மாகாண சபைத் தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்

0 573

மாகாண சபைத் தேர்தல் மேலும் தாம­தப்­ப­டுத்­தப்­ப­டாது உடன் நடத்­தப்­பட வேண்­டு­மென ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுக்­கூட்­டத்தில் பிரே­ர­ணை­யொன்று கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர திசா­நா­யக்­க­வினால் கொண்டு வரப்­பட்ட இப்­பி­ரே­ரணை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி சில்­வா­வினால் ஆமோ­திக்­கப்­பட்­ட­துடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. உட­ன­டி­யாக உயர்­நீ­தி­மன்றின் கருத்­தினை வினவி விரைவில் மாகாண சபை தேர்தல் நடாத்­தப்­பட வேண்டும் என பிரே­ரணை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டது எனவும் அவர் கூறினார்.

தேர்­தல்கள் ஆணை­யாளர் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்-துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.