தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்பல்ல

ஏப்ரல் 21 தாக்குதல் 3 மாத நினைவு நிகழ்வில் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

0 874

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூற வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. முஸ்லிம் குழு­வொன்­றினால் இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சர்­வ­தேச தலை­யீட்­டினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளா­கவே இதனை நான் நம்­பு­கிறேன்.

சர்­வ­தேச அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு முஸ்லிம் மக்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். எனவே சர்­வ­தேச அதி­கார சக்­தி­க­ளுக்­காக அடிப்­ப­டை­வா­தத்தை நோக்கி பய­ணிக்­காமல் உண்­மை­யான இஸ்­லா­மிய மத போத­னை­களை பாது­காக்க சகல முஸ்லிம் மக்­களும் ஒன்­று­பட வேண்டும் என பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை வேண்­டு­கோள்­வி­டுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் மூன்று மாதங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம் மற்றும் கட்­டு­வாப்­பிட்டி புனித செபஸ்­தியார் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் இடம்­பெற்ற விஷேட ஆரா­த­னை­களில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பேராயர் மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டினார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், முஸ்லிம் தலை­வர்­க­ளி­டமும் ஒரு கோரிக்­கையை முன்­வைக்­கிறேன். இஸ்­லாத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களை திரி­பு­ப­டுத்தி அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் இனங்­கா­ணப்­பட்டால் அவர்­களை சமூ­கத்­தி­லி­ருந்து முற்­றாக ஒதுக்கிவிட வேண்டும். ஆயு­தங்­களை உற்­பத்தி செய்யும் முஸ்லிம் நாடுகள் அவற்றை விற்­பனை செய்­வ­தற்­கா­கவும் தமது தவ­றான கொள்­கை­களை ஏனையோர் மீது திணிப்­ப­தற்கும் அப்­பாவி இளை­ஞர்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதற்கு உள்­நாட்டில் இட­ம­ளிக்­கப்­படக் கூடாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.
சர்­வ­தேச ஆயுத வியா­பா­ரத்­துக்கு எமது நாட்டை இலக்­காக்கி விடக் கூடாது. சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்­காக புல­னாய்­வுத்­து­றையை வலு­வி­ழக்கச் செய்து சகல பிரச்­சி­னை­க­ளையும் தோற்­று­வித்­தார்கள். ஆகவே எவரும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­படக் கூடாது. அதே­போன்று முஸ்லிம் மக்கள் அவர்­களின் மத போதனை­க­ளையும் அவர்­களின் சமூ­கத்­தையும் பாது­காப்­பது அவ­சி­ய­மாகும்.

இந்த தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக இருந்த சம்­வங்கள் தொடர்பில் அர­சாங்கம் எந்த கவ­னமும் செலுத்­த­வில்லை. மாவ­னெல்லை, வணாத்­த­வில்லு ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்கம் ஆழ்ந்த கவனம் செலுத்­தி­யி­ருந்தால் இந்த இழப்­பு­களை சந்­திக்க நேர்ந்­தி­ருக்­காது. நாட்டை கொண்டு செல்ல முடி­யா­விட்டால் அர­சாங்கம் ஆட்­சியை வேறு எவ­ரி­ட­மா­வது கைய­ளிக்க வேண்டும்.

விசா­ர­ணை­களில் நம்­பிக்­கை­யில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய்­வ­தற்கு சுயா­தீ­ன­மான உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் மீதோ அவற்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் மீதோ எவ்­வித நம்­பிக்­கையும் எமக்கு இல்லை. இது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழு­வொன்றின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் எமக்கு இது­வ­ரையில் எந்த தக­வலும் கிடைக்கப் பெற­வில்லை. அந்த அறிக்­கையின் மூலப்­பி­ர­தியைக் கூட நாம் பார்க்­க­வில்லை.

இந்த தாக்­கு­தல்கள் குறித்து நாட்டில் அர­சியல் தலை­வர்கள் யாரும் கவ­னத்தில் கொள்­ளா­த­தோடு நாட்கள் செல்லச் செல்ல இதனைப் புறந்­தள்­ளி­விட்­டார்கள். இது குறித்த விசா­ர­ணைகள் எது­வுமே ஆக்­க­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

அர­சியல் தலை­மைகள் இந்த விட­யத்தில் இன்­னமும் ஒரு­வரை ஒரு­வர் குறை­கூறிக் கொண்­டி­ருக்­காமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இதன்­பின்­னரும் இவ்­வா­றான அடிப்­ப­டை­வாத தாக்­குதல் இடம்­பெ­றாமல் பார்த்துக் கொள்­வ­தோடு நாட்டில் அமை­தி­யையும் சட்ட ஒழுங்­கையும் நல்­லி­ணக்­கத்­தையும் நிலை­நாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கின்றோம். இது போன்­ற­தொரு பயங்­க­ர­வாதத் தாக்­குதல் இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல. உலகில் எந்த நாட்­டிலும் இடம்­பெற்று விடக் கூடாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

புல­னாய்வுப் பிரிவின் பல­வீனம்

பலம் வாய்ந்த புல­னாய்­வுப்­பி­ரிவு அர­சியல் தேவை­க­ளுக்­கா­கவும், புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்­கா­கவும் தொடர்ந்து பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­ட­மையின் கார­ண­மா­கவே சர்­வ­தேச தீவி­ர­வாதம் மிக இல­கு­வாக தமது மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை முன்­னெ­டுத்து தமது குறு­கிய நோக்­கத்தை வெற்றி கொண்­டுள்­ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­கூட்­டியே தக­வல்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்தும் முறை­யான செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­ததன் மூலம் புல­னாய்­வுப்­பி­ரிவின் இய­லாமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சர்­வ­தே­சத்தின் விருப்­பிற்­காக எமது நாட்டு அர­சியல் தலை­மைகள் புல­னாய்­வுப்­பி­ரிவை செயற்­ப­ட­வி­டாமல் தடுத்­த­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும்.
புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­கா­ரிகள் யாரேனும் தவறு செய்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டு­வது ஒரு புறம். ஆனால் அதற்­காக முழு புல­னாய்வுப் பிரி­வையும் கட்­டுப்­ப­டுத்தி அவர்­க­ளது செயற்­பா­டு­களை முடக்­கு­வது தவ­றாகும். நாம் ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு ஏற்றாற் போல வாழ வேண்­டி­ய­தில்லை. அந்த நாட்டு தலை­வர்­க­ளுக்கு ஏற்றாற் போல எமது நாட்டை ஆட்சி செய்­யவும் இட­ம­ளிக்க முடி­யாது. புல­னாய்­வுப்­பி­ரிவு பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். குற்­ற­வா­ளிகள் கண்­ட­றி­யப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். மாறாக உண்­மை­களை மறைக்­கவோ குற்­ற­வா­ளி­களை பாது­காக்­கவோ யாரும் முயற்­சிக்கக் கூடாது.

அர­சியல் அதி­கார போட்டி

தாக்­குல்­தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக இந்திய தூதரகத்தால் நாட்டில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த தகவல்களினூடாக தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆயினும் துரதிஸ்டவசமாக, அரசியல் அதிகாரப் போட்டியில் இந்த குண்டுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வில்லை.

தற்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆணைக்குழுக்களை நியமித்து அவர்களுக்கு ஏற்றவாறு அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறார்கள். கட்சிகளுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் ஏற்றவகையில் அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தும் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.