களை வழங்கும் வகையில் நூற்றுக் கணக்­கான தொண்­டர்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்னர். இதற்­க­மைய சுமார் 10 மொழி­களில் தக­வல்­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் வழங்­கு­வ­தற்­கென 500 தொண்­டர்கள் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி கடவுச் சீட்­டு­க­ளுக்­கான பொதுப் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. இத்­திட்டம் புதி­ய­தல்ல. இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

சுமார் 25 ஆயிரம் வரை­யான யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இம்­முறை மினாவில் அணிந்து கொள்ளக் கூடிய உயர் தொழில்­நுட்ப அட்­டைகள் வழங்கும் பரீட்­சார்த்த திட்­டத்தை சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த அட்­டையில் யாத்­தி­ரி­கர்­களின் தனிப்­பட்ட தக­வல்கள், உடல் ஆரோக்­கிய நிலைமை, வதி­விடம் மற்றும் ஹஜ் யாத்­தி­ரை­யுடன் தொடர்­பு­டைய ஏனைய தக­வல்கள் அடங்­கி­யி­ருக்கும். அத்­துடன் குறித்த யாத்­தி­ரிகர் இருக்கும் இடத்தை உடன் கண்­ட­றியக் கூடிய தொழில்­நுட்ப வச­தியும் இதில் உட்­பு­குத்­தப்­பட்­டுள்­ளது.

அடுத்து வரும் வரு­டங்­களில் இந்த அட்­டை­களின் எண்­ணிக்­கை 2 இலட்சம் வரை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த அட்­டை­களை இயந்­தி­ரத்தில் உடன் ஸ்கேன் செய்­வதன் மூலம் சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியுமாகவிருக்கும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.