குர்பான் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் நிறைவேற்ற வேண்டியவை பல உள்ளன

அஷ்ஷெய்க் யூசுப் முப்தி

0 1,451

குர்பான் கொடுக்­கப்­பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய விட­யங்கள் பல உள்­ளன. முதலில் அவை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரி­வித்தார். குர்பான் கடமை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நமது சமூ­கத்தில் இன்று பலர் ஹஜ்­ஜுக்கு மேல் ஹஜ் , உம்­ரா­வுக்கு மேல் உம்ரா என்று செய்து கொண்டே இருக்­கி­றார்கள். அதே போல்தான் இப்­போது குர்­பானும் கொடுக்­கி­றார்கள். இன்று வட்டி வாங்­கி­ய­வர்கள், கட­னா­ளிகள், சீதனம் வாங்­கி­ய­வர்கள் என்று எந்­த­வித வித்­தி­யா­சமும் இன்றி அனை­வரும் குர்பான் கொடுக்­கி­றார்கள்.

அளவை நிறு­வை­களில் குறை செய்து சம்­பா­தித்­த­வர்கள், அனா­தை­களின் சொத்­துக்­களை ஏமாற்றி சம்­பா­தித்­த­வர்கள், மாறு­பாடு செய்து சம்­பா­தித்­த­வர்கள், கள­வா­டி­ய­வர்கள் என்று வித­ிவி­லக்­கில்­லாமல் குர்பான் கொடுக்­கி­றார்கள்.

ஒருவர் சீதனம் வாங்­கி­யி­ருந்தால் அவர் குர்பான் கொடுக்­காமல் வாங்­கிய பணத்தை தனது மனை­வி­யிடம் திருப்பிக் கொடுத்து கடனைக் குறைத்துக் கொள்­வதே சிறந்­தது. ஒரு­வ­ரு­டைய மனை­வியின் நகை வங்­கியில் அடகு வைக்­கப்­பட்­டி­ருக்கும் பட்­சத்தில் அவர் குர்பான் கொடுக்­காமல் அந்தக் கட­னுக்கு முடிவு கட்­டு­வது சிறந்­த­தாகும். குடும்­பத்தில் ஒரு­வ­ருக்கு மருத்­துவ சிகிச்­சைக்­காக பணம் தேவைப்­படும் பட்­சத்தில் அவ­ருக்கு குர்பான் கட்­டா­ய­மில்லை. இது மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும். முதன்­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய விட­யங்கள் முதன்மைப் படுத்­தப்­பட வேண்டும்.

இன்று மனி­தர்கள் அதி­க­மாக விழித்து விட்­டார்கள். இந்த விழிப்பு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. ஒருவர் குர்பான் கொடுப்­ப­தற்கு முன்னர் தன்­னு­டைய கட­மைகள் அனைத்­தையும் முழு­மை­யாக பூர்த்தி செய்து விட்­டேனா என்­பது பற்றி சிந்­தித்துப் பார்க்க வேண்டும். மின்­சா­ரப்­பட்­டியல், தண்ணீர்ப் பட்­டியல், தொலை­பேசி பட்­டியல் என்­ப­வற்றை முறை­யாக பூர்த்தி செய்ய வேண்டும்.

வங்­கி­களில் வீடு வாங்க, வாகனம் வாங்­க­வென தவணை முறைக்­கடன் பாக்­கி­யி­ருந்தால் அவற்­றையும் செலுத்தி முடிக்க வேண்டும். கடன் இருக்கும் போது அதை செலுத்­தாமல் குர்பான் கொடுப்­பது ஒரு­வ­ருக்கு கடமை கிடை­யாது.
இப்­ப­டி­யெல்லாம் சட்­ட­திட்­டங்கள் இருந்தால் குர்பான் என்ற ஒன்றே இல்­லாமல் போவ­தற்கு வாய்ப்பு இருக்­கி­றது என்று பலரும் எண்­ணலாம். அதில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. ஏனென்றால் இப்­படி நிறை­வேற்­றப்­ப­டாத குறை­களை வைத்­துக்­கொண்டு நிறை­வேற்­றப்­படும் குர்­பானின் பக்கம் அல்லாஹ் தேவை­யற்­றவன். இப்­ப­டிப்­பட்ட ஒரு குர்­பானை அல்லாஹ் எங்­க­ளிடம் இருந்து எதிர்­பார்க்­கவும் இல்லை. இது வீணாக எங்­களை நாங்­களே கஷ்டப்­ப­டுத்திக் கொள்ளும் ஒரு விட­ய­மாகும்.

குர்பான் கொடுக்­கப்­பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய விட­யங்கள் பல உள்ளன. முதலில் அவை நிறைவேற்றப்பட வேண்டும். கடன் நிறைவேற்றப்பட வேண்டும். தௌபா செய்ய வேண்டும். எடுத்த சீதனத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அனாதைகளின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருந்தால் அவை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.