முஸ்லிம் அமைச்சர்களின் மீள் பத­வி­யேற்பு அர­சியல் நாடகமே

மஹிந்த அமரவீர சாடல்

0 543

முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் கூட்­டாகப் பதவி வில­கி­யமை மிக அழ­காக அரங்­கேற்­றப்­பட்ட நாட­க­மாகும். அவர்கள் அனை­வரும் கூட்­டாகப் பதவி வில­கி­யதை நாம் வர­வேற்­க­வில்லை.

ஆனால் முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாக பதவி விலகி அனை­வரும் குற்­ற­வா­ளிகள் போலா­கி­விட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

கூட்­டாகப் பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் மீண்டும் பத­வி­யேற்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் கூட்­டாகப் பதவி வில­கி­யதில் எமக்கு உடன்­பாடு கிடை­யாது. அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்கள் கூட குற்­றஞ்­சாட்­டப்­பட்­டவர் தவிர ஏனை­யோரை மீண்டும் பத­வி­யேற்றுக் கொள்­ளு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள். ஆனால் அவர்கள் அனை­வரும் கூட்­டாகப் பத­வி­வி­லகி குற்­றஞ்­சாட்­டப்­பட்ட­வ­ருடன் ஒன்­றித்து விட்­டார்கள்.

அதா­வது, குற்­றஞ்­சாட்­ட­பட்­ட­வரும், குற்­றஞ்­சாட்­டப்­ப­டா­த­வர்­களும் ஒன்­றா­கி­விட்­டார்கள். எவ்­வா­றி­ருப்­பினும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய அனை­வ­ருக்கும் தண்­டனை கிடைக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

தொடர்ந்து பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னான கூட்­டணி மற்றும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் அவர் தெரி­விக்­கையில், பொது­ஜன பெர­முன அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வேட்­பாளர் குறித்து கல­வ­ர­ம­டையச் தேவை­யில்லை. இப்­போ­துதான் கூட்­டணி தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அவை நிறை­வ­டைந்த பின்­னரே வேட்­பாளர் மற்றும் தலை­மைத்­துவம் பற்றி பேச முடியும்.

கோதா­பய ராஜபக் ஷ மாத்­தி­ர­மல்ல, எந்­த­வொரு தனிப்­பட்ட நபர் மீதும் எமக்கு அதி­ருப்தி கிடை­யாது. அதே­போன்று ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் இரு­த­ரப்­பிலும் ஒவ்­வொ­ரு­வரும் தத்­த­மது தனிப்­பட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் கூட்­டணி அமைக்­கப்­பட்டால் இரு தரப்­பி­லி­ருந்தும் பொது வேட்­பாளர் ஒரு­வரே நிய­மிக்­கப்­பட வேண்டும்.

எனினும், கூட்­டணி அமை­வதை விரும்­பாத சிலர் இந்த முயற்­சியை முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே இவ்­வா­றான முரண்­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கி­றார்கள். எனவே கூட்­டணி உரு­வா­னதன் பின்­னரே தலை­மைத்­துவம் மற்றும் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட வேண்டும் என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.