2018 சாதாரண தர பரீட்சை: கருத்தரங்குகளுக்கு இன்று முதல் தடை

0 789
  • எம்.ஆர்.எம்.வஸீம் 

கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யுடன் தொடர்­பு­டைய அனைத்து முன்­னோடிப் பரீட்­சைகள், மேல­திக வகுப்­புகள், கருத்­த­ரங்­குகள் மற்றும் பரீட்சை தொடர்­பான வினாப்­பத்­தி­ரங்கள் அச்­சி­டுதல் என்­ப­ன­வற்­றிற்கு இன்று நள்­ளி­ரவு முதல் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இந்த காலப்­ப­கு­தியில் பரீட்­சை­யுடன் தொடர்­பு­டைய விட­யங்­களை கையே­டு­க­ளாக விநி­யோ­கித்தல், அச்சு மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் ஊடாக விளம்­ப­ரப்­ப­டுத்தல் மற்றும் அவ்­வா­றான ஆவ­ணங்­களை அருகில் வைத்­தி­ருத்தல் போன்ற விட­யங்­களும் பரீட்சை நிறை­வ­டையும் எதிர்­வரும் 12 ஆம் திகதி வரை தடை­செய்­யப்­ப­டுள்­ள­தாக  பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.

இந்த விதி­மு­றையை மீறுவோர் யாராக இருந்­தாலும் அவர்கள் பரீட்­சைகள் சட்­டத்தின் பிர­காரம் குற்­ற­வா­ளி­யாகக் கரு­தப்­ப­டு­வார்கள். அத்­துடன் அவர்­க­ளுக்­கெ­தி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

எனவே, யாரா­வது இந்த தடையை மீறி­செ­யற்­ப­டு­வதை கண்டால் உட­ன­டி­யாக அரு­கி­லி­ருக்கும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விக்­க­மு­டியும். அல்­லது பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் 1911 என்ற துரித தொலை­பேசி இலக்­கத்­திற்கோ பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­க­மான 119 என்ற இலக்­கத்­துக்கோ அறி­விக்க முடி­யு­மென இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தகதி முதல் 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.