அமைச்சுப் பதவிகளை ஏற்பதா? இல்லையா?

முஸ்லிம் எம்.பி.க்கள் நாளை பேச்சு

0 582

அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மீண்டும் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நாளை மாலை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் ஒன்று கூட­வுள்­ளனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரரின் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தின்­போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் அப்­பாவி முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டனர். இந்­நி­லையில் முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டனர்.

நாளை நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் சில அமைப்­புகள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுகள், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள திருத்­தங்கள், அநா­வ­சிய கைதுகள் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரி­வித்தார்.

இந்தக் கூட்­டத்­தின்­போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பொறுப்­பு­களை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பிலும் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
இரா­ஜி­னாமா செய்து கொண்ட 4 அமைச்­சர்கள், 4 இரா­ஜாங்க அமைச்­சர்கள், ஒரு பிர­தி­ய­மைச்­சர்­களில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹசீமும், எம்.எச்.ஏ. ஹலீமும் தங்களது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.