மரணத்தோடு மகிழும் சிறிசேன

1968 இல் தூக்கிலடப்பட்ட கைதியின் கதையை முன்னிறுத்தி...

0 684

அது, 1968 களின் ஆரம்­பக்­கட்டம், நான் சிறைச்­சாலை சேவையில் இணைந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மறுநாள் காலை 8.00 மணிக்கு மரண தண்­டனைக் கைதி ஒருவர் தூக்­கி­லி­டப்­ப­ட­வுள்ளார். அதனைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக அன்று காலை 7.00 மணிக்கு வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில் பிர­சன்­ன­மா­கு­மாறு எனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட நேரத்­திற்கு முன்­னரே நான் சிறைக்­கூ­டத்­திற்குச் சென்றேன். தூக்­கி­லி­டு­வ­தற்கு முன்னர் குறித்த கைதி­யோடு கதைக்க வேண்டும் என்று விரும்­பினேன். அப்­போது வெலிக்­கடை சிறைச்­சா­லையின் அத்­தி­யட்­ச­க­ராக கட­மையில் இருந்­தவர் ஞான­சுந்­தரம் என்­பவர். அவ­ரிடம் எனது விருப்­பத்தை தெரி­வித்து அறிக்­கையைச் சமர்ப்­பித்தேன். கட­மையில் கண்­டிப்­பாகக் கரு­ம­மாற்றும் அவர் சற்றுத் தயங்­கிய பின்­னரே அனு­ம­தி­ய­ளித்தார். மர­ண­வாசல் என வர்­ணிக்­கப்­படும் குறித்த சிறை­கூடப் பகு­திக்கு வழி­காட்டும் சிறைச்­சாலை அதி­கா­ரி­யொ­ருவர் என்னை அழைத்துச் சென்றார். தூக்­கி­லி­டப்­ப­டு­பவர் தூக்­கு­மே­டைக்கு அரு­கே­யுள்ள அறை­கூ­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். இதுதான் நடை­முறை. சுமார் 40 வயது மதிக்­கத்­தக்க அவர் வாட்­ட­சாட்­ட­மான உடல் தோற்­ற­மு­டை­யவர். மரண தண்­டனைக் கைதி­யொ­ரு­வரைச் சந்­திக்கும் எனது முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். இவ­ரிடம் முதலில் எதனை வின­வு­வது? சிறைக் கைதி­யொ­ரு­வ­ரிடம் தண்­டனை வழங்­கப்­பட்ட வழக்கு குறித்து வினவ வேண்டும் என்­பதை நான் முன்னர் தெரிந்து வைத்­தி­ருந்தேன். அதற்­க­மைய அவ்­வாறு வினாத் தொடுத்தேன். அவ­ரது வாழ்வின் இறு­திக்­கட்­டத்தில் அவ­ரது கதையை யாரி­ட­மா­வது சொல்ல வேண்டும் என்ற ஆவலில் இருந்­தவர் போல அவ­ரது உள்­ளத்­தி­லி­ருந்து வார்த்­தைகள் மட­ம­ட­வென வெளி­வந்­தன.

எங்­க­ளுக்குள் நட்பு ரீதி­யான பிணைப்­பொன்று துளிர்­விட்­டது. “கொலைக் குற்­றத்­திற்கே எனக்கு இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னர் நான் எந்தக் குற்றச் செய­லிலும் ஈடு­பட்­ட­வ­னல்ல. நான் மொறட்­டு­வையில் மரத்­த­ள­பாட நிறு­வ­ன­மொன்றை நடத்தி வந்தேன். நான்கு பேர் என்­னிடம் வேலை பார்த்து வந்­தனர். நான் நல்ல முறை­யிலே வாழ்ந்து வந்தேன். நான் கொலை செய்த நபர் எமது குடும்­பத்­திற்கு தொல்லை கொடுத்துக் கொண்­டி­ருந்தார். அவன் ஒரு சண்­டியன். கப்பம் பெற்றே வாழ்ந்து வந்தான். அவன் எமது ஊருக்கு மாத்­தி­ர­மின்றி அயல் ஊருக்கும் பெரும் தொல்­லை­யா­கவே இருந்து வந்தான். கப்பம் தொடர்­பான ஒரு பிரச்­சி­னையில் அவன் எனது சகோ­த­ரனைக் கொலை செய்தான். எனது சகோ­தரன் மிகவும் திற­மை­வாய்ந்த தச்­சுத்­தொ­ழி­லா­ளி­யாகத் திகழ்ந்­தவர். என்­னு­டனும் அந்தச் சண்­டியன் அடிக்­கடி மோதியே வந்தான். சம்­பவ தினத்­தன்று நான் வேலை­மு­டித்து பஸ்­வண்­டி­யி­லி­ருந்து இறங்கி வந்து கொண்­டி­ருந்தேன். அப்­போது அவன் என்­னுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டு என்னைத் தாக்­கினான். நானும் பதி­லுக்கு அடித்து மல்­லுக்­கட்­டினேன். அப்­போது என்­னி­ட­மி­ருந்த வெட்­டு­ளியால் அவன் மீது பல­முறை குத்­தினேன். அதனால் அவன் அவ்­வி­டத்­தி­லேயே இறந்தான்”.

“அதன் விளைவை இப்­போது உணர்­கி­றீர்­களா?” என்று நான் கேட்டேன். அதற்­கவர் “நான் ஒரு பௌத்தன். மனித உயிர் ஒன்றைக் கொலை செய்­த­தற்­காக நான் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறேன். அத­னின்றும் இப்­போது மனதைத் தேற்றிக் கொண்­டி­ருக்­கிறேன். இப்­போது எனது குடும்­பமும் ஊர் மக்­களும் சமா­தா­னத்­துடன் இருந்து வரு­கி­றார்கள்.

எனது ஊர் மக்­களும் பிக்­கு­மார்கள், கிறிஸ்­தவ மத குரு­மார்கள் எல்­லோரும் சேர்ந்து கையொப்­ப­மிட்டு எனக்கு மன்­னிப்­ப­ளிக்­கும்­படி ஆளு­ந­ருக்கு மனு­வொன்றை அனுப்­பி­யுள்­ளார்கள். ஆனாலும் அதற்கும் எதுவும் நடக்­க­வில்லை. நாம் அதிக செல்­வாக்­குள்­ள­வர்கள் அல்­லவே. சாதா­ரண கிராம குடி­மக்கள் தானே. எனது மனை­வியும் இளம் வயது எனக்கு எட்டு வயதில் ஒரு மகன் இருக்­கிறான். அவர்கள் இரு­வரும் நேற்று என்னைப் பார்க்க வந்­தார்கள். நான் எனது மனை­வியைப் பார்த்து நீங்கள் இன்னும் வாலிபப் பரு­வத்தில் இருக்­கி­றீர்கள். என்னைப் போல உங்கள் வாழ்­வையும் வீணாக்கிக் கொள்ள வேண்டாம். வேறு நல்­லொ­ரு­வரை மணந்து எனது மக­னையும் நல்ல முறையில் வளர்த்­துக்­கொள்­ளுங்கள்” என்று கூறினேன்.

“ஆழ்ந்த சோகத்­துக்கு மத்­தியில் நான் ஒரு­வாறு மன­தைத்­தேற்றிக் கொண்­டி­ருக்­கிறேன். எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. கோழை­யாக மர­ணிக்­கவும் நான் விரும்­பு­வ­தில்லை” என்று அவர் கூறினார். எமக்குத் தரப்­பட்ட நிமி­டங்­களும் முற்­றுப்­பெற்­றன.

அப்­போது சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர், பிரதி பிஸ்கால் அதி­காரி, வைத்­திய அதி­காரி, பௌத்த பிக்கு, சிறைச்­சாலை உயர் அதி­கா­ரிகள், சிறைக் காவ­லர்கள் ஆகியோர் வந்தனர். சிறைச்­சாலை உயர் அதி­காரி பிரதி பிஸ்கால் அதி­கா­ரி­யிடம் தூக்குத் தண்­ட­னைக்குத் தயா­ரா­க­வுள்­ள­வரின் பெய­ரையும் இதர விப­ரங்­க­ளையும் கேட்டு பதிந்து கொண்டார். ஆள்­மா­றாட்டம் இடம்­பெற்­றி­ருக்­குமா என்­பதை உறு­தி­செய்து கொள்­வ­தற்கே இவ்­வாறு பெயர், விப­ரங்­களைக் கேட்டு தூக்­கி­லி­டப்­ப­டு­பவர் குறித்து சரி­யாக உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கே இவ்­வாறு நடந்து கொள்­வதைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.அதனைத் தொடர்ந்து பௌத்த பிக்கு சமய வழி­பா­டொன்­றினை நிகழ்த்­தினார். அதன் பின்னர் சிறை சிற்­ற­றையைத் திறந்து சிறைக்­கா­வலர், அலு­கோசு ஆகியோர் அத­னுள்ளே சென்றனர். தடித்த சொர சொரப்­பான நீண்ட அங்­கி­யொன்றை மரண தண்­டனைக் கைதிக்கு அணி­வித்­தனர். அது இரு கைகளின் தோள்ப்­பட்­டை­யி­லி­ருந்து பாதம் வரை­யிலும் நீள­மான குப்­பாயம் போன்ற ஆடை­யாகும். பின்னர் இரு­கை­களும் சேர்த்துக் கட்­டும்­ப­டி­யான அக­ல­மான துணிப் பட்­டி­யொன்று மார்பைச் சுற்றிக் கட்­டப்­பட்­டது. முன்னர் கூறப்­பட்­ட­வா­றான தடித்த துணியால் தைக்­கப்­பட்ட உச்­சந்­த­லை­யி­லி­ருந்து கழுத்து வரை­யி­லு­மான தொப்பி உறை­யொன்று தலையில் அணி­விக்­கப்­பட்டு, கைதி தூக்­கு­மே­டைக்குக் கொண்டு வரப்­பட்டார். முகம் திறந்த நிலையில் அவ­ரது முகத்தில் கவ­லையின் ரேகைகள் படர்ந்­தி­ருப்­பதை சொல்­லிலோ எழுத்­திலோ வடிக்க முடி­யாது. சோகத்­தோடு துணி­வையும் அவ­தா­னிக்க முடிந்­தது. பின்னர் அலு­கோசு காப்புப் போன்ற நாடாவால் இரு பாதங்­க­ளையும் சுற்றி இறுகக் கட்­டினார். இறுதிப் பய­ண­மா­வதை அவர் உணர்ந்­த­வ­ராக எம்மை நோக்கி, “சேர் நான் போகிறேன்” என்று கூறி விடை பெற்றார். இதயத் துடிப்பின் இறுதிக் கட்டம் அது. முன்னர் பை போன்று தலையில் அணி­வித்­தி­ருந்த முக­மூடித் துணி கீழே இழுக்­கப்­பட்டு முகம் மறைக்­கப்­ப­டு­கி­றது. தூக்­குத்­தொண்டு கழுத்தைச் சுற்றி வைக்­கப்­ப­டு­கி­றது. பீதியால் என்­னுள்ளம் பட படத்­தது. கண்­க­ளி­லி­ருந்து தீப்­பொறி பறந்­தது. தலை­சுற்றித் தள்­ளா­டி­யது. சில நிமி­டங்­க­ளுக்கு முன்னர் சோகக் கதை பொழிந்த அந்த நபர் என் கண்­ணெ­திரே பயங்­க­ர­மாக மர­ணிக்கும் காட்சி. ஒரு கணம் திக்­பி­ரமை பிடித்து நின்றேன். இத்­த­கைய நீதி தர்­மத்தின் பெயரால் விளையும் மனிதப் படு­கொலை என்ற உணர்வே என் உள்­ளத்தில் உதித்­தது. கொலை கொடூரம் என்றால் அர­சாங்­கத்தால் கொல்­லப்­ப­டு­வதும் கொடூ­ரம்தான். அப்­போது என் மனதில் மின்­னலாய்ப் பளிச்­சிட்ட வார்த்­தைகள் தான் அவை.

பிரதிப் பிஸ்கால் அதி­காரி தலை­ய­சைத்தார். அலு­கோசு ஆழியை இழுத்தார். தூக்குக் கயிறு மெல்லத் திறந்து ஆள் கீழே விழுந்தார். நான் அருகே சென்று எட்டிப் பார்த்தேன். அக்காட்சிளைப் கண்டு என் கண்கள் நிலை­குத்தி நின்­றன. அங்கு அவ­தா­னத்­துடன் நின்ற அதி­கா­ரிகள் தூக்­கு­க்கு­ழியின் அருகே சென்­றனர். வைத்­திய அதி­காரி நாடித் துடிப்பு கண்­ட­றியும் தனது குழலை கைதியின் மார்பின் மீது வைத்து இதயத்துடிப்பு செய­லி­ழந்து விட்­டதா என்று பரி­சோ­தித்தார். பின்னர் சில நிமி­டங்கள் கழித்து மீண்டும் வைத்துப் பார்த்தார். பின்னர் சட­லத்தை எடுக்­கும்­படி கூறினார். அதனைத் தொடர்ந்து திடீர்­ம­ரண விசா­ரணை அதி­காரி பரி­சோ­தனை நடத்தி “நீதி­மன்­றத்தால் தூக்­கி­லிட்டுக் கொல்­லும்­ப­டி­யான தீர்ப்­புக்­க­மைய மூச்சுத்திணறி நிகழ்ந்த மரணம்” என்று அறிக்­கை­யிட்டார்.

சுருக்­க­மாகச் சொல்­வ­தானால் அன்று நான் மிகவும் பயங்­க­ர­மான அனு­பவம் ஒன்­றையே பெற்றேன். அதன் மனத்­தாக்­கத்தால் பல நாட்கள் சாப்­பி­டவோ குடிக்­கவோ முடி­யாது சோகத்தில் உறைந்து போயி­ருந்தேன். இரவு நித்­தி­ரையில் பயங்­கரக் கன­வு­களும் தென்­பட்­டன. சிறைச்­சாலை சேவைக் காலத்தில் மீண்­டு­மொரு இத்­த­கைய பயங்­க­ரக காட்­சிகள் காணக் கிடைக்­கக்­கூ­டாது என்றே பிரார்த்­தித்தேன்.

சிறைச்­சா­லையின் முன்னாள் ஆணை­யா­ள­ரான எச்.ஜீ. தர்­ம­தாஸ சண்டே டைம்ஸ் பத்­தி­ரி­கையில் எழு­திய தனது அனு­பவக் கட்­டு­ரையின் ஒரு பகு­தி­யையே மேலே குறிப்­பிட்­டி­ருந்தேன்.

மனி­தா­பி­மா­னத்தை தலை­கு­னிய வைக்கும் மரண தண்­ட­னையின் விளை­வு­களை இதன் மூலம் புரிந்­து­கொள்ள முடி­கி­றது.

மேற்­கண்­ட­வாறு மரண தண்­ட­னைக்கு இரை­யான நபரைப் போன்றே இங்­குள்ள சிறைக்­கூ­டங்­களில் மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­வர்களில் 90 வீத­மானோர் முன்னர் குற்றச் செயலில் ஈடு­ப­டா­தோ­ராவர். அவர்­களில் 70 வீத­மானோர் கிரா­ம­வா­சிகள் என்­ப­தையும் அறிய முடி­கி­றது. அத்­துடன் 73 வீத­மா­ன­வர்கள் எட்டாம் தரத்தை விட குறைந்த தரங்­களில் கல்வி பயின்­ற­வர்கள் என்­பதும் மற்­றுமோர் உண்­மை­யாகும். மரண தண்­ட­னைக்குப் பதி­லாக நீண்­ட­கால சிறைத் தண்­டை­னையில் வைத்­தி­ருக்கும் மாற்று வழி­யொன்று அமுலில் உள்­ளது. எந்த நீதி­மன்­றமும் நூற்­றுக்கு நூறு வீதம் சரி­யாக உள்­ள­தென்று கூறு­வ­தற்­கில்லை. அப்­பா­விகள் குற்றம் சுமத்­தப்­பட்டு தூக்­கி­லி­டப்­பட்­டுள்­ள­மையும் அபூர்வ நிகழ்­வல்ல. வழக்­கு­க­ளுக்குச் செலவு செய்ய இய­லாத, திற­மை­வாய்ந்த வழக்­கு­ரை­ஞர்­களை அமர்த்த வச­தி­யில்­லாத மக்­களே மரண தண்­டனைப் பிடி­யி­லி­ருந்து மீள முடி­யாது அகப்­பட்டுக் கொள்­கின்­றனர்.
இப்­போது ஜனா­தி­பதி சிறி­சேன தூக்­கி­லி­டு­வதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதனை அர­சியல் சந்­தோ­சத்­திற்­கான ஆட்­டத்தின் இறுதிச் சுற்­றுக்குத் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறார். அதுவும் மேற்­படி எதுவும் அறி­யாத அஞ்­ஞான அர­சி­யல்­வா­தி­யா­கவே தன்­பி­டியைப் பற்­றிப்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

அவரை ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யி­ல­மர்த்­திய சகல அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புக்கள் யாவும் இவரின் இந்த அஞ்­ஞான தீர்­மா­னத்தை எதிர்த்து நிற்­கின்­றன. எதிர்க்­கட்­சியும் எதிர்க்­கி­றது. உலக மனித உரி­மைகள் சமூ­கமும் எதிர்ப்பைத் தெரி­விக்­கி­றது.

சகல துறை­க­ளிலும் இவர் புரிந்­துள்ள அட்­டூ­ழி­யங்கள், காட்­டிக்­கொ­டுப்­புக்­களே இறுதியாக வரலாற்றில் பதியப்படப் போகிறது.
ஜனாதிபதி சிறிசேன உங்களால் இதுவரையும் இழைக்கப்பட்டுள்ள அகௌரவம், அஞ்ஞானம், தூரநோக்கற்ற அரசியல் போன்ற சாகசங்கள் இத்துடன் சமாதியாகட்டும்.

அட்டையைத் தூக்கி தாமரை இலையில் வைத்தாலும் அது சேற்றுக்கே சென்றுவிடும் என்றொரு கூற்றுள்ளது. அதுபோல சிறிசேன சேற்றுக்கே போகட்டும். சேற்றிலே இறங்கட்டும்.

அந்த தூக்கிலிடப்பட்டு மரணித்த மனிதனைப் போன்று உங்களுக்கும் எந்தத்தேர்வும் இல்லை. அம்மனிதன் கௌரவச் செயலாக இறுதியில் அதற்கே முகம் கொடுத்தார். உங்களால் இப்போதே இயலாமல் போயுள்ளது. நீங்கள் இல்லாமலாக்கியவையும் இல்லாமல் ஆக்கச் செய்தவையும் எத்தகைய அபூர்வ வரலாற்று வாய்ப்புக்கள் என்பதை நீங்கள் சும்மா சிந்தித்துப்பாருங்கள். கெட்ட கனவுகள் நீங்கள் காண்கிறீர்கள். மரண மகிழ்ச்சியிலாவது இறுதி ஆட்டத்தை அனுபவியுங்கள். போங்கள், அரசியல் நரகலோகத்திற்கே நடைபயிலுங்கள்.

சிங்களத்தில்:
சுனந்த தேசப்பிரிய
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

நன்றி: ராவய வார இதழ்

Leave A Reply

Your email address will not be published.