வரலாற்றை அறியா (பெளத்த) சமூகம் அழிவிற் சேரும்

0 1,063

இது ஒரு தத்­து­வார்த்தம் மிக்க வார்த்­தை­யாகும். இதனைக் கருத்­திற்­கொண்டு சிந்­திக்கும் எவரும் சம­கால நிகழ்­வு­களை வைத்து திருப்தி கொள்­ள­மாட்­டார்கள். அனைத்து உயிர்­களும் சுகமே வாழப் பிரார்த்­திக்கும் துற­விகள் சிலர் அப்­படித் தேவை­யில்லை என்று தம் செயற்­பா­டுகள் மூலம் நிரூ­பித்துக் கொண்­டுள்­ளனர்.

இந்த நாடு முப்­பது வருட யுத்­தத்தின் மூலம் அடைந்த பின்­ன­டை­வுகள், அழி­வுகள், மர­ணங்கள் யாவையும் மறந்து போர்க்கொடி தூக்­கு­கின்­றனர். பாவம் அந்தத் துற­விகள். அவர்கள் எந்தச் சமூ­கத்­துக்­கெ­தி­ராகக் குரல் எழுப்­பு­கி­றார்­களோ அந்த சமூ­க­மான முஸ்­லிம்கள் இந்த நாட்­டுக்குச் செய்த அனைத்­தையும் மறந்து பேசு­கின்­றார்கள், நடந்து கொள்­கி­றார்கள்.

இந்த ஸ்ரீலங்கா – இலங்கை நாடு சுதந்­திரம் அடைந்­தது முதல் முஸ்­லிம்கள் தம் தாய­கத்­துக்­காக ஒன்­றுமே செய்­யா­த­வர்கள் போல் அவர்­களை அநி­யா­ய­மாக சீண்டிக் கொண்­டி­ருக்கும் இந்தக் குழு இந்­நாட்­டுக்­குள்ளே பெரும்­பான்மை சமூ­கத்­துக்­கேனும் நலவை நாட­வில்லை என்­பதே தெளிவு.

நாடு சுதந்­திரமடைந்­தது முதல் ஆட்­சி­பீ­ட­மே­றிய அனைத்து அர­சாங்­கங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளது பிர­தி­நி­தி­க­ளாக இருந்து வந்­த­வர்­களை உண்­மை­யான சிங்­கள பௌத்­தர்கள் மறக்க மாட்­டார்கள்.

தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கிளம்­பி­யுள்ள வாலி­பர்கள் நாட்டில் நிகழ்ந்த யுத்­தத்தின் பின் பிறந்­த­வர்கள். அல்­லது யுத்தம் நடை­பெறும் வேளை சிறி­ய­வர்கள். யுத்தம் முடிந்­த­தோடு கையிலே கிடைத்த புத்­த­கங்கள் சிறு­பான்­மை­யினர் பற்­றிய வெறுப்பைத் தூண்டும் நூல்­களே! அதைப் படித்து விட்டு பிர­சாரம் செய்தோர் அந்­நூல்­களின் காரத்தைக் சடித்­த­வர்­களே!
இந்­நாட்டில் இருந்து வந்த அர­சாங்­கங்­களில் அங்கம் வகித்த எந்­த­வொரு முஸ்­லிமும் நாட்­டுக்குத் துரோகம் செய்­ய­வில்லை. சமூக நல­னுக்­காக கட்சி தாவி­யி­ருக்­கலாம்.

ஆனால் நாட்டைப் பாதா­ளத்திற் கொண்டு சேர்க்­க­வில்லை. அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள், சபா­நா­ய­கர்­க­ளாக இருந்­த­வர்கள், வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளாக இருந்­த­வர்கள், படை­ய­ணி­களில் சேர்ந்து உயி­ரையே தியாகம் செய்­த­வர்கள் இவர்கள் எல்லாம் இந்த நாட்­டுக்குத் துரோ­கமா செய்­தார்கள்? என்று கேட்கத் துணி­கி­றது.

டீ.பி. ஜாயா யார்? சிங்­கள பௌத்­தர்­களின் பாட­சா­லை­யா­கிய கொழும்பு ஆனந்தாக் கல்­லூ­ரியை முன்­னேற்­ற­வில்­லையா? பின்னர் அமைச்­ச­ர­வை­யிலும் வெளி­நாட்டுத் தூது­வ­ரா­கவும் இருந்து சிறப்­பான பணி­யாற்­ற­வில்­லையா? கலா­நிதி பதீ­யுத்தீன் மஹ்மூத் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்­சியின் ஸ்தாபக உறுப்­பி­ன­ராக, செய­லா­ள­ராக, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, தகவல் ஒலி­ப­ரப்பு அமைச்­ச­ராக, கல்வி அமைச்­ச­ராக இருந்து ஆற்­றிய சேவை­களை சுதந்­திரக் கட்­சியின் ஆரம்ப உறுப்­பி­னர்கள் தவிர அக்­கட்­சியில் ஒட்டிக் கொண்­டி­ருக்கும் ஒட்­டுண்ணிக் கட்­சிகள் அறி­யுமா? அன்னார் கல்வி அமைச்­ச­ராக இருந்து ஆற்­றிய பணி பற்றி இந்த ஒட்­டுண்­ணிகள் அறி­யுமா? அன்னார் அறி­மு­கப்­ப­டுத்­திய கல்விக் கொள்கை இந்த நாட்டு பெரும்­பான்­மைக்கு ஏதும் பாதிப்பை உண்டு பண்­ணி­யதா? அதற்கு முன்னர் சேவை செய்த சிங்­கள மரிக்கார் எனக் கூறப்­படும் தகவல் அமைச்சர் சாமா­னி­ய­மா­ன­வரா? தன் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு எல்.ரீ.ரீ.ஈ. கோட்­டை­யா­க­வி­ருந்த யாழ்ப்­பாணம் மாத்­தி­ர­மன்றி பல இடங்­க­ளுக்கும் சென்று வந்த வெளி­நாட்டு அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீத் ஒன்­றுமே செய்­ய­வில்­லையா? இது எமது நாடு என்ற சிந்­த­னை­யிலே புலி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைக்குச் சென்றார். இது பௌத்த நாடு எக்­கேடும் கெடட்டும் என்று வெளி­நாட்டில் தஞ்சம் புகுந்­தாரா?
தற்­போ­தைய அர­சாங்­கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக இருந்த போது குவைத், சவூதி அரே­பியா மற்றும் அரபு நாடு­க­ளி­லி­ருந்து இந்த நாட்­டுக்கு உத­வி­களைப் பெற்று எத்­தனை வீதி­களை, பாலங்­களைப் போட நட­வ­டிக்கை எடுத்தார். நீர் அணைத்­திட்­டங்கள், பெரும் பெரும் ஆஸ்­பத்­தி­ரிகள் என்­ப­வற்றைக் கட்டித் தரும் நாடுகள் முஸ்லிம் நாடுகள் அல்­லவா? சுனாமி அனர்த்­தத்தின் போது உடனே விமா­னங்கள் மூலம் உத­விகள் வந்­தி­றங்­கி­யது இந்த நாட்­டுக்­கல்­லவா? எத்­தனை வீட்டுத் திட்­டங்­களை செய்து முடித்­ததும், குறைந்த வட்­டியில் பெற்றோல் வழங்கிக் கொண்­டி­ருப்­பதும் முஸ்லிம் நாடுகள் அல்­லவா? செய் நன்றி கொள்­ளாமை மனித பண்­பா­குமா? கத்தார், ஈரான், மலே­சியா, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் செய்த செய்து வரு­கின்ற உத­விகள் மறக்­க­டிக்­கப்­பட்­ட­னவா? யுத்­தத்தின் போது நேர­டி­யா­கவே களத்தில் பங்கு கொண்ட முஸ்லிம் வீரர்கள், அந்­நா­டுகள் தந்­து­த­விய ஆயு­தங்கள், உயிர் தியா­கங்கள் மறந்து ஒழிக்­கப்­பட்­ட­னவா?
யாழ்ப்­பாணம், மன்­னா­ரி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட அக­திகள் நாடு பிள­வு­ப­டு­வதை ஏற்றுக் கொள்ள ஒத்­து­ழைக்­கா­மையால் தான் இன்றும் முகாம்­களில் முடங்கிக் கிடக்­கி­றார்கள் என்­பதை மறந்து அவர்­க­ளுக்­கு­ரிய இடத்தைப் பெற்றுக் கொள்ள தடை­யாக பொது­ப­ல­சே­னாக்கள் இருப்­பது மனி­தா­பி­மா­னமா?

ஒரு கணம் இந்த சேனாக்கள், முஸ்­லிம்­களும் தமி­ழ­ரோடு சேர்ந்து போரா­டி­யி­ருந்து அதற்குத் துணை­யாக அரபு முஸ்லிம் நாடு­களும் துணை நின்­றி­ருந்தால் எப்­ப­டி­யி­ருந்­தி­ருக்கும் என்­றா­வது சிந்­திக்கக் கூடாதா?

காத்­தான்­குடிப் பள்­ளியில் முஸ்­லிம்கள் 103 பேர் கொலை செய்­யப்­பட்­டார்கள். அவர்­களில் ஒரு ஹாபிழ் மற்றும் இரண்டு மௌல­விமார் கொலை­யுண்­டார்கள். மேலும், குருக்கள் மடத்தில் ஹாஜி­களும், அவர்­களை அழைத்து வந்­த­வர்­க­ளு­மாக 83 பேர் கொலை செய்­யப்­பட்­டனர்.

அது­மட்­டு­மல்­லாமல், ஏறா­வூரில் 160 பேர், சம்­மாந்­து­றையில் 49 பேர் என்று கொலை செய்­யப்­பட்­ட­வர்­களில் பொது­மக்­களும், முஸ்லிம் பொலி­ஸாரும் அடங்­குவர் என்­ப­தையும் லாபிர், முத்­தலிப் போன்ற முஸ்லிம் தள­ப­தி­களும் அப்துல் மஜீத், மஃரூப் போன்ற அமைச்­சர்­களும் ஹபீப் முஹம்மத், மக்பூல் போன்ற மாவட்ட அர­சாங்கச் செய­லா­ளர்­களும் அநி­யா­ய­மாகக் கொலை செய்­யப்­பட்­டதும் இந்த சிங்­கள துவீ­பத்­தி­றகு நன்­றி­யோடு நடந்து கொண்­ட­மைக்குக் கிடைத்த பரிசு என்­பதை மனச்­சாட்­சி­யுள்ளோர் மறுப்­பார்­களா? இப்­படி வர­லாற்றை இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

ஒரு காலத்தில் இலங்­கை­யி­லி­ருந்து வாச­னைத்­தி­ர­வி­யங்கள், அரிசி, யானை என்­பன ஏற்­று­மதி செய்­த­தாக வர­லாறில் படித்­தி­ருக்­கிறோம். ஆனால் இப்­போது அந்தப் பூமிகள் காடாக மாறி­விட்­டன. விவ­சாயம் செய்தோர் அகதி வாழ்வைக் கடத்­து­கின்­றனர். பூமிகள் மீள­ளிக்­கப்­ப­ட­வில்லை. நஷ்டம் யாருக்­கென்று நாம் சிந்­திக்­க­லா­காதா?

பிந்­திய நாட்­களில் நடந்து முடிந்த வன்­செ­யல்­களின் மூலம் ஏற்­பட்ட சேதங்கள் மூலம் நம் தேசம் அடைந்த நஷ்டம் எவ்­வ­ளவு என்று நாம் பார்க்­க­வில்­லையே. தர்கா நகர், அம்­பாறை, திகன, குரு­நாகல், மினு­வாங்­கொடை போன்ற இடங்­களில் வன்­செ­யல்­களில் ஈடு­பட்டோர் நிர­ப­ரா­தி­யா­யினர். நஷ்­டஈட்டை அர­சாங்­கமோ பொது­மக்­களோ கொடுத்து உத­வினர். எவ்­வ­ளவு குறு­கிய சிந்­த­னை­யோடு வன்­செ­யலில் ஈடு­பட்டோர் செயற்­பட்­டுள்­ளனர் என்று பாருங்கள். சேதத்­துக்­குள்­ளான கடைகள், தொழிற்­சா­லை­களில் பணி­யாட்­க­ளாக இருந்­த­வர்கள் தம் சிங்­கள மக்கள் அல்­லவா? ஒரே தேசம், ஒரே சட்டம் வேண்டும் எனக் குர­லெ­ழுப்­புவோர் இந்த நஷ்­டங்­களைப் பற்றி ஒரு கணம் சிந்­திப்­பார்­களா? முஸ்லிம் சமூ­கத்­த­வ­ருக்கு நஷ்டம் ஏற்­ப­டுத்­தவே களத்தில் குதித்­தார்கள். இறு­தி­யாக, தம் சமூ­கத்தைச் சேர்ந்த எத்­தனை இளைஞர், யுவ­தியர் தொழி­லின்றி வீட­டங்­கி­விட்­டனர் எனப் பார்க்­க­வில்லை. அந்தோ பரி­தாபம்!

ஒரு சிறு­பான்­மை­யாக இருந்தும் கூட முஸ்லிம் சமூகம் தாம் பிறந்த இடத்­துக்கு நாட்டுப் பற்­றோடு நடப்­பதை சமயக் கட­னாகக் கருதினர். இந்த விடயங்கள் எல்லாம் இளவயதினரான பொதுபலசேனாவினருக்கோ துவேச உணர்வு கொண்ட அரசியல் கட்சியில் உள்ளோருக்கோ தெரியாது. இதை அறிந்தவர்கள் மகா சங்கத்தினர் மாத்திரமே. அவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களோடு அந்நியோன்யமாக சகவாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்களது வழிகாட்டல் சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காகும். பழைய வரலாறு தெரியாது அடாவடித்தனம் மூலம் சகலரையும் அடக்கியாள முயலும் குழுவினர் நம்நாட்டில் இருந்து வந்த சமூக நல்லிணக்கம், சகவாழ்வு என்பதை பழுதடையச் செய்யாது பார்த்துக் கொள்வது பொறுப்பு வாய்ந்தோரின் கடமையாகும். அப்படியின்றேல் வரலாறு அறியாத சமூகத்தவரின் வளர்ச்சி எம்மை அழிவுக்கே இட்டுச் செல்லும்.

அபூ முஆத் அஹ்மத் முபாறக்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.