பரீட்சை எழுதும் மாணவிகளுக்கு பர்தாவைக் கழற்றுமாறு உத்தரவு

0 588

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்­தி­வெல மத்­திய கல்­லூரி பரீட்சை நிலை­யத்தில் க.பொ.த உயர் தர பரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் மாண­வி­களை பர்­தாவைக் கழற்­றி­விட்டு பரீட்சை எழுத நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. அத்­துடன் நிட்­டம்­புவ மற்றும் வெலி­மடை போன்ற பகு­தி­க­ளிலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

கிரிந்­தி­வெல மத்­திய கல்­லூரி பரீட்சை நிலை­யத்தில் இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

நேற்று ஆரம்­ப­மான க.பொ.த. உயர்­தர பரீட்­சையில் இஸ்லாம் பகுதி I இற்­கான பரீட்­சைக்கு தோற்­ற­வந்த பூகொட குமா­ரி­முல்லை முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்தின் நான்கு மாண­விகள் பர்தா அணிந்து பரீட்­சைக்குத் தோற்ற மேற்­பார்­வை­யா­ளர்கள் தடை விதித்­துள்­ளனர்.

நேற்றுக் காலை 8.00 மணி­ய­ளவில் இஸ்லாம் பாடத்­திற்­கான பகுதி I வினாத்தாள் விநி­யோ­கிக்­கப்­பட்ட போது, குறித்த மாண­வி­க­ளிடம் பர்­தாவை அகற்­றி­னாலே வினாத்தாள் வழங்­கப்­படும் என்று பரீட்சை நிலையப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு கட்­ட­ளை­யிட்­ட­தனால் தாம் பர்­தாவைக் கழற்­றி­விட்டு பரீட்­சைக்குத் தோற்ற வேண்­டி ஏற்­பட்­ட­தாக மாண­விகள் குறிப்­பிட்­டனர்.

இத­னை­ய­டுத்து பரீட்­சையை எழுதிக் கொண்­டி­ருந்த வேளையில் இம்­மா­ண­வி­க­ளுக்கு பெற்றோர் சால்­வை­களைக் (ஷோல்) கொண்டு வந்து கொடுத்­துள்­ளனர். இதனை அணிந்தே மாண­விகள் பரீட்­சைக்குத் தோற்­றி­யுள்­ளனர்.
இது தொடர்பில் பூகொட குமாரி முல்லை முஸ்லிம் மகா வித்­தி­யா­லய அதிபர் எம்.ஆர்.மொஹம்­ம­திடம் வின­வி­ய­போது, இச்­சம்­பவம் தொடர்­பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடமும் கம்பஹா கல்விப் பணிப்பாளரிடமும் முறையிட்டதாகவும் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரியிடமும் கேட்டறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

பூகொட நிருபர்

விடிவெள்ளி 

Leave A Reply

Your email address will not be published.