ஹஜ் 2019 செய்தித் தொகுப்பு

0 606

ஹிஜ்ரி 1440 புனித ஹஜ் யாத்­தி­ரையின் முத­லா­வது நாள் எதிர்­வரும் 9 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை என சவூதி அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. அத்­துடன் மறுநாள் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை அறபா தினம் என்றும் 11 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சென்ற புதன்­கி­ழமை வரை இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக 1,249,951 யாத்­தி­ரி­கர்கள் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ளனர்.

புனித ஹஜ் யாத்­தி­ரையை திறம்­பட நடாத்தும் வகையில் மக்கா மாந­கர சபை 23 ஆயிரம் பேரை மேல­தி­க­மாக பணிக்­க­மர்த்­தி­யுள்­ள­தாக மாநாகர மேயர் முஹம்மத் அப்­துல்லாஹ் அல் குவைஹி தெரி­வித்­துள்ளார். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சேவையில் ஈடு­படுகின்றனர். ஹாஜி­க­ளுக்கு வழங்­கப்­படும் உணவு மாதி­ரி­களை பரி­சீ­லித்தல், குடிநீர் விநி­யோகம், மின்­சார விநி­யோகம், கழி­வ­றை­களை பேணுதல், நகரை உட­னுக்­குடன் சுத்­தப்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்கள் தொடர்பில் இவர்கள் கவனம் செலுத்­த­ுகின்றனர். இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையை நிர்­வ­கிப்­பதில் மொத்­த­மாக 350,000 பேர் ஈடு­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் 17 ஆயிரம் சிவில் பாது­காப்பு ஊழி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளது தேவைக்­காக 3000 வாக­னங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சிவில் பாது­காப்பு பிரிவின் பணிப்­பாளர் லெப்­டினன்ட் ஜெனரல் சுலைமான் அல் அம்ரோ தெரி­வித்­துள்ளார். சவூதி ஹஜ் ஏற்­பாட்­டுக்­கு­ழுவின் மேற்­பார்­வையில் இந்த ஊழி­யர்கள் தமது பணி­களை முன்­னெ­டுத்துள்ளனர். யாத்­தி­ரி­கர்கள் சன நெரிசல் உள்­ளிட்ட அனர்த்­தங்­களில் சிக்கிக் கொள்­ளாத வகையில் இவர்கள் வழி­காட்­டல்­களை வழங்கி வருகின்றனர். அத்­துடன் அவ­சர தேவை­க­ளின்­போது இந்த அணி­யினர் உடன் விரைந்து தமது சேவையை வழங்­குவர்.

உரிய ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஹஜ் யாத்­தி­ரையில் ஈடு­பட முனைந்த 329000 பேர் புனித தலங்­க­ளுக்குள் நுழைய முடி­யா­த­வாறு தடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மக்கா ஆளுநர் இள­வரசர் காலித் அல் பைசல் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் அனு­ம­தி­யின்றி நக­ருக்குள் நுழைய முயன்ற 144000 வாக­னங்கள் திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டுள்­ள­துடன் யாத்­தி­ரி­கர்­களை சட்­ட­வி­ரோ­த­மாக ஏற்றிச் சென்ற 15 சார­தி­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் 181 போலி ஹஜ் அலு­வ­ல­கங்­களும் மூடப்­பட்­டுள்­ளன.

மன்னர் சல்­மானின் அழைப்பின் பேரில் அவ­ரது விருந்­தி­னர்­க­ளாக இம்­முறை 6000 பேர் உல­கெங்­கி­லு­மி­ருந்து ஹஜ் கட­மைக்­காக சவூ­திக்கு வருகை தரு­கின்­றனர். இவர்­களை விமான நிலை­யத்­தி­லி­ருந்து அழைத்­து­வ­ரு­வது முதல் மீண்டும் அவர்­க­ளது நாட்­டுக்கு வழியனுப்பி வைக்கும் வரை சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில் உயர்தர வசதிகளைக் கொண்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் வண்டிகள் யாத்திரிகர்களுக்கு பரிச்சயமான மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்கும் வகையில் திரைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

எஸ்.என்.எம். ஸுஹைல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.